பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விஜய்சேதுபதி பட பாணி.. மகன் செய்த தடலாடி.. ஏமாந்து போன அப்பா.. மிரண்ட போலீஸ்

Google Oneindia Tamil News

பெங்களூரு: பெங்களூரு நகரில் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவத்தை 20 வயது இளைஞர் செய்திருக்கிறார். தனது தந்தையிடம் இருந்து ரூ .5 லட்சம் பறிப்பதற்காக தன்னை யாரோ கடத்திவிட்டதாக நாடகம் ஆடியிருக்கிறார்.

3 லட்சம் கடன் வாங்கி பிராண்டட் ஆடைகள் மற்றும் மொபைல் போன்கள் வாங்குவது, நன்றாக சாப்பிடுவது என காதலியுடன் ஜாலியாக இருந்த இளைஞர், அதை கட்ட முடியாமல் தவித்த நிலையில் தந்தையிடம் கடத்தல் நாடகத்தை அரங்கேற்றி மாட்டிக்கொண்டுள்ளார். விஜய்சேதுபதி நடித்த சூது கவ்வும் படம் பாணியில் நடந்த இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூருவில் உள்ள மஹாலக்ஷ்மிபுரத்தில் வசிப்பவர் மக்தூம் ஷாப் (20வயது) இளைஞர். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

எல்.முருகனுக்கு வரவேற்பு அளித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ... சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த புகார் தூது..! எல்.முருகனுக்கு வரவேற்பு அளித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ... சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த புகார் தூது..!

சாலை விபத்தில் பலி

சாலை விபத்தில் பலி

போலீசார் கூறிய தகவலின் படி, மகதூம், 3 லட்சம் தனிநபர் கடன் வாங்கி தனது காதலிக்காக நிறைய செலவு செய்துள்ளார். பிராண்டட் ஆடைகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் வாங்குவது விரும்பியதை சாப்பிடுவது என வாழ்க்கையில் ஜாலியாக இருந்துள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக அவரது காதலி ஆகஸ்ட் தொடக்கத்தில் சாலை விபத்தில் இறந்தார்.

கடனை எப்படி அடைப்பது

கடனை எப்படி அடைப்பது

இதனால் துக்கத்தில் இருந்த மக்தூம் கடனை எப்படி அடைப்பது என்று தெரியாமல் விழிபிதுங்கி போனார். ஒரு கட்டத்தில் தந்தையிடம் கடத்தல் நாடகத்தை அரங்கேற்றி பணத்தை வசூலிப்பது என்று திட்டமிடுகிறார். அதன்படியே வீட்டை விட்டு ஓடிபோகிறார்.

ஸ்விட்ச் ஆப்

ஸ்விட்ச் ஆப்

இந்நிலையில் செப்டம்பர் 13 ம் தேதி மக்தூமின் தந்தை போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் கடத்தல்காரர்கள் தனது மகனைக் கடத்திச் சென்றதாகவும், ரூ.5 லட்சம் பணத்தைக் கேட்பதாகவும் குற்றம் சாட்டினார். அவர் தனது புகாரில், தனது மகன் செப்டம்பர் 12 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறினார் என்றும் அவரது தொலைப்பேசி ஸ்விட்ச் ஆப் ஆகி உள்ளது என்றும் கூறியுள்ளார்.

கடத்தியதாக புகார்

கடத்தியதாக புகார்

மேலும் இளைஞரின் தந்தை தனது மகனை நான்கு-ஐந்து நபர்கள் கடத்தி வைத்துக்கொண்டு ரூ .5 லட்சம் கேட்டு வாய்ஸ் மெசேஜ் மூலம் மிரட்டல் வந்ததாக கூறினார். பணத்தை எங்கே கொண்டுவருவது என்று கேட்ட போது, ​​டிஜிட்டல் வழியாக அனுப்புமாறு கோருகிறார்கள் என்றும் புகாரில் கூறினார்.

பெங்களூரு விரைந்தது

பெங்களூரு விரைந்தது


இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசார் தனி டீம் அமைத்து முயற்சியில் இறங்கினர். தனிப்படை பெங்களூருவில் இருந்து திருப்பதிக்கு கடத்தல்காரர்களை தேடி சென்றது. அங்குதான் மகதூம் தானே காரை ஓட்டிக்கொண்டு சென்று கடத்தல்காரர்கள் கடத்திவிட்டது போலீசுக்கு தெரியவந்தது,

போலி கடத்தல் நாடகம்

போலி கடத்தல் நாடகம்

தலையில் கொட்டி பெங்களூருக்கு அழைத்து வந்த போலீசார், ஏன் இப்படி செய்தாய் என்று மகதூமிடம் விசாரித்து இருக்கிறார்கள். அப்போதுதான் காதலியுடன் சுற்றியது. சாலை விபத்தில் அவர் இறந்தது. தனி நபர் கடன் வாங்கி ஜாலியாக இருந்தது என எல்லாவற்றையும் கூறியிருக்கிறார். மகனே தனது தந்தையிடம், தன்னை யாரோ கடத்திவிட்டதாக பணம் பறிக்க முயன்ற சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இடையில் புகுந்த கார்த்திக்

இடையில் புகுந்த கார்த்திக்

இந்த சம்பவம் ஏற்கனவே உள்ளத்தை அளித்தா என்ற சினிமா படத்தில் வந்திருக்கும். அதில் ரம்பா தன்னை அடியாட்களை வைத்து கடத்த சொல்லி தந்தையிடம் பணம் கேட்டு மிரட்ட திட்டமிடுவார்.ஆனால் கார்த்தி இடையில் வந்து காரியத்தையே கெடுத்துவிடுவார். அப்படித்தான் இங்கும் கிட்டத்தட்ட நடந்துள்ளது. என்ன கார்த்திக்கிற்கு பதில் போலீஸ் வந்தால், கடத்தல் நாடகம் போட்ட மகதூம் வலையில் மாட்டிய மீனை போல் போலீசிடம் மாட்டிக்கொண்டார்.

English summary
In yet another shocking incident, a 20-year-old man allegedly staged his own kidnapping to extort Rs 5 lakh from his father. In order to fulfill his wishes for branded clothes and mobile phones, the youth took a loan of Rs 3 lakh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X