ஆடையில்லாமல் நில்லுங்க.. பெங்களூர் இளம் பெண் வக்கீலை எப்படி எல்லாம் ஏமாற்றி இருக்காங்க பாருங்க
பெங்களூர்: பெங்களூர் நகரைச் சேர்ந்த 29 வயது பெண் வக்கீலை, போதைப்பொருள் கடத்தியதாக கூறி சிபிஐ பெயரில் மிரட்டப்பட்டுள்ளார். மேலும் அந்த பெண் வக்கீலை அந்தரங்க வீடியோ எடுத்து 14.5 லட்சத்தை பறித்துள்ளார்கள் மர்ம நபர்கள். அவர்களை பெங்களூர் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
உங்களது பெயரில் பார்சல் வந்துள்ளது. அந்த பார்சலில் போதைப்பொருள் இருக்கிறது என்று கூறி மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் நாடு முழுவதும் அடிக்கடி கைவரிசை காட்டி வருகிறது. சிபிஐ மற்றும் சுங்கத்துறை மற்றும் போலீஸ் என்ற பெயரில் மிரட்டி பெண்களை நிர்வாணப்படுத்தி ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள்.. ஆண்களாக இருந்தால், அவர்களை அச்சுறுத்தி பணம் பறிக்கிறார்கள்.

அந்த வகையில் பெங்களூரில் வசித்துவரும் 29 வயது பெண் வக்கீலை செல்போனில் மர்ம நபர் ஒருவர் அழைத்துள்ளார். அதில் பேசியவர் மும்பையில் உள்ள கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறியிருக்கிறார்... மேலும் அவர் கூறும் போது, உங்கள் பெயரில் தாய்லாந்து நாட்டுக்கு அனுப்பப்பட்ட பார்சல் திரும்பி வந்திருக்கிறது. அந்த பார்சலில் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் இருக்கிறது. அதுபற்றி மும்பை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக மும்பை போலீசார் உங்களை தொடர்பு கொண்டு பேசுவார்கள் என்று மிரட்டி உள்ளார்.
கூரியரில் இருந்து ஒருவர் அப்படி பேசிய சில நிமிடங்களில், மும்பை போலீசார் என கூறி மற்றொரு நபர், இளம் பண் வக்கீலிடம் பேசியுள்ளார்.
அவர் பெண் வக்கீலிடம் பேசும் போது, இந்த வழக்கு மிக சிக்கலானது.. சி.பி.ஐ. மற்றும் சுங்கத்துறை விசாரணைக்கு மாற்றி உள்ளோம். சிபிஐ அதிகாரிகள் பேசுவார்கள் என்று மிரட்டி உள்ளார்.
இதனால் யோசிக்கக்கூட முடியாமல் பயந்து போய் இருந்து அந்த பெண் வக்கீலுக்கு , சி.பி.ஐ. அதிகாரி அபிஷேக் சவுகான் பேசுவதாக கூறி மற்றொரு நபர், பெண் வக்கீலை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அப்போது அவர், இந்த வழக்கின் பின்னணியில் அரசியல் பிரமுகர்கள், பிரபல கடத்தல்காரர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறோம்.. இதுபற்றி உங்களிடம் தீவிரமாக விசாரணை நடத்த வேண்டியது உள்ளது என கூறியுள்ளார்.
பின்னர் திடீரென செல்போனில் வீடியோவை ஆன் செய்து வைக்கும்படி கூறிய அவர், பெண் வக்கீலை கட்டிலில் படுத்து கொள்ளும்படியும் கூறினாராம். அதன்படியே பெண் வக்கீலும் பயந்து போய் செய்திருக்கிறார். தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரி என கூறி மற்றொரு நபர் பெண் வக்கீலை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்..
பின்னர் நீங்கள் போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் கடத்தியது குறித்து பரிசீலிக்க செல்போனில் வீடியோவை ஆன் செய்து நிர்வாணமாக போஸ் கொடுக்க வேண்டும் என்று மிரட்டலுடன் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அதை பற்றி சந்தேகப்படாத அந்த பெண் வக்கீல், நிர்வாணமாக வீடியோ காலில் வந்தார். அதனை அவர்கள் வீடியோ எடுத்து கொண்டனர். அதன்பின்னர், நிர்வாண வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடப் போவதாகவும், அவ்வாறு வெளியிடாமல் இருக்க பணம் கொடுக்கும்படியும் பெண் வக்கீலை அந்த கும்பல் மிரட்ட தொடங்கி உள்ளார்கள்..
இதனால் பயந்து போன பெண் வக்கீல், குறிப்பிட்ட இடைவெளியில் ரூ.14½ லட்சம் வரை மர்மநபர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி இருக்கிறார். அந்த நபர்கள் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியபடி இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த அவர் காவல்துறையில் விசாரித்த போது, மும்பை போலீஸ், சி.பி.ஐ, சுங்கத்துறை அதிகாரிகள் என கூறி மர்மநபர்கள் தன்னை மிரட்டி பணம் பறித்ததை கண்டுபிடித்தார்.
இதையடுத்து, நடந்த சம்பவங்கள் குறித்து பெங்களூரு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தீவிரமாக தேடிவருகிறார்கள்.












Click it and Unblock the Notifications