காரில் சகதி அடித்ததால் வந்த கோபம்.. தொழிலதிபரின் விரலை கடித்து துப்பிய டிரைவர்.. பெங்களூரில் ஷாக்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் காரின் மீது சகதியை அடித்ததால் இன்னொரு காரில் சென்ற தொழிலதிபரிடம் சண்டையிட்டு அவரது விரலை கடித்த சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரில் வசித்து வருபர் ஜெயந்த் சேகர். தொழிலதிபர். இவர் மாகடி ரோட்டில் வசித்து வருகிறார். இரவில் ஹோட்டலில் தனது மனைவி பார்வதி, மாமியார் மஞ்சுளா உடன் உணவு சாப்பிட்டார். அதன்பிறகு காரில் வீட்டுக்கு சென்றிருந்தார். மாகடி ரோட்டில் காரில் சென்று கொண்டிருந்தார்.

bangalore bengaluru crime

ரயில்வே காலனி அருகே கார் சென்றது. மழை பெய்து இருந்ததால் ரோட்டில் தண்ணீர் மற்றும் சகதி இருந்தது. ஜெயந்த் சேகரின் கார் சக்கரம் சகதியில் இறங்கியது. அப்போது எதிரே வந்த கார் மீது சகதி தெறித்தது.

இதையடுத்து ஜெயந்த் சேகர் sorry கேட்டுவிட்டு காரில் சென்றார். ஆனால் எதிரே காரில் வந்தவர் விடவில்லை ஜெயந்த் சேகரின் காரை பின்தொடர்ந்து சென்று திட்டினார். அதுமட்டுமின்றி அவரது காரை நிறுத்தி ஜெயந்த் சேகரை இறங்கவைத்து திட்டி தாக்கினார். ஜெயந்த் சேகர் அங்கிருந்து தனது காரில் ஏறி தப்பிக்க முயன்றார்.

அப்போது கோபமான அந்த கார் டிரைவர், ஜெயந்த் சேகரை மீண்டும் தாக்கினார். அவரது மோதிர விரலை கடித்தார். இதில் ரத்தம் வடிந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் பிரச்சனையை முடித்து ஜெயந்த் சேகரை அனுப்பினர். காயமடைந்த ஜெயந்த் சேகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரூ.2 லட்சம் வரை விரலை சரிசெய்ய செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஜெயந்த் சேகரின் மனைவி மஞ்சுளா கூறுகையில், ,‛‛என் கணவரின் கைவிரலை கடிதத்தில் எலும்பு சேதமாகி உள்ளது. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்த அதிர்ச்சியில் இருந்து என் கணவர் இன்னும் மீளவில்லை'' என்றார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் ஜெயந்த் சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+