கர்நாடகா அமைச்சரவையில் மாற்றம்.. மல்லிகார்ஜூன் கார்கே மகனுக்கு முக்கிய துறை வழங்கல்.. என்ன தெரியுமா?
பெங்களூர்: கர்நாடகா அமைச்சரவையில் துறை ரீதியாக சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல்வராக உள்ள சித்தராமையா தன்னிடம் இருந்த முக்கிய துறையை மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவுக்கு விட்டு கொடுத்துள்ளார். இந்த துறையை பெறுவதில் சித்தராமையாவின் ஆதரவாளர் எம்பி பாட்டீல் மற்றும் பிரியங்க் கார்கே இடையே போட்டி நிலவிய நிலையில் பிரியங்க் கார்கேவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. கடந்த 20ம் தேதி முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் பதவியேற்றனர். மேலும் 8 பேர் அமைச்சர்களாக பதவி பிரமாணம் எடுத்து கொண்டனர்.

அதன்பிறகு புதிதாக 24 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். கர்நாடகா அமைச்சரவையில் முதல்வரோடு சேர்த்து மொத்தம் 34 பேர் அங்கம் வகிக்க முடியும் என்பதால் தற்போது அமைச்சரவை முழுவதுமாக நிரம்பி உள்ளது.
தற்போது கர்நாடகா அமைச்சர்களாக பரமேஷ்வரா, முனியப்பா, கே.ஜி.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜார்கோலி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது கான், எச்கே பாட்டீல், கிருஷ்ணபைரே கவுடா, செலுவராயசாமி கே வெங்கடேஷ், எச்சி மகாதேவப்பா, ஈஷ்வர் கண்ட்ரே, கியாத்தசந்திரா என் ராஜண்ணா, தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.
அதேபோல் சரணபசப்பா தர்சனாபூர், சிவானந்தா பாட்டீல், திம்மாப்பூர் ராமப்பா பாலப்பா, எஸ்எஸ் மல்லிகார்ஜூன், தங்கடகி சிவராஜ் சங்கப்பா, சரணபிரகஷ் ருத்ரப்பா பாட்டீல், மான்கால் வைத்யா, லட்சுமி ஹெப்பால்கள், ரகீம் கான், டி சுதாகர், சந்தேஷ் லாட், போஸ்ராஜூ, பிஎஸ் சுரேஷ், மது எம்சி சுதாகர், நாகேந்திரா, மது பங்காரப்பா செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் கர்நாடகா அமைச்சரவையில் துறை ரீதியாக சிறிய மாற்றத்தை முதல்வர் சித்தராமையா மேற்கொண்டுள்ளார். அதன்படி சித்தராமையா தன்னிடம் இருந்து தகவல் தொழில் நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு துறையை 2 பேருக்கு பிரித்து கொடுத்துள்ளார். சித்தராமையாவின் ஆதரவாளராக உள்ள எம்பி பட்டீலுக்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டு துறை வழங்கப்பட்டுள்ளது. இவர் தற்போது பெரிய மற்றும் நடுத்தர தொழில்துறையை நிர்வகித்து வரும் நிலையில் கூடுதலாக உள்கட்டமைப்பு மேம்பாட்டு துறை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவிடம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பத்துறையை சித்தராமையா வழங்கி உள்ளார். இவர் தற்போது கிராம மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராக உள்ள நிலையில் கூடுதலாக ஐடி மற்றும் பிடி துறை வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாகவே தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்ப துறையை பெறுவதில் எம்பி பாட்டீல் மற்றும் பிரியங்க் கார்கே ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரும் சமாதானம் ஆகாத நிலையில் அந்த துறையை சித்தராமையா தனது வசம் வைத்திருந்தார். இந்நிலையில் தான் தற்போது திடீர் மாற்றமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பத்துறை பிரியங்க் கார்கே வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2013 - 2018 வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் பிரியங்க் கார்கே தகவல் மற்றும் உயிரி தொழில்நுட்பத்துறையை நிர்வகித்து இருந்தார். தற்போது 2வது முறையாக அந்த துறை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தற்போது முதல்வர் சித்தராமையா வசம் நிதி, அமைச்சரவை விவகாரம், ஆட்சேர்ப்பு மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறை, உளவுத்துறை மற்றும் மற்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்யபடாத துறைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆன்லைனிலேயே தமிழ் கற்கலாம்.. வெளிமாநிலம் - வெளிநாட்டில் உள்ளோருக்கு சூப்பர் சான்ஸ்.. மிஸ் பண்ணாதீங்க -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications