Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கம் வேண்டவே வேண்டாம்.. பெங்களூரில் வெள்ளி வாங்க ஒரு மாதம் வரை காத்திருக்கும் மக்கள்.. ‛டிமாண்ட்’

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நாடு முழுவதும் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் பெங்களூர் மக்கள் தங்க நகைக்கு பதில் வெள்ளி நாணயங்கள், வெள்ளி கட்டிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்படி திடீரென அதிகரித்த டிமாண்ட்டின் காரணமாக பெங்களூர் நகைக்கடைகள் வெள்ளி நாணயங்கள், வெள்ளி கட்டிகளுக்கு கடும் தட்டுப்பாடு உருவாகி உள்ளது. வெள்ளி வாங்க செல்லும் மக்களை ஒரு மாதம் வரை காக்க வைக்கின்றனர். அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை வரலாறு காணாத வகையில் நாடு முழுவதும் தங்கம் - வெள்ளி விலைகள் எகிறியுள்ளது. பெங்களூரில் இன்றுஒரு கிராம் 24 காரட் தங்கம் ரூ.13,086 ஆக உள்ளது. ஒரு பவுன் 24 காரட் தங்கம் ரூ.1.04 லட்சமாக உள்ளது. 22 கிராம் தங்கம் என்றால் ஒரு கிராம் ரூ.11,996 ஆகவும், ஒரு பவுன் என்றால் ரூ.95,960 ஆகவும் உள்ளது.

silver silver price bengaluru

இதனால் தங்கம் என்பது எட்டாக்கனியாக மாறி வருகிறது. விரைவில் 22 காரட் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை கடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தங்கத்தை போல் வெள்ளியை எடுத்து கொண்டாலும் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.

அதன்படி பெங்களூரில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.180 க்கும், 8 கிராம் வெள்ளி ரூ.1440க்கும், 10 கிராம் வெள்ளி ரூ.1,800க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்படி தங்கம் - வெள்ளி விலைகள் உச்சம் தொட்டுள்ளது. இதனால் பலருக்கும் தங்கம் வாங்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. ஏழை மக்கள் அதிக சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் பலரும் தங்கத்துக்கு பதில் வெள்ளி வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் நகைக்கடைகளில் வெள்ளி பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது

நேற்று சனிக்கிழமை பெங்களூரில் உள்ள நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. நல்ல நாள் மற்றும் தீபாவளி பண்டிகை வருகை உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் அதிகமாக நகைகளை வாங்கினர். அப்போது பெரும்பாலான மக்கள் தங்கத்துக்கு பதில் வெள்ளியையே வாங்கி உள்ளனர்.

இதுபற்றி ஜோஸ் ஆலுக்காஸ் கடையின் மேலாளர் ஒருவர் கூறுகையில், ‛‛தங்கம் விலை உயர்வால் பொதுமக்கள் வெள்ளியை வாங்க விரும்புகிறார்கள். மேலும் பலரும் தங்க நகைகளுக்கு பதில் தங்க கட்டி, தங்க நாணயங்களை வாங்குகின்றனர். அதேபோல் வெள்ளி நாணயங்கள், வெள்ளி கட்டிகளின் விற்பனை அதிகரித்துள்ளது. இது மக்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றத்தை குறிக்கும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பொதுமக்கள் தற்போது தங்களின் பணத்தை முதலீடு செய்யும் வகையில் தான் வெள்ளி கட்டி, வெள்ளி நாணயங்களை வாங்குகின்றனர்'' என்றார்.

பெங்களூர் நகைக்கடைக்காரர்கள் சங்கத்தின் செயலாளர் சீனிவாஸ் கூறுகையில், ‛‛பெங்களூரில் வெள்ளி நாணயம், வெள்ளி கட்டிகள் வாங்கும் மக்களுக்கு வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. இது ரெகுலர் கஸ்டமர்களுக்கு கிடையாது. மற்றவர்களுக்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே வெள்ளி நாணயம் - கட்டிகள் வழங்கப்படுகிறது. அந்த மக்கள் தங்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்ள ஒரு மாதம் வரை காக்க வைக்கப்படுகின்றனர்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+