Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூரில் கள்ளக்குறிச்சி காதல் தம்பதி.. மகளை பார்க்க போன தந்தை பார்த்த கோலம்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் ஞானபாரதி பகுதியில் வசித்து வந்த தர்மசீலன் என்பவருக்கு கள்ளக்குறிச்சி சொந்த ஊர் ஆகும். இவர் மஞ்சு என்ற பெண்ணை 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்திருக்கிறார். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காதல் மனைவியை தீர்த்துக்கட்டிவிட்டு இளைஞர் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். இந்த வழக்கை விசாரித்த போலீசாருக்கு பெரிய உண்மை தெரியவந்துள்ளது.

கணவன் மனைவி இடையே ஏற்படும் சண்டைக்கு பெரும்பாலான காரணம், நீ சொல்வதை நான் கேட்பதா.. அல்லது நான் சொல்வதை நீ கண்டிப்பாக கேட்க வேண்டும் என்பதாகவே இருக்கிறது. இருவரில் யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்து சென்றால் பிரச்சனை முடிந்துவிடுகிறது. மாறாக ஒருவரை ஒருவர் தன் சொல் படியே நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது பிரச்சனையில் முடிகிறது. பெரும்பாலான பிரச்சனைக்கு இதுவே காரணமாக இருக்கிறது. கணவன் வேலைக்கு போகக்கூடாது என்பார்.. மனைவி வேலைக்கு போவேன் என்று பிடிவாதமாக இருப்பார். மனைவி குடிக்க வேண்டாம் என்பார்.. ஆனால் கணவன் குடித்துவிட்டு தான் தினமும் வருவார். அம்மாவின் பேச்சை கேட்டு மனைவியை அடக்க நினைப்பது, அம்மாவின் பேச்சை கேட்டு கணவன் மற்றும் மாமியாரை தனது கட்டுப்பாட்டில் வர முயற்சிப்பதும் சில நேரங்களில் சிக்கலை ஏற்படுத்துகிறது. அதேநேரம் என்ன பிரச்சனை என்றாலும் பேசி தீர்க்க வேண்டும். மாறாக பேசி தீர்க்காமல் ஆத்திரத்தில் புத்தியை இழந்தால், ஒரு நிமிட தவறால் இரண்டு பேரின் வாழ்க்கையும் போய்விடும்.

Kallakurichi Bangalore

பெங்களூரு ஞானபாரதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட உல்லால் மெயின் ரோட்டில் பிரஸ் லே-அவுட்டில் 29 வயதாகும் தர்மசீலன் என்பவர் வசித்து வந்தார். இவரது சொந்த ஊர் தமிழ்நாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் பின்னலவாடி கிராமம் ஆகும். இவரும் மஞ்சுவும் (28) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 28-ந்தேதி கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மஞ்சுவை தர்மசீலன் 8 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்திருக்கிறாராம். பின்னர் வீட்டில் இருந்த மின்விசிறியில் அவரும் தூக்குப்போட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

இதுகுறித்து பெங்களூர் ஞானபாரதி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினார்கள். போலீசார் நடத்திய விசாரணையில், தர்மசீலன் முதலில் துபாயில் பெயிண்டராக வேலை செய்து வந்துள்ளார். பின்னா் அங்கு வேலையை விட்டுவிட்டு பெங்களூர் வந்த தர்மசீலன், மனைவியை அழைத்து கொண்டு தமிழ்நாட்டுக்கு சென்றார். கடந்த வாரம் தான் அவர்கள் பெங்களூருவுக்கு வந்திருந்தனர்.

மஞ்சு வேலைக்கு செல்வது தர்மசீலனுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்தாராம். சம்பவம் நடந்த அன்று, தர்ம சீலன் மது போதையில் வீட்டுக்கு வந்தாராம். வேலைக்கு செல்வது குறித்து மனைவி மஞ்சுவிடம் கேட்டு தகராறு செய்தாராம். இந்த தகராறு முற்றிய நிலையில், ஆத்திரத்தில் கத்தியை எடுத்து 8 முறை கொடூரமாக குத்தி மனைவி மஞ்சுவை தர்மசீலன் கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் தர்மசீலன் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டது தெரியவந்தது. மஞ்சுவின் தந்தை பெரியசாமி, தனது மகளை பார்க்க வந்தபோது தான் இந்த சம்பவம் தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து ஞானபாரதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+