பெங்களூரில் ஆபாசத்தின் உச்சம்.. பண்ணை வீட்டில் சிக்கிய பிரபலம்! போதையில் பாத்ரூமுக்குள் ஓடிய விஐபி
பெங்களூர்: பெங்களூர் பண்ணை வீட்டில் நடந்த ரேவ் பார்ட்டி குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ரேவ் பார்ட்டி என்பது இசை நிகழ்ச்சியாகும்.. ஆனால், சிலசமயம், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் மதுபானம், கஞ்சா உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகிறது.. போதையிலேயே, விடிய விடிய நிர்வாணமாக இளம் பெண்கள் நடனமாடுவதாகவும் கூறப்படுகிறது.

ரிசார்ட்கள்: பெரும்பாலும், இதுபோன்ற ரேவ் பார்ட்டிகள், பண்ணை வீடுகளிலும் , ரிசார்ட்களிலும் நடைபெறுவதால், அங்கெல்லாம் போலீசாரும் தொடர்ந்து கண்காணித்தபடியே உள்ளனர்.
அப்படித்தான், பெங்களூருவில் ரேவ் பார்ட்டி நேற்று முன்தினம் நடந்துள்ளது.. பெங்களூரு புறநகர் மாவட்டம் சிங்கேன அக்ரஹாராவில், கோபால ரெட்டி என்பவருக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது.. இந்த பண்ணை வீட்டில் ரேவ் பார்ட்டி நடந்து கொண்டிருப்பதாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது..
பண்ணை வீடு: இதையடுத்து, நேற்று அதிகாலை 3 மணிக்கு இந்த பண்ணை வீட்டிற்குள் போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனை நடத்தினார்கள்.. அப்போது பல பெண்கள் போதையில் நடனமாடி கொண்டிருந்தார்கள்.. போலீசாரை பார்த்ததுமே அத்தனை பேரும், பண்ணை வீட்டிலிருந்து ஆங்காங்கே சிறதி ஓடினார்கள். அப்போதுதான், பண்ணை வீட்டு வாசலில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த எம்எல்ஏ ஒருவரின் "பாஸ்" கொண்ட ஒரு கார் நிற்பதையும் போலீசார் கண்டுபிடித்தார்கள்.
அதேபோல, சிதறி சென்றவர்களை பிடிக்க, அவர்களது பின்னாடியே போலீசார் துரத்தி சென்றார்கள்.. ஆனால், பலரையும் பிடிக்க முடியவில்லை. சிலர் தங்களிடமிருந்த போதைப்பொருட்களை, பண்ணை வீட்டிலுள்ள பாத்ரூமுக்குள் போட்டு அழிக்க முயன்றதாகவும் தெரிகிறது.
பார்ட்டி: அப்போதுதான் அந்த பார்ட்டியில் கொகைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்தியிருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.. பிரம்மாண்டமான அந்த பண்ணை வீட்டின் ஒவ்வொரு மூலையிலும், 15-க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் நிறுத்தப்பட்டிருந்ததாம்.. அந்த கார்களிலெல்லாம் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது காருக்குள்ளும் போதைப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இறுதியில், இந்த ரேவ் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்த ஹைதராபாத்தை சேர்ந்த வாசு என்பவர் கைது செய்யப்பட்டார்.. அதேபோல, போதைப்பொருளை சப்ளை செய்தவர்கள், 3 பேர் உள்பட மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தார்கள். கைதானவர்களிடம் இருந்து 16 கிராம் எம்டிஎம்ஏ போதைப்பொருள், 6 கிராம் கொகைன், 6 கிராம் ஹைட்ரோ கஞ்சா, 2 கார்கள், 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வாசு யார்: கைதான வாசு, ஒரு மேனேஜ்மெண்ட் நிறுவனத்தை சொந்தமாகவே நடத்தி வருகிறாராம். நேற்று வாசுவுக்கு ஹேப்பி பர்த்டே.. அதனால், சன் செட் டு சன் ரைஸ்' என்ற பெயரில் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதிகாலை 2:00 மணி தாண்டியும், விதிகளை மீறி பார்ட்டி நடந்தது. பல இளம்பெண்களை ஆந்திரா, பெங்களூருவிலிருந்து இவர் இந்த விருந்திற்கு அழைத்து வந்துள்ளார்..
இந்த விருந்தில் தெலுங்கு சின்னத்திரை நடிகர்கள், நடிகைகள், மாடல் அழகிகள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருக்கிறார்கள்.. இவர்கள் எல்லாருமே போதைப்பொருட்களை பயன்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது..
பண்ணை வீடு: இதையடுத்து, பண்ணை வீட்டில் வைத்தே 99 பேரிடம் ரத்த மாதிரி பெறப்பட்டு, அவற்றை பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இந்த பரிசோதனையில் யாரெல்லாம் போதைப்பொருட்கள் பயன்படுத்தினார்களோ? அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக அறிவித்திருக்கிறார்கள்.
இந்த ரேவ் பார்ட்டியில் தெலுங்கு நடிகை ஒருவரது பெயரும் அடிபட்டுள்ளது.. இவரும் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால், உடனடியாக இந்த தகவலை அந்த நடிகை மறுத்திருந்தார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு, "நான் எந்த பார்ட்டியிலும் பங்கேற்கவில்லை.. இப்போது நான் ஹைதராபாதில்தான் இருக்கிறேன். என்னை பற்றி வந்த செய்தியை நம்பாதீர்கள்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
பாத்ரூம்: ஆனால், அது பொய் தகவல் என்று மீடியாவில் செய்திகள் வெளியாகிவருகிறது.. பண்ணை வீட்டில் போலீசார் ரெய்டு நடத்தியபோது, பாத்ரூமுக்கு செல்வதாக சொல்லிவிட்டு, அதே பண்ணை வீட்டு வளாகத்தில் இருந்து வீடியோ எடுத்து, சோஷியல் மீடியாவில் பதிவிட்டாராம் அந்த பிரபல நடிகை.. இப்போதும் அவர் அதே பண்ணை வீட்டில் தான் இருக்கிறாராம்.
பிரபல நடிகையான இவர், ரேவ் பார்ட்டியில் பங்கேற்று சிக்கி, தர்ம சங்கடத்துக்கு ஆளாகியிருப்பதாகவும் சொல்கிறார்கள். ஆனால், உண்மைத்தன்மை என்னவென்று தெரியவில்லை..
பரபரப்பு: நடிகையை களங்கப்படுத்துவதற்காகவே வேண்டுமென்றே அவரது பெயரை களங்கப்படுத்துகிறார்களா? அல்லது நிஜமாகவே கலந்து கொண்டாரா? என்று தெரியவில்லை. ஆனால், இந்த பெங்களூர் ரேவ் பார்ட்டி சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்த வாசு, தனி விமானம் மூலமாக விஐபி-க்கள் மற்றும் அழகிகளை அழைத்து கொண்டு பெங்களூரு வந்தாராம்..
மெடிக்கல் செக்கப்: அதுமட்டுமல்ல, இந்த ஒரு நாள் இரவு கொண்டாட்டத்திற்காக சுமார் ரூ.50 லட்சம் வரை செலவு செய்துள்ளாராம்.. இப்போதைக்கு பார்ட்டியில் பங்கேற்ற எல்லாருக்குமே மருத்துவ பரிசோதனை நடந்து கொண்டிருக்கிறதாம்.. இந்த சோதனை நிறைவுபெற்ற பிறகு எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்தான அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்படும் என பெங்களூரு போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதேபோல, இந்த பண்ணை வீட்டில் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட ரேவ் பார்ட்டியில், கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளின் மதிப்பு மட்டும் ரூ.50 லட்சம் என்கிறார்கள்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications