உலுக்கிடுச்சே.. மூடிய அறைக்குள் சிக்கிய காதலன்.. அரண்டு போன பிசினஸ்மேன் கணவன்! பெங்களூரு பகீர்
பெங்களூரு: பெங்களூரு மாநகரின் பியாடராயணபுரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரக் கொலைச் சம்பவம், ஒட்டுமொத்த கர்நாடகாவையும் அதிர வைத்துள்ளது. சோஷியல் மீடியாவால் தடம் மாறிய ஒரு கள்ளக்காதல் விவகாரம், கடைசியில் பிளான் செய்யப்பட்ட கொலையாக முடிந்துள்ளது.. இதுகுறித்த பகீர் பின்னணியை போலீசார் இப்போது வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர். அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பீடி காலனியை சேர்ந்தவர் முகமது காசிம்.. இவருக்கு 27 வயதாகிறது.. தான் வசித்து வரும் அந்த பகுதியிலேயே சொந்தமாக ஒரு பழைய இரும்பு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்..

பெங்களூரு கள்ளக்காதல் சம்பவம்
முகமது காசிமிற்கும், அர்பியா கவுசர் என்ற பெண்ணுக்கும் இடையே திருமணத்திற்கு முன்பாகவே சுமார் 7 வருட காலமாகவே காதல் இருந்து வந்துள்ளது. இவர்களின் காதல் தீவிரமாக இருந்தபோதிலும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அர்பியா கவுசருக்கு, முகமது அக்பர் என்ற நபருடன் திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பிறகு இந்தத் தம்பதியினர் பெங்களூரு பியாடராயணபுரா போலீஸ் எல்லைக்குட்பட்ட சியாமண்ணா கார்டன் பகுதியில் வசித்து வந்தனர்.
புதிய குடும்பம் - ஆண் நண்பர்
திருமணமாகி அர்பியா கவுசர் தனது புதிய குடும்ப வாழ்க்கையைத் தொடங்கினார்.. ஆனால் அப்போதுகூட காசிமுடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்படவில்லை. சோஷியல் மீடியா மூலமாக இவர்களுக்குள் மீண்டும் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது.
கணவருக்கு தெரியாமல் அர்பியா கவுசர் தனது முன்னாள் காதலனான முகமது காசிமுடன் தொடர்ந்து பேசி வந்ததுடன், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். ஒருகட்டத்தில் இவர்களின் தவறான உறவு குறித்து அர்பியா கவுசரின் கணவர் முகமது அக்பருக்குத் தெரியவந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனே தனது மனைவியைக் கடுமையாக கண்டித்துள்ளார். ஆனாலும் கணவரின் பேச்சை காதில் போட்டுக் கொள்ளாமல், அர்பியா கவுசர் தனது கள்ளத்தொடர்பை கைவிடாமல் காசிமுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இது முகமது அக்பருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில்தான், கடந்த மே 25ம் தேதியன்று கள்ளக்காதலியை சந்திக்க, ராமநகரிலிருந்து பெங்களூரு பியாடராயணபுராவில் உள்ள அர்பியா கவுசரின் வீட்டிற்கே முகமது காசிம் வந்துள்ளார். இருவரும் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்..
பிடிபட்ட காதலர்கள்
இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட கணவர் முகமது அக்பர், தன்னுடைய ஒட்டுமொத்த சொந்தக்காரர்களையும் அழைத்து கொண்டு, திடீரென வீட்டிற்குள் நுழைந்துவிட்டார்.. அங்கு முகமது காசிமையும், அர்பியா கவுசரையும் அவர்கள் கையும் களவுமாக பிடித்துவிட்டார்.
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் உறவை துண்டிக்காத ஆத்திரத்தில், முகமது அக்பர் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து காசிமினை மிருகத்தனமாக அடித்து, உதைத்துத் தாக்கியுள்ளனர்.
வீட்டிற்குள் நடந்த தகராறு நடுத்தெரு வரை வந்தது.. இதனால பொதுமக்கள் தலையிட்டு சண்டையை தடுத்து நிறுத்தினர். காசிமுக்கு உடம்பெல்லாம் படுகாயம் ஏற்பட்டது.. உடனடியலாக அங்கிருந்து எப்படியோ தப்பித்து ராமநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திடீர் ட்விஸ்ட்
காசிமின் மரணத்தைத் தொடர்ந்து பியாடராயணபுரா போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.. அப்போதுதான் அந்த பகீர் தகவல் வெளியானது.
அதாவது முகமது காசிமை தீர்த்துக்கட்ட அவரது கள்ளக்காதலி அர்பியா கவுசரே தனது கணவருக்கு முழுமையாக உதவி செய்தது அம்பலமானது. காசிமை வீட்டிற்கு வரவழைத்து, கணவரிடம் கையும் களவுமாக மாட்ட வைத்ததில் அர்பியா கவுசருக்கு முக்கியப் பங்கு இருப்பதும் உறுதியானது.
இதையடுத்து, முகமது காசிமை கொலை செய்த குற்றத்திற்காக கள்ளக்காதலி அர்பியா கவுசர், அவரது கணவர் முகமது அக்பர் மற்றும் இக்கொலைக்கு உடந்தையாக இருந்து தாக்குதல் நடத்திய அக்பரின் உறவினர்களான ஓவைஸ் வாசா, முகமது சாந்த் பாஷா ஆகிய நான்கு பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்...!!
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications