2 தோழிகளை ஒரே மேடையில் திருமணம் செய்த கர்நாடகா இளைஞர்.. காரணத்தை கேட்டால் அசந்துபோவீங்க!
பெங்களூர்: கர்நாடகாவில் ஒரே மேடையில் தனது நீண்ட கால தோழிகள் 2 பேரை ஒரே மேடையில் இளைஞர் ஒருவர் திருமணம் செய்திருப்பது பேசும் பொருளாகி உள்ளது. இதுதொடர்பான போட்டோ, வீடியோக்கள் இணையதளங்களளில் வெளியாகி விவாதத்தை கிளப்பி உள்ளது. இந்நிலையில் தான் அவர்கள் யார்? இரு தோழிகளையும் அந்த வாலிபர் திருமணம் செய்து கொண்டதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
‛‛ஒரு மனைவி தன் கணவனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டு கொடுப்பார். ஆனால் எந்த காரணம் கொண்டும் தனது கணவனை இன்னொருவருக்கு விட்டு கொடுக்க மாட்டார்'' என்பது நம் நாட்டு பெண்களின் எண்ணமாக உள்ளது. இதனால் தான் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படும்போது மனைவி அதை சகித்து கொள்ள மாட்டார்.

அதுவரை தென்றலாக இருக்கும் மனைவி புயலாக மாறி தனது கணவனை அபகரிக்கும் பெண்ணை பந்தாடிய சம்பவங்கள் பல உண்டு. அதேபோல் நம் நாட்டில் மனைவி, கணவன் உயிரோடு இருக்கும்போது இன்னொரு ஆண், பெண்ணை திருமணம் செய்வது சட்டத்துக்கு புறம்பானது. ஆனால் கர்நாடகாவில் ஒருவர் தனது 2 தோழிகளை ஒரே மேடையில் திருமணம் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
அவரது பெயர் வாசீம் செய்க். வயது 25. இவருக்கு 2 நெருங்கிய தோழிகள் இருந்தனர். அவர்களின் பெயர் ஷிபா செய்க் மற்றும் ஜனத் மகாந்தர். இவர்கள் 3 பேரும் நீண்டகாலமாக நண்பர்களாக உள்ளனர். எங்கு சென்றாலும் 3 பேரும் சேர்ந்தே சென்று வந்தனர். 3 பேர் இடையே நல்ல புரிதல் இருந்தது. இதற்கிடையே தான் அவர்களுக்கு ஒரு எண்ணம் வந்துள்ளது.
இப்போது 3 பேரும் நண்பர்களாக மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஆனால் வரும்காலத்தில் திருமணம் நடந்துவிட்டதால் நட்பை தொடர முடியாது என்று அவர்கள் நினைத்து வருத்தப்பட்டுள்ளனர். திருமண வாழ்க்கை தங்களை பிரித்து விடும் என்று அஞ்சினர். இதனால் அவர்கள் மாற்று முடிவை எடுத்தனர். அதாவது அவர்கள் 3 பேருமே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
வாசிம் செய்க் தனது தோழிகளான ஷிபா செய்க் - ஜனத் மகாந்தர் ஆகியோரை திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதுபற்றி 3 பேரும் தங்களின் குடும்பத்தினரிடம் பேசியுள்ளனர். முதலில் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பிறகு 3 பேருக்கும் இடையே உள்ள நட்பு மற்றும் புரிதலை தொடர்ந்து அவர்கள் திருமணத்துக்கு பச்சைக்கொடி காட்டினர்.
இதையடுத்து வாசிம் செய்க் தோழிகளான ஷிபா செய்க் - ஜனத் மகாந்தர் ஆகியோரை ஒரே மேடையில் திருமணம் செய்தார். இவர்களின் திருமணம் சித்ரதுர்கா மாவட்டம் ஹோரபேட்டையில் உள்ள எம்கே பேலஸில் வெகுவிமரிசையாக நடந்தது. மணமகன், மணமகள்களின் பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்கள் வாழ்த்த அவர்களின் திருமணம் நடந்து முடிந்தது. இதுதொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
அதனை பார்க்கும் ஒரு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் இன்னொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திருமணம் சட்டவிரோதமானது. மனைவிகளாக மாறி இருக்கும் 2 தோழிகளுக்கும் இடையே பிரச்சனை வரலாம். இது 3 பேரின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கலாம் என்று கூறி வருகினறனர்.
-
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம்












Click it and Unblock the Notifications