37 வயது கவிதா, 22 வயது பாஸ்கர் திருமணம்.. உடனே மூச்சிரைக்க ஓடிவந்த புதுமண தம்பதி.. பெங்களூர் ஷாக்
பெங்களூர்: காதலுக்கு வயதில்லை என்பதை மெய்ப்பிக்கும் விதமாகவும், அதே சமயம் குடும்ப உறவுகளுக்கு இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் விதமாகவும் பெங்களூருவில் ஒரு வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. 37 வயதுடைய பெண் ஒருவர், தன்னைவிட 15 வயது குறைந்த 22 வயது இளைஞரைத் திருமணம் செய்துள்ளார்.. இந்த திருமணத்துக்கு பிறகு நடந்த திருப்பங்கள்தான், சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தில் பெரும் அதிர்வலையை உண்டுபண்ணி உள்ளது.
பெங்களூரு சல்லகட்டா பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (37). இவருக்கு திருமணமாகிவிட்டது.. ஆனால், கணவர் இறந்து 8 வருடங்களாகிறது.. தன்னுடைய 14 வயது மகனுடன்,தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார்.. அந்த பகுதியிலேயே ஒரு கம்பெனியில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார்..

மேலும், அங்குள்ள பண்டே மகாலட்சுமி கோயிலுக்கும் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் கவிதா. அப்போதுதான் மைசூரு ரம்மனஹள்ளியைச் சேர்ந்த பாஸ்கர் (22) என்பவருடன் கவிதாவுக்கு அறிமுகம் கிடைத்தது. பாஸ்கர் பெங்களூருவில் உள்ள தனது அத்தையின் வீட்டில் தங்கி ஆட்டோ மற்றும் டெம்போ டிராவலர் டிரைவராக பணியாற்றி வந்தார்.
கோயில் சந்திப்பில் மலர்ந்த காதல்
கோயில் சந்திப்பில் தொடங்கிய இவர்களது நட்பு, நாளடைவில் காதலாக மலர்ந்தது. கடந்த ஒரு ஆண்டாக ரகசியமாக தொடர்ந்த இவர்களது காதலுக்கு வயது ஒரு தடையாகத் தெரியவில்லை.
ஆனால், கவிதாவின் வீட்டில் அவருக்கு வேறொரு நபருடன் மறுமணம் செய்து வைக்கத் திட்டமிட்டிருந்தனர். தனது காதலுக்கு குடும்பத்தினர் சம்மதிக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்த கவிதா, தனது 14 வயது மகனை தவிக்க விட்டுவிட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஸ்கருடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
மூச்சிரைக்க ஓடிவந்த தம்பதி
இதனிடையே, கவிதா மாயமானது குறித்து அவரது அப்பா, காவல் நிலையத்தில் கடத்தல் புகார் ஒன்றை அளித்தார். ஆனால், அதற்குள் கவிதாவும் பாஸ்கரும் மைசூருவுக்கு சென்று அங்குள்ள ஒண்டிகொப்பலு வெங்கடேஸ்வரர் கோயிலில் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணச் செய்தி அறிந்த கவிதாவின் உறவினர்கள் கடும் ஆத்திரமடைந்தனர். குறிப்பாக, கவிதாவின் மைத்துனர் தம்பதியினரை தீர்த்து கட்டிவிடுவதாகக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்த இந்த புதுமணத் தம்பதிகள், பாதுகாப்பு கோரி மைசூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மூச்சிரைக்க ஓடி வந்தனர்.
14 வயது மகனின் நிலைமை?
தங்களுக்கு நேர்ந்த அச்சுறுத்தல்களை விவரித்த இருவரும், பாதுகாப்பு வழங்கக் கோரி மனு அளித்தனர். 14 வயது மகனைப் பிரிந்து, பெரும் வயது இடைவெளி கொண்ட இளைஞரை திருமணம் செய்துள்ள கவிதாவின் செயல் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.. அதேசமயம். சட்டப்படி இருவரும் மேஜர்கள் என்பதால் காவல்துறையினர் இந்த விவகாரத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.
குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி இணைந்த இந்த ஜோடி, தற்போது தங்களுக்குக் கிடைக்கப்போகும் பாதுகாப்பை எதிர்பார்த்து மைசூருவில் தங்கியுள்ளனர். ஆனால், அந்த 14 வயது மகன் நிலைமை???
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications