திருடனுக்காக உயிரையே பணயம் வைத்த போலீஸ்.. இப்படியெல்லாமா ரிஸ்க் எடுப்பாங்க? சினிமாவே தோத்துடும்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை பிடிக்க பெங்களூரில் போலீஸ்காரர் ஒருவர் தனது உயிரையே பணயம் வைத்துள்ளார். பெங்களூரில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வரும் நிலையில் அந்த போலீஸ்காரருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. அப்படி என்ன செய்தார் அந்த போலீஸ்காரர்? வாங்க பார்க்கலாம்.

கர்நாடகாவின் துமகூரு மாவட்டம் கொரட்டகெரே போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதுபற்றி கொரட்டகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

bengaluru bangalore police

இந்த விசாரணையின்போது மஞ்சேஷ் என்ற 420 மஞ்சேஷ் என்ற ஹோட்டே மஞ்சா என்ற பெயர் கொண்ட நபர் தான் திருட்டில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. மேலும் அவர் மீது மொத்தம் 75 வழக்குகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது. மஞ்சேஷ் போலீசாரிடம் சிக்கவில்லை. அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

அப்போது தான் கொரட்டகெரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் தொட்டலிங்கய்யா என்பவருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைக்கிறது. அதாவது மஞ்சேஷ் பெங்களூரில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ்காரர் தொட்டலிங்கய்யா அவரை பிடிக்க பெங்களூர் வந்தார்.

"ஏய் என்ன மூக்கில் இருந்து ரத்தம் வருது".. ஷாக்கான குமாரசாமி! பெங்களூர் பிரஸ்மீட்டில் என்ன நடந்தது?


சம்பவத்தன்று சதாசிவநகர் போலீஸ் சந்திப்பு பகுதியில் சிக்னல் பகுதியில் மஞ்சேஷ் ஸ்கூட்டரில் வந்தார். அப்போது அங்கு சாதாரண உடை அணிந்து அங்கு நின்ற போலீஸ்காரர் தொட்டலிங்கய்யா அருகே சென்றார். அப்போது போலீஸ்காரர் என அறிந்த மஞ்சேஷ் வேகமாக ஸ்கூட்டரில் அங்கிருந்து எஸ்கேப் ஆக முயன்றார்.

மாயமான நெக்லஸ்.. பக்காவாக திருடி.. அபத்தமாக சிக்கிய பெங்களூர் வேலைக்கார அக்கா


இந்த வேளையில் போலீஸ்காரர் தொட்டலிங்கய்யா, மஞ்சேசை விடவில்லை. முதலில் மஞ்சேஷின் சட்டை காலரை பிடித்து கொண்டார். மஞ்சேஷ் ஸ்கூட்டரை ஓட்டி சென்றதால் அவரது சட்டையை பிடித்தபடி சாலையில் போலீஸ்காரர் தொட்டலிங்கய்யா ஓடினார். அதன்பிறகு சட்டையில் இருந்து கை வழுக்கிய நிலையில் தொட்டலிங்கய்யா, மஞ்சேஷின் காலை பிடித்தார். அப்போதும் மஞ்சேஷ் ஸ்கூட்டரை நிறுத்தாமல் ஓட்டி சென்றார். இதனால் தொட்டலிங்கய்யா ரோட்டில் விழுந்தார். அப்போது அவர் காலை பிடித்து இழுத்ததில் கட்டுப்பாட்டை இழந்த மஞ்சேஷ் சாலையில் விழுந்தார்.

இதையடுத்து அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட பெண் போலீஸ் உள்பட 2 பேர் ஓடிவந்தனர். மேலும் சாலையில் சென்றவர்கள் வந்து மஞ்சேசை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். மேலும் போலீஸ்காரர் தொட்டலிங்கய்யாவை அவர்கள் பத்திரமாக மீட்டனர். அதன்பிறகு தொட்டலிங்கய்யா, மஞ்சேசை கைது செய்து கொரட்டகெரே அழைத்து சென்றனர். இதற்கிடையே தான் உயிரை பணயம் வைத்து திருடன் மஞ்சேசை போலீஸ்காரர் தொட்டலிங்கய்யா பிடித்த காட்சிகள் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவிவருகிறது. வீடியோவை பார்க்கும் அனைவரும் போலீஸ்காரர் தொட்டலிங்கய்யாவை பாராட்டி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+