பெங்களூரில் நள்ளிரவு 1 மணி வரை மது விற்பனைக்கு அனுமதி.. கர்நாடக அரசு உத்தரவு
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள அனைத்து நட்சத்திர ஹோட்டல்கள், பார்களில் நள்ளிரவு 1 மணி வரை மதுபானத்தை வழங்க அனுமதி அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கடைகள் நள்ளிரவு 1 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது மதுபானங்களை வழங்கவும் அனுமதி தரப்பட்டுள்ளது.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் இப்போது சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. நாட்டின் ஐடி தலைநகரான பெங்களூரில் பல மாற்றங்கள் நடந்து வருகிறது.

இதற்கிடையே மிக முக்கிய அறிவிப்பாக அங்கே பெங்களூரில் அனைத்து நட்சத்திர ஹோட்டல்கள், பார்களில் நள்ளிரவு 1 மணி வரை மதுபானத்தை வழங்க அனுமதி அளித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூருக்கு அறிவிப்புகள்: அதாவது, கடந்த பிப். மாதம் கர்நாடக பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்தார். நிதித்துறையை சித்தராமையா தன்வசம் வைத்துள்ள நிலையில், அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் பெங்களூர் தொடர்பாக சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார்.
அதாவது வாரத்தின் அனைத்து நாட்களிலும் நள்ளிரவைத் தாண்டி, அதாவது இரவு 1 மணி வரை அனைத்து கடைகளையும் திறந்து வைக்க அனுமதி தரப்படும் என்று அவர் அறிவித்திருந்தார். கர்நாடக தலைவர் பெங்களூர் மற்றும் அங்குள்ள 10 நகரங்களில் வர்த்தகத்தை மேம்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இது பெங்களூரில் உள்ள கடைகள் காலை 6 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை செயல்பட அனுமதிக்கிறது.
முக்கிய அறிவிப்பு: பெங்களூரில் உள்ள டெக் நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்படும் நிலையில், அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு இது மிகப் பெரிய உதவியாக இருக்கும் என்றே கூறப்பட்டது. இதற்கிடையே கர்நாடக அரசு இப்போது முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.
"100 வீடு எங்க பொறுப்பு பினராயி சேட்டா".. கேரளாவுக்கு உதவும் கர்நாடகா அரசு.. சித்தராமையா அறிவிப்பு
நள்ளிரவு வரை மது: அதாவது பெங்களூரில் உள்ள கிளப்புகள், நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் பார்கள் & உணவகங்களில் மதுபானம் வழங்கும் நேரத்தை நள்ளிரவு 1 மணி வரை நீட்டித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய உத்தரவின்படி கிளப்கள், நட்சத்திர ஹோட்டல்களில் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மதுபானத்தை வழங்கலாம். பார்களில் காலை 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மதுபானத்தை வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் ஐடி நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் நிலையில், இது நள்ளிரவு வரை வேலை செய்வோருக்கு ஏற்றதாக இருக்கும் என ஒரு தரப்பினர் வரவேற்கின்றனர். அதேநேரம் மதுபான கடைகள் 1 மணி வரை செயல்பட அனுமதி அளித்துள்ளது ரொம்பவே தவறான போக்கு என்று மற்றொரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications