#arrestkohli கோலியை தூக்கி ஜெயில்ல போடுங்க.. சண்டைக்கு வரும் அல்லு அர்ஜுன் ஆர்மி! ஓஹோ அந்த மேட்டரா?
பெங்களூர்: ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி வெற்றி பெற்ற நிலையில் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் 4ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்ட வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் அரெஸ்ட் கோலி ( #arrestkohli) என்ற ஹாஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அல்லு அர்ஜுனனின் ரசிகர்கள் அதனை பரப்பி வருவதாக கூறப்படுகிறது.
2026 ஐபிஎல் 18 வது சீசன் கோலாகலமாக இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. மும்பை, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற பலமான அணிகள் ஏமாற்றிய நிலையில், இறுதி போட்டியில் அபார வெற்றி பெற்ற ஆர்சிபி அணி முதன் முறையாக கோப்பையை கைப்பற்றியது.
18வது சீசனில் 18ஆம் ஜெர்சி அணிந்த கோலி முதன் முறையாக கோப்பையை முத்தமிட்டார். தொடர்ந்து பெங்களூருவில் ஆர்சிபி அணி சார்பில் பிரம்மாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. விதான் சவுதாவிலிருந்து சின்னச்சாமி மைதானம் வரை வீரர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இளம்பெண் உள்ளிட்ட பலர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் காவல்துறை எச்சரிக்கையை மீறி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும், ஆர்சிபி அணியின் அலட்சியமே எந்த விபத்துக்கு காரணம் என குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஆர்சிபி அணி நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் விராட் கோலியை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.
ஆனால் இதில் விராட் கோலிக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் அவரை கைது செய்ய முடியாது என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் ட்விட்டரில் அரெஸ்ட் கோலி என்ற ஹாஷ்டேக் கடந்த இரண்டு நாட்களாக ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் தான் இந்த ஹேஷ்டேக் ஆக்கி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர் விராட் கோலி ரசிகர்கள்.
அதாவது புஷ்பா 2 திரைப்படம் வெளியான நிலையில் ஐதராபாத்தில் ரசிகர்களை அல்லு அர்ஜுன் சந்திக்க சென்றபோது ஏற்பட்ட நெரிசல் சிக்கி பெண் ஒருவர் பலியானார். தொடர்ந்து அந்த பெண்ணின் குடும்பத்திற்கு அல்லு அர்ஜுன் உதவினார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அல்லு அர்ஜுனை கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்ற ஜாமீனில் அவர் வெளியே வந்தார். இந்த நிலையில் அதேபோன்ற ஒரு நிகழ்வு தான் நடந்திருக்கும் நிலையில் விராட் கோலியை கைது செய்யாதது ஏன் என அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் விராட் கோலியை கைது செய்ய வேண்டும் எனவும் கூறிவரும் நிலையில் கோலி ரசிகர்களுக்கும் அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கும் சமூக வலைதளங்களில் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இது ஒரு புறம் இருக்க விராட் கோலி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெங்களூர் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விராட் கோலி மீது தனியாக வழக்கு பதிவு செய்ய தேவையில்லை என்றும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கில் இந்த புகார் மனு இணைக்கப்பட்டு விசாரிக்கப்படும் என பெங்களூர் காவல்துறையினர் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications