டிபன் இருக்கு! ஆனால் சட்னி இல்லை! இந்திரா உணவகத்தில் விக்கித்த துணை முதல்வர் டிகே சிவக்குமார்! டென்ஷன்
பெங்களூர்: கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் இன்று பெங்களூரில் உள்ள இந்திரா உணவகத்தில் ஆய்வு செய்தார். அப்போது அவருக்கு டிபன் வழங்கிய ஊழியர்கள், சட்னி இல்லை எனக்கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் டிகே சிவக்குமார் டென்சனாகி போனார்.
கர்நாடகாவில் 2013 முதல் 2018 வரை காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அப்போது முதல்வராக சித்தராமையா இருந்தார். அந்த சமயத்தில் ஏழை, எளிய மக்களின் நலனுக்காகவும், அவர்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கும் நோக்கத்திலும் இந்திரா கேன்டீன் உருவாக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் அம்மா உணவகம் செயல்படுவது போல் கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக இந்திரா கேன்டீன் துவங்கப்பட்டது. பெங்களூர் நகரில் 100க்கும் அதிகமான இந்திரா கேன்டீன் உள்ள நிலையில் பிற மாவட்டங்களின் முக்கிய இடங்களிலும் இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது.
ரூ.5 க்கு உணவு வினியோகம் செய்யப்படுவதால் ஏழை, எளிய மக்கள் இந்த உணவகத்தால் அதிகமாக பயனடைந்தனர். இதற்கிடையே தான் 2018 ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில் பாஜக ஆட்சியை பிடித்தது. இதையடுத்து இந்திரா கேன்டீன் செயல்பாடு படிப்படியாக முடங்கியது. தற்போது மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளதால் இந்திரா கேன்டீனை மீண்டும் சிறப்பாக செயல்படுத்த முதல்வர் சித்தராமையா முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் தான் துணை முதல்வரும், பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சருமான டிகே சிவக்குமார் இன்று திடீரென்று முன்னறிவிப்பு எதுவுமின்றி அதிகாரிகளுடன் ஆய்வு பணியை தொடங்கினார். பெங்களூர் சிக்கசந்திராவில் உள்ள இந்திரா கேன்டீனுக்கு டிகே சிவக்குமார் சென்றார். அங்கு வினியோகம் செய்யப்படும் உணவை சுவைத் ஆய்வு செய்ய முடிவு செய்தார். இதையடுத்து அவர் டிபன் கேட்டார். அதற்கு அங்கிருந்த ஊழியர்கள் டிபன் காலியாகிவிட்டது. சாப்பிட எதுவும் இல்லை என தெரிவித்தனர். இதனால் அவர் டென்ஷனாார்.

இதையடுத்து எத்தனை பேருக்கு இந்த உணவகத்தில் இன்று உணவு வழங்கப்பட்டுள்ளது?. தினமும் எவ்வளவு பேர் பயனடைகின்றனர்? என்ற விபரங்களை சேகரித்து வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து டிகே சிவக்குமார் தாசரஹள்ளி மெட்ரோ ரயில் நிலையம் அருகே இந்திரா கேன்டீனுக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது இட்லி மற்றும் சவ்சவ் பாத் என 2 வகை உணவு வாங்கி சுவைத்தார். இந்த வேளையில் அருகே உணவு சாப்பிட்டவரிடம் உணவின் தரம் குறித்து அவர் கேட்டறிந்தார்.
இதற்கிடையே டிகே சிவக்குமார் சாப்பிட்ட டிபனுக்கு சட்னி காலியானது. இதையடுத்து டிகே சிவக்குமார் கொஞ்சம் சட்னி வழங்கும்படி கேட்டார். அதற்கு ஊழியர்கள் சட்னி தீர்ந்துபோய்விட்டதாக தெரிவித்தார். இதனால் டிகே சிவக்குமார் ஊழியர் மீது அதிருப்தியோட பார்த்துவிட்டு சாம்பாரை வைத்தே டிபனை சாப்பிட்டு முடித்தார்.

மேலும் இந்திரா கேன்டீன் உதவி மைய எண் செயல்பாட்டில் உள்ளதா? என்பதை டிகே சிவக்குமார் சோதனை செய்து பார்த்தார். அப்போது அந்த எண் இன்வேலிட் என தெரிவித்தது. இதனால் டிகே சிவக்குமார் டென்ஷனார். இந்திரா கேன்டீனில் நிறைய மாற்றங்கள் கொண்டு வர வேண்டியுள்ளது. இந்த மாற்றங்களை நான் விரைவில் செய்வேன் என அவர் கூறிவிட்டு பிற இடங்களுக்கு ஆய்வுக்காக அவர் புறப்பட்டு சென்றார்.
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
பிராமணர்களுக்கு வாய்ப்பில்லை.. கர்நாடகா புதிய அமைச்சர்களில் யார் யார் எந்த ஜாதி? வென்ற சித்தராமையா -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட்












Click it and Unblock the Notifications