கர்நாடகாவில் நுழைந்தது கேரளாவை உலுக்கிய ஜிகா வைரஸ்- பெங்களூரில் மட்டும் 6 பேருக்கு பாதிப்பு!
பெங்களூர்: கேரளாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய ஜிகா வைரஸ் பாதிப்பு கர்நாடகா மாநிலத்திலும் பரவத் தொடங்கி உள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரில் மட்டும் 6 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜிகா வைரஸால் கர்ப்பிணிகள் கடுமையாக பாதிக்கப்படக் கூடிய அபாயம் உள்ளதாக கர்நாடகா மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் டெங்கு பாய்ச்சல் மிக அதிகமாக இருந்து வருகிறது. கர்நாடகா முழுவதும் 20,000-க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 15 பேர் மரணம் அடைந்தனர்.

இந்த நிலையில் பெங்களூர் அருகே ஆனேக்கல் ஜிகினி என்ற பகுதியில் திடீரென பலருக்கும் காய்ச்சல் பரவியது. இதனையடுத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு டெங்கு பாதிப்பு இருக்குமோ என பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் பரிசோதனைகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. இருப்பினும் ஆனேக்கல் பகுதியைச் சேர்ந்த 6 பேரின் உடல்நிலை மோசமானதால் அவர்களது ரத்த மாதிரிகள் புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த பரிசோதனையில்தான் 6 பேருக்குமே ஜிகா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஜிகினி பகுதியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி எனவும் கர்நாடகா மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கர்நாடகா மாநில அரசின் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், கர்நாடகாவில் மொத்தம் 7 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜிகா வைரஸ் கர்ப்பிணிகளை அதிகமாக பாதிக்கும். ஆகையால் கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜிகா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு அதிகமான தலைவலி, கண்கள் சிவப்பாக உருமாறுதல், கொப்பளங்கள் உருவாதல், உடலில் வீக்கங்களும் தடிப்புகளும் ஏற்படுதல் ஆகியவைதான் அறிகுறிகள். ஆகையால் இத்தகைய அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட வேண்டும் என்கிறது கர்நாடகா மாநில சுகாதாரத்துறை.
கர்நாடகா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், ஜிகா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜிகா வைரஸ் பாதிப்பு உள்ள இடங்களில் அனைவருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications