இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை
பெங்களூர்: உலகின் பல்வேறு நாடுகளில் இளைஞர்கள் பற்றாக்குறை உள்ளது. ஆனால் இந்தியாவில் தான் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவ்வளவு பெரிய இளைஞர் பட்டாளம் இருந்தும், அவர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு இல்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. பெங்களூருவைச் சேர்ந்த அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள 'இந்தியாவில் வேலைவாய்ப்பு நிலை 2024' அறிக்கையில், இந்திய பட்டதாரிகளின் தற்போதைய நிலையை ஒரு 'வேலைவாய்ப்பு நெருக்கடி' என்று புள்ளி விவரங்களில் கூறியுள்ளது.
ஏட்டுச்சுரக்காய் கல்விக்கு உதவாது என்பது பழமொழி... ஏனெனில் வெறும் பட்டப்படிப்பு முடித்தால் மட்டும் வேலைவாய்ப்பை உறுதி செய்ய முடியாது. வேலைக்கு ஏற்ற கல்வி தான் வேண்டும். எனவே கல்வி முறையில் மாற்றங்களையும், தொழில்முறை திறன் மேம்பாட்டுத் திட்டங்களையும் அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.. மத்திய அரசும், மாநில அரசும் திறன் மேம்பாட்டு திட்டங்களை இலவசமாக செய்து வருகின்றன.

இதில் போய் திறனை வளர்த்துக் கொண்டு வேலைவாய்ப்பு பெற விண்ணப்பித்தால் எளிதாக வேலை கிடைக்கும். ஆனால் பலர் அதில் ஆர்வம் காட்டுவது இல்லை. ஏனெனில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு செல்லும் ஒருவர், கணினி சம்பந்தப்பட்ட பணி என்றால், அந்த வேலைக்கு உரிய தகுதி வேண்டும். அதேபோல் மெக்கானிக் என்ஜினியரிங் என்றால் , அந்த துறை சார்ந்த இன்டர்ஷிப் முடித்து அனுபவம் இருந்தால் தான் வேலை கிடைக்கும். வேலை தெரியாமல் படிப்பு மட்டும் வைத்து எந்த வேலையும் செய்ய முடியும். ஏனெனில் இந்தியாவில் தற்போது வேலையின்மை அதிகமாக உள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் இந்தியாவில் படித்து முடிக்கும் பட்டதாரிகள், இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் திண்டாடும் நிலைமையையும், இந்திய இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சந்தை கடந்த 40 ஆண்டுகளில் எப்படி மாறியுள்ளது என்பதையும் உலக நாடுகளுடன் ஒப்பிட்டு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்ட அந்த புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் 20 முதல் 24 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகளில் சுமார் 39 சதவீதம் பேர் வேலை இல்லாமல் இருந்து வருகிறார்களாம். இதேபோல், 25 வயது முதல் 29 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகளில் சுமார் 20 சதவீதம் பேர் வேலையின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2023-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் 6.30 கோடி பட்டதாரிகளில் 20 முதல் 29 வயதுக்குட்பட்ட சுமார் 1.10 கோடி பேர் வேலைவாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார்கள்.
அதேபோல் பட்டப்படிப்பு முடித்த ஓராண்டுக்குள் வெறும் 7 சதவீத ஆண்களுக்கு மட்டுமே நிரந்தர சம்பளம் கிடைக்கும் வேலை அமைந்திருப்பதாகவும், 'ஒயிட் காலர்' என்று கூறப்படும் உயர்தர அலுவலக வேலைகள் 3.7 சதவீத இளைஞர்களுக்கு மட்டுமே கிடைப்பதாகவும் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டதாரிகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஏதோ ஒரு வேலையில் சேர்ந்தாலும், அது தற்காலிகமானது அல்லது குறைந்த வருமானம் தரும் வேலைகளாக இருக்கிறதாம். அதேபோல் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலத்தில் உயர்கல்வி படிக்கும் இளம் ஆண்களின் எண்ணிக்கை 38 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக குறைந்துள்ளதாக அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் புள்ளி விவரத்தில் கூறியுள்ளது.
படிப்பை கைவிட்ட இளைஞர்களில் 72 சதவீதம் பேர், குடும்ப வருமானத்துக்காக படிப்பை பாதியில் நிறுத்துவதாக சொல்லப்பட்டிருக்கிறது. 2017-ல் இது 58 சதவீதமாக இருந்து என்றும், இப்போது 72 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கல்விக்கும், வேலைக்குமான இடைவெளி அதிகரிப்பதால் இந்த வேலைவாய்ப்பு கிடைப்பதும் கவலைக்கிடமாக மாறி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளத.
மற்ற நாடுகளுடன் இந்தியாவின் நிலைமையை ஒப்பிடுகையில், இந்தியாவில்தான் வேலைவாய்ப்பின்மை திண்டாட்டம் அதிகமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக 20 முதல் 24 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகளில் வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை 39 சதவீதமாக இருக்கும் நிலையில், மற்றநாடுகளில் 30 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கிறதாம்.
-
அதிகாலையில் வந்த மெயில்.. மீண்டும் வேலையை காட்டிய மெட்டா! ஊழியர்கள் கண்ணீர்! -
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. சென்னையில் மார்ச் 28ல் இண்டர்வியூ.. மிஸ் பண்ணாதீங்க -
IT Jobs: நாளை முதல் 2 நாள் இண்டர்வியூ.. சென்னை HCL நிறுவனத்தில் வேலை ரெடி.. சூப்பர் சான்ஸ் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு













Click it and Unblock the Notifications