பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வானம் தந்த தானம்... பெங்களூர் குடியிருப்பாளர்கள் சேர்ந்து செய்த செம வேலை.. !

Google Oneindia Tamil News

Recommended Video

    பெங்களூர் குடியிருப்பாளர்கள் சேர்ந்து செய்த செம வேலை!

    பெங்களூர்: ஒரு நாளில், ஒரு மணி நேரத்தில் பெய்த மழையில், ஆயிரக்கணக்கான லிட்டர் மழைநீரை சேமித்துள்ளனர் நகரத்து நண்பர்கள். அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.

    இயற்கையின் கொடைகளை, பயன்படுத்த தவறவிட்டு, விட்டு, செயற்கை மழை பெய்ய வைக்க முயற்சிப்பது, பல்வேறு விளைவுகளை உருவாக்கும் என கூறுகின்றனர், நீர் மேலாண்மை ஆய்வாளர்கள்.

    45000 litres of water captured by the rainwater harvesting system in Whitefield

    கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், குடிக்க தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அல்லாடி கொண்டிருப்பது, தொடர்கதையாகி உள்ளது. 500 அடிக்கு மேல் போர்வெல் போட்டால் தான் தண்ணீர் கிடைக்கும் என்ற அளவிற்கு நிலத்தடி நீர் குறைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, மழைநீர் சேமிப்பு திட்டத்தை அரசு செயல்படுத்தியது. தொடக்கத்தில், பெரும் அளவில் மழை நீர் சேமிக்கப்பட்டதால், நிலத்தடி நீர் மட்டம், உயர்ந்து இருந்தது. தண்ணீர் பஞ்சமும் சொல்லும் அளவிற்கு இல்லை.

    அதன்பின், மக்களிடம் விழிப்புணர்வு குறைந்ததால், மழைநீர் சேமிப்பு திட்டம் என்ற ஒன்றே அநேக மக்களின் மனதில் இருந்தும், வீட்டில் இருந்தும் மறைந்தன. இந்தநிலையில், வாட்டி வதைத்த வெயிலுக்கு இதமாக, நேற்று, பெங்களூரில் ஆலங்கட்டி மழை பெய்தது. மழையோடு, மண் வாசம் வீச மக்கள் மனம் குளிர்ந்தது.

    நகரங்களில், தண்ணீர் பிரச்சனை தலைவிரித்து ஆடிவரும் சூழலில், மழைநீர் சேமிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. நேற்று பெய்த மழையில் மட்டும், பெங்களூருவில் உள்ள ஒயிட்பீல்ட் பகுதியின் அடிக்குமாடி குடியிருப்பில், 45 ஆயிரம் லிட்டர் மழை நீர் சேமிக்கப்பட்டுள்ளதாக, சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர் சிலர்.

    இதே போல், மற்ற குடியிருப்புவாசிகளும் செய்தால், சுத்தமான, சுவையான குடிநீரை பெறலாம். இதனால், பெங்களூரின் தண்ணீர் துயரங்கள் மறைந்துவிடும் என்றும் அவர்கள் பகிர்ந்துள்ளனர். காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது போல், மழை பெய்யும் போதே பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது தான் இன்றைய காலகட்டத்தின் அவசியமாக உள்ளது.

    English summary
    An incredible 45000 litres of water captured from yesterday's shower by the rainwater harvesting system of The Greens in Whitefield
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X