பலாத்கார புகார் அளித்த பெண் கடத்தி சித்ரவதை.. தேவுகடா மகன் ரேவண்ணாவின் ஆதரவாளர் அதிரடி கைது!
பெங்களூர்: ரேவண்ணா மீது பதிவு செய்யப்பட்ட 2 வது வழக்கில் அவரது ஆதரவாளர் சதீஷ் பாவண்ணாவை மைசூர் போலீஸ் கைது செய்துள்ளது. பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீஸ் விசாரணைக்கு அனுப்பாமல் கடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா (வயது 33). அதாவது தேவேகவுடாவின் மூத்த மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணாவின் மகன் தான், பிரஜ்வல் ரேவண்ணா. பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் லோக்சபா தொகுதி எம்பியாக இருந்து வருகிறார். மேலும் இவர் தற்போது லோக்சபா தேர்தலில் பாஜக-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் மீண்டும் ஹாசன் தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.
கடந்த மாதம்(ஏப்ரல்) 26 ஆம் தேதி ஹாசன் லோக்சபா தொகுதியில் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா, ஏராளமான பெண்களுடன் ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதையடுத்து இச்சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை குழு(எஸ்.ஐ.டி.) விசாரணைக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். அதன்பேரில் சிறப்பு விசாரணை குழு போலீசார் தங்கள் விசாரணையை தொடங்கி உள்ளனர். பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீசும் பிறபிக்கப்பட்டுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளதாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாராசாமி கூறினார். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பூகம்பத்தையே ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ரேவண்ணா மீது பதிவு செய்யப்பட்ட 2 வது வழக்கில் அவரது ஆதரவாளர் சதீஷ் பாவண்ணாவை மைசூர் போலீஸ் கைது செய்துள்ளது. பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீஸ் விசாரணைக்கு அனுப்பாமல் கடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட தனது தாயை மீட்டு எடுக்கும்படி அவரது மகள் கேஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார். தாய் கடத்தப்பட்டதாக மகள் அளித்த புகாரை அடுத்து ரேவண்ணா ஆதரவாளர் சதீஷ் பாபண்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
முன்னதாக பிரஜ்வல் மட்டுமின்றி அவரது தந்தை ரேவண்ணா மீதும் முன்னாள் பணிப்பெண் ஹோலேநரசிப்புரா போலீசில் பாலியல் புகார் செய்தார். அவர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரின் பேரில் தந்தை ரேவண்ணா, மகன் பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இந்திய தண்டனை சட்டப்பிரிவு 354ஏ (பாலியல் தொல்லை), 354 டி (பின்தொடருதல்), 506 (மிரட்டுதல்), 509 (பெண்ணின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்துதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ மட்டுமே வெளியான நிலையில் தற்போது அவரது தந்தை ரேவண்ணாவும் வீட்டில் வேலை பார்த்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகாரவில் ரேவண்ணாவின் மனைவி பவானி வீட்டில் இல்லாத நேரத்தில் ரேவண்ணா பாலியல் தொல்லை அளித்தார். அதேபோல் அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணாவும் தவறாக நடந்து கொண்டார். அதுமட்டுமின்றி எனது மகளுக்கு வீடியோ கால் செய்து தொல்லை அளித்ததோடு மிரட்டினார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications