ட்விஸ்ட்.. 3 மாதத்தில் மாற்றம் என்ற குமாரசாமி.. தேவகவுடாவை சந்தித்த பாஜக தலைவர்கள்! பரபர கர்நாடகா
பெங்களூர்: கர்நாடகா அரசியல் அடுத்தடுத்து பரபரப்பான கட்டத்தை எட்டி வருகிறது. இந்நிலையில் தான் பசவராஜ் பொம்மை உள்பட பாஜக தலைவர்கள் ஜேடிஎஸ்ஸின் மாஜி பிரதமர் தேவகவுடாவை சந்தித்துள்ளனர். இன்னும் 3 மாதத்தில் மாற்றம் என குமாரசாமி முழங்கியது மற்றும் இந்த சந்திப்பு என்பது விவாதத்தை கிளப்பி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையை பெற்றது. இதன்மூலம் பாஜக ஆட்சியை பறிகொடுத்துள்ளது. இந்த தேர்தலில் பாஜக வெறும் 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. கடந்த 2018 தேர்தலில் பாஜக 104 இடங்களை கைப்பற்றிய நிலையில் தற்போது பெரிய அளவில் அந்த கட்சி சறுக்கலை சந்தித்துள்ளது.

மேலும் இந்த தேர்தலில் ஜேடிஎஸ் கட்சிக்கும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஜேடிஎஸ் வெறும் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் மற்றவர்கள் 4 இடங்களில் வாகை சூடியுள்ளனர். இதற்கிடையே தான் கர்நாடகா முதல்வராக சித்தராமையா நாளை பதவியேற்க உள்ளார். துணை முதல்வராக டிகே சிவக்குமார் பொறுப்பேற்க உள்ளார்.
கர்நாடகா முதல்வர் பதவியை பெறுவதில் சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் சித்தராமையா வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் தான் டிகே சிவக்குமார் தரப்பு ‛அப்செட்' ஆகியுள்ளது. இதனை டிகே சிவக்குமாரின் தம்பியும், காங்கிரஸ் எம்பியுமான டிகே சுரேஷ் வெளிப்படையாகவே தெரிவித்தார். இதனால் வரும் நாட்களில் ராஜஸ்தான் போன்று காங்கிரஸ் கட்சியில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தான் யாரும் எதிர்பாராத விதமாக பாஜக தலைவர்கள் திடீரென்று ஜேடிஎஸ் கட்சியின் தேவேகவுடாவை சந்தித்துள்ளது கர்நாடாக அரசியலில் இன்னும் பரபரப்பை கூட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் குழப்பம் நிலவலாம் எனு நிலையில் இந்த சந்திப்பு நடந்திருப்பது தான் தற்போது பேசும்பொருளாகி உள்ளது. அதாவது முன்னாள் பிரதமரும் ஜேடிஎஸ் கட்சியின் நிறுவனருமான தேவேகவுடா நேற்று தனது 91வது பிறந்தாளை கொண்டாடினார்.

இந்த பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தான் காபந்து முதல்வராக உள்ள பசவராஜ் பொம்மை, முன்னாள் அமைச்சர்களான கோவிந்த் கார்ஜோள், அசோக் உள்ளிட்டவர்கள் தேவேகவுடாவின் வீட்டுக்கு சென்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது தேவேகவுடாவின் மூத்த மகனும், மாஜி அமைச்சருமான ரேவண்ணா உடன் இருந்தார். மாறாக முன்னாள் முதல்வரும் தேவேகவுடாவின் 2வது மகன் குமாரசாமி இந்த சந்திப்பின்போது இல்லை.
இந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. இருப்பினும் கூட கர்நாடகாவில் காங்கிரஸ் அரசை எதிர்க்க பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் கைகோர்ப்பதற்கான முதற்கட்ட முயற்சி தான் இதுவாக இருக்கலாம் என சிலர் கூறப்படுகிறது. ஏனென்றால் இந்த தேர்தலில் பாஜகவும், ஜேடிஎஸ் என 2 கட்சிகளும் கூட காங்கிரஸ் இந்த அளவுக்கு பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கவில்லை.
மேலும் காங்கிரஸ் கட்சிக்கு 135 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் பாஜகவுக்கு 66 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் ஒரு மடங்குக்கு மேலாக அதிக எம்எல்ஏக்களை கொண்ட காங்கிரஸை எதிர்க்கட்சியாக எதிர்கொள்வது என்பது பாஜகவுக்கு சுலபமானதாக இருக்காது. இதனால் தான் சட்டசபையில் பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் இணைந்து செயல்படும் நோக்கத்தில் இந்த சந்திப்பு நடந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மேலும் கடந்த 2018 தேர்தலில் பாஜக, ஜேடிஎஸ் இடையே சில தொகுதிகளில் நட்புறவு இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் இந்த முறை அப்படி எதுவும் இல்லை. குறிப்பாக பழைய மைசூர் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் பாஜக வலுவான வேட்பாளர்களை களமிறக்கியது. இதனால் அங்கு காங்கிரஸ், ஜேடிஎஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவியது. இதுவும் அந்த பகுதியில் ஜேடிஎஸ் கட்சியின் ஓட்டை பிரித்து காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற காரணமாக இருந்தது. இதனால் ஜேடிஎஸ் கட்சியினரும் பாஜக மீது கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில் இந்த சந்திப்பு மூலம் இருகட்சிகள் இடையே சுமூக உறவை ஏற்படுத்த பாஜக காய்நகர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக நேற்று தேவேகவுடாவின் மகனும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி சென்னப்பட்டணாவில் பேசினார். அப்போது, ‛‛காங்கிரஸ் கட்சி தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கடினம். தற்போதைய அரசின் நாடகத்தை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள். இந்த அரசிடம் இருந்து நல்லாட்சியை எதிர்பார்க்க முடியாது. சுயமரியாதையை எதிர்பார்க்க முடியாது. இந்த அரசு பணத்தை கொண்டு வந்து அபிவிருத்தி செய்யும் என எதிர்பார்க்க முடியாது. அதோடு அக்டோபர் அல்லது நவம்பரில் இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் புதிய அரசியல் மாற்றம் ஏற்படும்'' என்றார். இதற்கிடையே தான் தேவேகவுடாவை, பாஜக தலைவர்கள் சந்தித்து இருப்பது அந்த மாநில அரசியலில் பரபரப்பை கூட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
*****
-
"ஐ லவ் யூ.." அத்துமீறிய பேராசிரியருக்கு செருப்படி.. கர்நாடகாவில் தக்க பாடம் புகட்டிய கல்லூரி மாணவி -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன?












Click it and Unblock the Notifications