Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பசியில் அழுத நடிகை.. பாதிவழியில் காரை நிறுத்தி ஊபர் டிரைவர் செய்த செயல்.. வைரலாகும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் விமான நிலையத்துக்கு ஊபர் காரில் நள்ளிரவில் இளம் நடிகை ஒருவர் சென்றார். சூட்டிங்கில் சாப்பிட முடியவில்லை. உடனடியாக விமானத்தை பிடிக்க வேண்டும் என்பதால் அவசரமாக செல்கிறேன். இப்போது வயிறு பசி தாங்க முடியவில்லை என்று செல்போனில் தனது தோழியிடம் கூறி அழுதார். அதனை ட்ட ஊபர் டிரைவர் காரை நிறுத்தி ‛சாண்ட்விச்' வாங்கி கொடுத்து நெகிழ வைத்தார். இதுதொடர்பாக அந்த நடிகை வெளியிட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் யோகிதா ரதோர். இவர் மாடல் அழகியாகவும், நடிகையாகவும் உள்ளார். பல்வேறு விளம்பரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் சூட்டிங்கிற்காக யோகிதா பெங்களூர் வந்தார். சூட்டிங்கை முடித்துவிட்டு மீண்டும் அவர் நள்ளிரவில் மும்பைக்கு புறப்பட்டார்.

actress-yogitha-rathore-praises-uber-driver-who-bought-sandwich-after-after-learning-she-was-hungry

ஊபர் வாடகை காரில் அவர் பெங்களூர் தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றார். அப்போது காரின் பின் இருக்கையில் இருந்த யோகிதா தனது தோழியிடம் செல்போனில் பேசினார்.

அப்போது அவர், அன்றைய தினம் பற்றி கூறினார். சூட்டிங் பற்றியும், அதிகப்படியான பணியால் சாப்பிடாமல் இருந்தது பற்றியும் கூறினார். மேலும் தனக்கு வயிறு பசி அதிகமாக உள்ளது. ஆனால் இரவு 2 மணிக்கு விமானம் இருக்கிறது. இதனால் விமான நிலையத்துக்கு செல்கிறேன் என்று கூறி அழுதார்.

இதைகேட்ட ஊபர் டிரைவர், காரை திடீரென்று பாதிவழியில் நிறுத்தினார். யோகிதாவிடம், ‛‛2 நிமிடங்களில் வருகிறேன்'' என்று கூறி சென்றார். கார் டிரைவர் கழிவறைக்கு செல்கிறார்? என்று யோகிதா நினைத்தார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் திரும்பி வந்த டிரைவர், யோகிதாவிடம் ஒரு பாக்ஸை கொடுத்தார்.

அதை பார்த்து வியப்படைந்தார். ‛என்ன இது?' என்று கேட்டார். அதற்கு ஊபர் டிரைவர், ‛சாண்ட்விச்.. சாப்பிடுங்கள்' என்றார். அதனைகேட்டு அவர் இன்ப அதிர்ச்சியடைந்தார். மேலும் அந்த டிரைவர், ‛‛ "உங்கள் தோழியிடம் நீங்கள் மிகவும் பசியாக இருப்பதாகச் சொன்னதைக் கேட்டேன். அதைகேட்டவுடன் என்னால் தாங்க முடியவில்லை.

மோசமாக உணர்ந்தேன். என் சகோதரி இந்த நிலையில் இருந்தால் நான் இப்படி தான் செய்திருப்பேன்.. சாப்பிடுங்கள்..நீங்கள் சைவஉணவு வேண்டும் என்று கூறியதையும் அதுசார்ந்த சாண்ட்விச் வாங்கி வந்தேன்'' என்று கூறினார்.

இதில் யோகிதா நெகிழ்ந்து போனார். இதனை தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். நடந்த சம்பவம் பற்றி நெகிழ்வோடு அவர் கூறியுள்ளார். ஊபர் டிரைவரை அவர் பாராட்டியதோடு, ‛‛அனைவரிடமும் அன்பாக இருப்போம். அனைவரிடமும் கருணை காட்ட வேண்டும். ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் அவரவர் சார்ந்த பிரச்சனை, போராட்டங்கள் உள்ளன. ஆனால் உங்களின் கருணை பார்வை ஒருவரின் நாளையே மகிழ்விக்கும்'' என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+