புதுஜோடி.. ‛செல்பி'னு எடுக்க கணவரை ஆற்றுக்கு கூட்டிச்சென்று மனைவி செய்த செயல்.. இனி மறக்க மாட்டார்
பெங்களூர்: கர்நாடகாவில் திருமணமான 3 மாதத்தில் ‛செல்பி' எடுக்கலாம் என்று ஆற்றுக்கு அழைத்து சென்ற மனைவி, தனது கணவரை ஆற்றுக்குள் தள்ளிவிட்டு கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கும், இளம்பெண்ணுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. திருமணமான சில வாரங்கள் அவர்கள் இருவருக்கும் நன்றாக இருந்தனர். அதன்பிறகு கடந்த சில வாரங்களாக அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

இந்நிலையில் தான் இன்று தனது கணவரை அந்த பெண் கட்லூர் கிராமத்தில் ஓடும் கிருஷ்ணா ஆற்றுக்கு அழைத்து சென்றார். ஆற்றின் மேல்புறம் செல்லும் மேம்பாலத்தில் அவர்கள் 2 பேரும் நின்று கொண்டிருந்தனர்.
இந்த பாலம் தான் கர்நாடகா மற்றும் தெலுங்கானாவை இணைக்கிறது. இந்த பாலத்தின் ஒருபுறம் கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டம் உள்ளது. மறுபுறம் தெலுங்கானாவின் நாராயன்பேட்டை மாவட்டம் உள்ளது. இந்த சமயத்தில் ‛செல்பி' எடுப்போமா? என்று மனைவி கேட்டுள்ளார்.
இதை நம்பிய அந்த இளைஞர் ஓகே சொன்னார். இதையடுத்து இருவரும் போட்டோ எடுத்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று அந்த இளைஞர் பாலத்தில் இருந்து கிருஷ்ணா ஆற்றுக்குள் விழுந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வாகனத்தை நிறுத்தி வந்து பார்த்தனர். அப்போது அந்த இளைஞர் நீச்சலடித்து ஆற்றுக்கு நடுவே இருந்த பாறையை பிடித்து ஏறி அதன் மீது நின்றார்.
அதன்பிறகு மற்றவர்கள் கயிற்றை பயன்படுத்தி கிருஷ்ணா ஆற்றில் விழுந்த இளைஞரை மீட்டனர். அவரிடம் ‛‛ஆற்றுக்குள் ஏன் குதித்தீர்கள்'' என்று கேட்டனர். அதற்கு அந்த இளைஞர், ‛‛ஆற்றுக்குள் நான் குதிக்கவில்லை. என் மனைவி தான் தள்ளிவிட்டார்'' என்று கூறினார். இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
-
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications