ஒன்னா இருந்த போட்டோவை உன் மனைவிகிட்ட காட்டவா? பிளாக்மெயில் செய்த முன்னாள் காதலியை கொலை செய்த இளைஞர்
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் நர்ஸிங் மாணவியின் தலையை துண்டித்து அந்த தலையுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த முன்னாள் காதலர் கைது செய்யப்பட்டார்.
கர்நாடகா மாநிலம் விஜயநகர் மாவட்டம் கூடலகி தாலுக்கா கானஒசஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் போஜராஜா (26). இவர் நிர்மலா (23) என்பவரை காதலித்து வந்துள்ளார்.
நிர்மலா ஓசப்பேட்டையில் உள்ள நர்சிங் கல்லூரி ஒன்றில் 3ஆவது ஆண்டு படித்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவருடனான காதலை போஜராஜா முறித்துக் கொண்டுவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

நிர்மலா
இதை அறிந்த நிர்மலா "என்னுடன் நெருக்கமாக பழகிவிட்டு வேறு பெண்ணை எப்படி திருமணம் செய்தாய், உன்னை நிம்மதியாக இருக்க விட மாட்டேன். நீயும் நானும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், வீடியோக்களை உன் மனைவியிடம் கொடுக்க போகிறேன்" என போஜராஜாவிடம் வாக்குவாதம் செய்து பிளாக்மெயில் செய்ததாக தெரிகிறது.

மனைவி
இதனால் நிர்மலா எப்போது தனது மனைவியிடம் புகைப்படங்களை கொடுத்து அதனால் நம் வாழ்க்கை சிக்கலாகிவிடுமோ என்ற அச்சத்திலேயே போஜராஜா பொழுதை கழித்ததாக தெரிகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு கல்லூரி விடுதியில் இருந்த நிர்மலா சொந்த ஊருக்கு வந்திருப்பதாக போஜராஜாவுக்கு தகவல் தெரிந்தது.

பிளாக்மெயில்
இதனால் போஜராஜாவுக்கு மேலும் பயம் அதிகரித்தது. எனவே நம் வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள நிர்மலாவை கொலை செய்ய வேண்டும் என போஜராஜா திட்டமிட்டதாக தெரிகிறது. இதனால் அரிவாளை வாங்கிக் கொண்டு நிர்மலாவின் வீட்டிற்கு சென்றார். அப்போது கட்டிலில் நிர்மலா படுத்துக் கொண்டிருந்தார்.

தலையை வெட்டிய இளைஞர்
தன் தூக்கத்தை கெடுத்துவிட்டு நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்த நிர்மலாவின் கழுத்தை மறைத்து வைத்திருந்த அரிவாளால் போஜராஜா வெட்டினார். இதையடுத்து அரிவாளை அங்கேயே போட்டுவிட்டு ரத்தம் சொட்ட சொட்ட அந்த தலையை எடுத்துக் கொண்டு கானஓசஹள்ளி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

போலீஸார் கைது
இதையடுத்து போலீஸார் அதிர்ச்சி அடைந்து விசாரித்ததில் நடந்தவற்றை கூறினார். பின்னர் போஜராஜாவை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து நிர்மலா வீட்டில் இருந்த தலையில்லாத உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
-
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக்












Click it and Unblock the Notifications