சென்னையில் இருந்து கர்நாடகா சென்றால் முகாமில் 3 நாட்கள்- வீட்டில் 11 நாட்கள் தனிமை-எடியூரப்பா அதிரடி
பெங்களூரு: கொரோனா அதிகம் பாதித்திருக்கும் சென்னை மற்றும் டெல்லியில் இருந்து கர்நாடகாவுக்கு சென்றால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம். இதனையடுத்து தமிழகம், டெல்லியில் கொரோனா உச்சகட்டமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் கர்நாடகாவில் கொரோனா பரவுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா அதிகம் பாதித்த சென்னை, டெல்லியில் இருந்து கர்நாடகா வருவோருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சென்னை, டெல்லியில் இருந்து கர்நாடகா வருவோர் முதல் 3 நாட்கள் அரசின் முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவர்; பின்னர் 11 நாட்கள் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவர் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

7 நாட்கள் தனிமை
அதேநேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கர்நாடகாவுக்கு வருவோருக்கு அரசு முகாம்களில் 7 நாட்களும் வீடுகளில் 7 நாட்களும் தனிமைப்படுத்தப்படுவர்.
இது தொடர்பாக முதல்வர் எடியூரப்பா கூறுகையில், பிற மாநிலங்களில் இருந்து கர்நாடகா திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்றார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம












Click it and Unblock the Notifications