மிஸ்ஸாகும் சிஎம் பதவி? சித்தராமையாவுக்கு ‛செக்’.. டிகே சிவக்குமாரிடம் பேசிய சோனியா! அடுத்த ட்விஸ்ட்
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் பதவியை சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் வழங்கி உள்ளது. டிகே சிவக்குமாரும் முதல்வர் பதவியை எதிர்பார்த்த நிலையில் சோனியா காந்தி, டிகே சிவக்குமாருக்கு போன் செய்து அவரை சமாதானம் செய்துள்ளதோடு அவர் கூறிய ஒரு வார்த்தை சித்தராமையாவுக்கு ‛செக்' வைக்கும் வகையில் இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றது. தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த காங்கிரஸ் கட்சி முதல்வரை தேர்வு செய்வதில் திணறி வருகிறார். முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோர் தான் இதற்கு காரணம்.

சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகிய இருவரும் முதல்வர் பதவியை விட்டு கொடுக்க மறுத்து வருகின்றனர். மேலும் இருவரும் டெல்லியில் முகாமிட்டு மேலிட தலைவர்களை சந்தித்து பேசி வருகின்றனர். நேற்று மல்லிகார்ஜூன கார்கேவை தொடர்ந்து இன்று அவர்கள் ராகுல் காந்தியை தனித்தனியே சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பை தொடர்ந்து தான் ஒரு முக்கிய தகவல் வெளியானது. அதாவது கர்நாடகா முதல்வர் பதவி சித்தராமையாவுக்கு வழங்கப்பட உள்ளது எனவும், டிகே சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்குவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக ராகுல் காந்தி டிகே சிவக்குமாரை சமாதானப்படுத்தியதாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகின. இதனால் டிகே சிவக்குமார் தரப்பினர் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில் தான் முதல்வர் பதவி கைத்தப்பிய நிலையில் டிகே சிவக்குமாரை ராகுல் காந்தி சமாதானம் செய்துள்ளார். அப்போது சோனியா காந்தியுடன் டிகே சிவக்குமாரிடம் தொலைபேசியில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வேளையில், ‛‛உங்களின் கோரிக்கை என்பது சரிதான். இப்போதைக்கு கட்சியின் நலன் கருதி சித்தராமையாவுக்கு முதல்வராக வாய்ப்பு கொடுப்போம். 2 ஆண்டுகளுக்கு பிறகு உங்களுக்கு முதல்வர் பதவி வழங்குவோம். இப்போதும் துணை முதல்வர் பதவியோடு னா உங்களிடம் முக்கிய துறையை ஒப்படைக்கிறோம்'' என தெரிவித்துள்ளார்.
மேலும், ‛‛காங்கிரஸ் கட்சிக்காக நீங்கள் செய்த பணிகளை நாங்கள் மறக்கவில்லை. இப்போது முதல்வர் பதவி கேட்டு பிடிவாதம் செய்ய வேண்டாம். பிற மாநிலத்தில்(ராஜஸ்தான் அசோக் கெலாட் - சச்சின் பைலட்) நிலவும் சூழல் போன்று கர்நாடகாவில் நடக்காது. இதற்கு நான் உறுதியளிக்கிறேன்'' என தெரிவித்துள்ளார். இதன்மூலம் 5 ஆண்டு ஆட்சியில் சித்தராமையா முதல் 2 ஆண்டும், டிகே சிவக்குமார் அடுத்த 3 ஆண்டும் முதல்வராக நியமிப்பதாக சோனியா வாக்குறுதி அளித்துள்ளார்.

இருப்பினும் கூட டிகே சிவக்குமார் முதல்வர் பதவியை சித்தராமையாவுக்கு விட்டு கொடுக்க மறுத்து வருகிறார். 5 ஆண்டும் முதல்வர் பதவி தனக்கு வழங்க வேண்டும் என்றே அவர் கூறி வருகிறார். அதோடு ராகுல் சந்திப்பை தொடர்ந்து மல்லிகார்ஜூன கார்கேவிடம் 2 மணிநேரம் டிகே சிவக்குமார் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் தலித் முதல்வராக மல்லிகார்ஜூன கார்கேவை அரியணை ஏற வைக்க டிகே சிவக்குமார் வேறு திட்டத்தையும் மேலிடத்திடம் பிடிவாதமாக தெரிவித்து வருகிறார்.
இதனால் கர்நாடகா முதல்வர் பதவி தொடர்பாக காங்கிரஸ் கட்சியில் பெரிய அளவில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே ரன்தீப் சுர்ஜேவாலா இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‛‛கர்நாடகா மாநில காங்கிரஸ் சட்டமன்றக் குழு, தங்கள் தலைவரையும் அடுத்த முதலமைச்சரையும் தேர்வு செய்வதற்கான அதிகாரத்தை கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் வழங்கி உள்ளது. எனவே மல்லிகார்ஜுன கார்கே முதலமைச்சரின் பெயரை அறிவிப்பார். சித்தராமையா இன்னும் முதல்வராக அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதால் அடுத்த 48 முதல் 78 மணிநேரத்தில் கர்நாடகாவில் அமைச்சரவை'' அமையும் என கூறியது குறிப்பிடத்தக்கது. இதனால் நாளை பதவியேற்பு விழா நடைபெறுவதும் சந்தேகத்துக்கு இடமான ஒன்றாக மாறியுள்ளது.
-
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications