‛ஹிந்தி தெரியாது போடா’.. தமிழக போலீசிடம் நடிகர் பிரகாஷ் ராஜை கோர்த்துவிட்ட வக்கீல்!சுளீர் பதிலடி
‛‛ஹிந்தி தெரியாது போடா’ எனும் வகையில் ‛‛ஹிந்தி தெரியாது போங்க’’ என நடிகர் பிரகாஷ் ராஜ் கருப்பு நிற டீசர்ட் அணிந்த போட்டோ விவாதத்தை கிளப்பியது.
பெங்களூர்: தமிழ்நாட்டில் ஹிந்தி பேசும் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக போலியான வீடியோ, செய்திகள் வெளியாகின. இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் ‛ஹிந்தி தெரியாது.. போங்க..'' எனும் வாசகத்துடன் நடிகர் பிரகாஷ் ராஜ் டீசர்ட் அணிந்திருந்த போட்டோவை பகிர்ந்து இவர் மீது தமிழ்நாடு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளதா? என உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளார். அதோடு இந்தி திணிப்பை நிறுத்துங்கள் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து வேலை செய்து வருகின்றனர். சொந்த மாநிலங்களில் வேலை இல்லாத காரணத்தால் அவர்கள் குடும்பத்துடன் புலம்பெயர்ந்து தமிழ்நாடு உள்பட தென்இந்திய மாநிலங்களில் பணியாற்றி வருகின்றனர்.
கட்டட பணி, பாலம் கட்டும் பணி, தொழிற்சாலை, ஓட்டல், கால்நடை வளர்ப்பு பண்ணைகளில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தான் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் தமிழர்கள் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், இதில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் போலியான வீடியோக்கள் வலைதளங்களில் பரப்பப்பட்டன.

பீகார் குழு ஆய்வு
பீகார் தொழிலாளர்களை விரட்டியடிக்கப்படுவதாக தகவல் பரவிய நிலையில் அந்த மாநிலத்தில் இருந்து உடனடியாக அதிகாரிகள் குழு தமிழ்நாட்டுக்கு விரைந்தது. பீகார் மாநில தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தியது. இதில் அவர்கள் எந்த பிரச்சனையும் இல்லை. தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும் வடமாநில தொழிலாளர்கள் விஷயத்தில் தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்த நிலையில் வழக்குப்பதிவு செய்து கைதும் செய்து வருகின்றனர்.

நடிகர் பிரகாஷ் ராஜ் டீசர்ட் போட்டா
இந்நிலையில் தான் தற்போது இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ள ஷசாங்க் சேகர் ஷா, நடிகர் பிரகாஷ் ராஜை வம்புக்கு இழுத்துள்ளார். இந்தி திவாஸ் கொண்டாட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரகாஷ் ராஜ் கருப்பு நிறத்தில் ‛இந்தி தெரியாது போங்க' எனும் வாசகத்துடன் டீசர்ட் அணிந்திருந்தார். இந்த போட்டோவை தான் ஷசாங்க் சேகர் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வம்பிழுத்துள்ளார்.

தமிழக போலீசாரிடம் கேள்வி
அதாவது ‛‛எனக்கு ஹிந்தி தெரியாது. போங்க'' என கன்னட மொழியில் எழுதப்பட்ட வாசக டீசர்ட்டை பிரகாஷ் ராஜ் அணிந்த போட்டோவை போட்டோவை தமிழ்நாடு போலீசுக்கு ஷசாங்க் சேகர்ஷா டேக் செய்துள்ளார். அதோடு நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பி உள்ளார். அதாவது தமிழ்நாட்டில் ஹிந்தி பேசியதால் பீகாரை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் பரவிய நிலையில் இந்த விஷயத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு போலீஸ் எச்சரித்துள்ளது. இந்நிலையில் தான் இந்தி தெரியாது. போங்க என நடிகர் பிரகாஷ் ராஜ் அணிந்திருந்த போட்டோவை பதிவிட்டு வழக்கறிஞர் ஷசாங்க் சேகர் ஷா இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

பிரகாஷ் ராஜ் பதிலடி
இதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். ஷசாங்க் சேகர் ஷா பதிவிட்ட பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார். அதில், ‛‛எனது மூலம், என் தாய்மொழியான கன்னட மொழியை மதிக்காமல் இந்தி மொழியை திணித்தால் நாங்கள் இப்படி தான் போராடுவோம். என்னை மிரட்டி பார்க்கிறீர்களா?'' என கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்தி திணிப்பை நிறுத்த..
மேலும், இன்னொரு பதிவில் ‛‛நான் 7 மொழிகளை பேசகிறேன். ஒரு மொழியை கற்று பேசுவது என்பது அதன் மக்களை மதிப்பதாகும். நான் பணிசெய்யும்போது என்னுடன் பணியாற்றுபவர்களின் ஒவ்வொரு மொழியையும் கற்றுக்கொண்டேன். நான் என் மொழியை யாருக்கும் திணிக்கவில்லை. ஆனால் நீங்கள் என்னுடைய மொழியை அவமதித்து, உங்கள் மொழியை திணித்தால் நான் எதிர்ப்பை வெளிக்காட்டுவேன்'' என ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த ட்விட்டர் பதிவை அவர் #stophindiimposition எனும் ஹேஷ்டேக்கில் பதிவிட்டுள்ளார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications