கேட்க மாட்டீயா? நிச்சயமான காதலி வீட்டிற்குள் நுழைந்த "எக்ஸ்".. உள்ளே நடந்த சம்பவம்! கதறிய குடும்பம்
சில மாதங்கள் இவர்கள் காதலித்து வந்துள்ளனர். நட்பாக, அன்பாக பழகி வந்துள்ளனர்.
பெங்களூர்: பெங்களூர் வில்சன் கார்டன் பகுதியில் இளம் பெண் ஒருவர் அவரின் முன்னாள் காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூர் மாகடி பகுதியை சேர்ந்தவர் மனோஜ். மருத்துவர் துறையில் இவர் சேல்ஸ் பணியில் இருக்கிறார்.

24 வயதாகும் இவர் தனது அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த 23 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். 3 வருடங்களுக்கு முன் அந்த பெண்ணிடம் இவர் காதலை சொல்லி இருக்கிறார்.
ஆனால் அந்த பெண் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன்பின் அந்த பெண் அலுவலகம் மாறிவிட்டார். இவர்கள் பிரிந்துவிட்ட காரணத்தால் அதன்பின் பெரிதாக தொடர்பும் இல்லை. இந்த நிலையில் கடந்த வருடம் இரண்டு பேரும் பேஸ்புக்கில் நண்பர்கள் ஆகி உள்ளனர். இதில் நெருக்கமான நிலையில் மீண்டும் அந்த பெண்ணிடம் மனோஜ் காதலை சொல்லி இருக்கிறார். இந்த முறை அந்த பெண் காதலை ஏற்றுக்கொண்டு உள்ளார்.
இதையடுத்து சில மாதங்கள் இவர்கள் காதலித்து வந்துள்ளனர். நட்பாக, அன்பாக பழகி வந்துள்ளனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல மனோஜ் அதிகம் கோபம் அடைவதை கண்டுபிடித்து உள்ளார். அதோடு அவரின் பேச்சிலும் திமிர்த்தனம் இருந்துள்ளது. அதே பெண்ணை மனோஜ் அடிக்கடி கட்டுப்படுத்த தொடங்கி உள்ளார். பல்வேறு விஷயங்களை செய்யாதே என்று கூறி தொடர்ந்து ஆட்டிப்படைத்து இருக்கிறார். இதனால் அவரின் தொல்லை தாங்காமல் காதலை முறித்து உள்ளார் மனோஜ்.
மனோஜ் பல முறை கெஞ்சியும் கேட்காமல் காதலை முறித்து இருக்கிறார் அந்த பெண். அதன்பின் மனோஜ் தொடர்ந்து பல முறை அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முயன்று உள்ளார். ஆனால் முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அந்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். இதை கேட்டு மனோஜ் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளார். இதையடுத்து நேரடியாக அந்த பெண்ணின் வீட்டிற்கு அவரின் பெற்றோர் இல்லாத நேரம் பார்த்து சென்றுள்ளார்.
அங்கே இருந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். அதோடு அந்த பெண்ணின் உறுப்பில் தாக்கி உள்ளார். பின்னர் தலையணை வைத்து மூச்சு இறுக்கி கொலை செய்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். இது தெரிந்து மனோஜ் தற்கொலைக்கும் முயன்றுள்ளார். மாடியில் இருந்து விழுந்து காயங்களுடன் மீட்கப்பட்ட மனோஜ் தற்போது மருத்துவமனையில் கைது செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications