Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உஷார்... பெங்களூரில் திடீரென அதிகரிக்கும் கொரோனா! அடுக்குமாடிகளில் வசிப்போர் அதிகம் பாதிப்பு!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. மாநகராட்சியின் கிழக்கு மற்றும் மகாதேவபுரா மண்டலங்களில் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தினசரி பாதிப்பு 100யை நெருங்கி வருகிறது. குறிப்பாக குடிசை பகுதியினரை விட வில்லா, அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் பாதிக்கப்படுவதாக அதிகாரி கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா 3 அலைகளாக தாக்கியுள்ளது. இதில் கோடிக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு, ஏராளமானவர்கள் பலியாகி உள்ளனர். அதன்பிறகு சமீபத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தது.

இந்நிலையில் தான் சில நாட்களாக குறிப்பிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.

மத்திய அரசு எச்சரிக்கை

மத்திய அரசு எச்சரிக்கை

டெல்லியை தொடர்ந்து உத்தர பிரதேசம் உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் பாதிப்பு சதவீதம் மெல்ல தலைதூக்குகிறது. இதனால் மகாராஷ்டிரா டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளன. இதனால் அம்மாநில அரசுகள் மீண்டும் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுவெளியில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட உள்ளது.

பெங்களூரில் பாதிப்பு அதிகரிப்பு

பெங்களூரில் பாதிப்பு அதிகரிப்பு

இந்நிலையில் தான் கர்நாடக மாநிலம் பெங்களூரில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது. ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 19 வரை தினசரி கொரோனா பாதிப்பு என்பது மிகவும் குறைவாக தான் இருந்தது. இந்த காலக்கட்டத்தில் தினசரி பாதிப்பு என்பது குறைந்தபட்சம் 41 ஆகவும், அதிகபட்சமாக 55 என்ற அளவில் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது பாதிப்பின் அளவு அதிகரித்துள்ளது. ஏப்ரல் 19ல் 55 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 20ல் மொத்தம் 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகத்தில் நேற்று மொத்தம் 90 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் பெங்களூரில் மட்டும் 85 பேரிடம் கொரோனா கண்டறியப்பட்டது. இதனால் தான் விரைவில் கொரோனா பாதிப்பு 100யை தொடலாம் என அஞ்சப்படுகிறது.

1.05 சதவீதமாக அதிகரிப்பு

1.05 சதவீதமாக அதிகரிப்பு

இருப்பினும் ஏப்ரல் 21ம் தேதி நிலவரப்படி பெங்களூரில் 1,474 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 8 பேர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இது கொஞ்சம் ஆறுதலான விஷயம். இருப்பினும் பெங்களூரில் கொரோனா அதிகரிப்பு குறித்து இந்தியன் ஸ்டடிஸ்ட்டிக்கல் இன்ஸ்ட்டியூட் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் ‛‛கொரோனா பரவல் சதவீதம் 1.05 என அதிகரித்துள்ளது என கூறியுள்ளளனர்.

கொரோனா பரவல் மையமாக வாய்ப்பு

கொரோனா பரவல் மையமாக வாய்ப்பு

மாநிலத்தில் செயல்படும் கொரோனா தொழில்நுட்ப அறிவுரை கமிட்டி உறுப்பினர் கூறுகையில், ‛கொரோனா பரவல் இன்னொரு அலையாக வந்தால் முந்தைய அலைகளை போல் பெங்களூர் மையமாக திகழும். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து மற்றவருக்கு நோய் பரப்பும் எண்ணிக்கை(Reprouction Number or R0) தற்போது 1.04 என அதிகரித்துள்ளது. இது கொரோனா 2வது அலையின்போது 6 ஆக இருந்தது. இதை ஒப்பிடும்போது தற்போது குறைவு எனினும் சமீபத்தில் நாட்கள் அடிப்படையில் பார்த்தால் R0 அதிகரித்துள்ளது. வாராந்திர நோய் பாதிப்பு சதவீதம் 5 சதவீதம் அல்லது அதற்கு மேல் இருந்தால் அது சிரமத்தை ஏற்படுத்தும். தற்போது இது 1 சதவீதமாக தான் உள்ளது. பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு முற்றிலும் இல்லாத நிலை உள்ளது. இதனால் பெங்களூரில் கவனம் செலுத்தி கட்டுப்படுத்த வேண்டும்'' என்றார்.

மகாதேவபுரம், கிழக்கு மண்டலம்

மகாதேவபுரம், கிழக்கு மண்டலம்

இதுபற்றி பெங்களூர் மாநகராட்சியின் சுகாதாரத்துறை கமிஷனர் ரந்தீப் கூறுகையில், ‛‛டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்பான அம்சங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது. பெங்களூரில் கொரோனா பரவல் குறித்து கண்காணித்து வருகிறோம். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டு தனிமையில் தான் உள்ளனர். மருத்துவமனை சிகிச்சையில் சிலர் மட்டுமே உள்ளனர். இருப்பினும் நோய் பரவலை கட்டுப்படுத்துவதில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்றார். மாநகராட்சியின் சிறப்பு கமிஷனர் (சுகாதாரம்) திரிலோக் சந்திரா கூறுகையில், ‛‛ பெங்களூர் மாநகராட்சியில் தினசரி கொரோனா பாதிப்பு என்பது கிழக்கு மற்றும் மகாதேவபுரா மண்டலங்களில் தான் அதிகரித்து வருகிறது. இங்கு தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது இன்னும் 5 நாட்கள் தொடர்ந்தால் பாதிப்பு அதிகரிக்கலாம்'' என்றார்.

2 மண்டலங்களில் பாதிப்பு எவ்வளவு

2 மண்டலங்களில் பாதிப்பு எவ்வளவு

அதாவது பெங்களூர் மாநகராட்சி நிலவரப்படி கிழக்கு மண்டலத்தில் கடந்த 7 நாட்களில் 691 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நோய் பாதிப்பு சதவீதம் 0.85 ஆக உள்ளது. அதேபோல் இந்த காலக்கட்டத்தில் மகாதேவபுரா மண்டலத்தில் 494 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு வாராந்திர நோய் பாதிப்பு சதவீதம் என்பது 3.64 சதவீதமாக உள்ளது. இதனால் டெல்லி, மும்பையில் உள்பட பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு 7 நாள் தனிமை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பினர் தான் பாதிப்பு

அடுக்குமாடி குடியிருப்பினர் தான் பாதிப்பு

பெங்களூரில் இருந்து மும்பை, டெல்லி, மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் தனிமையில் உள்ளனர். இவர்கள் ஒருவாரம் கட்டாய தனிமையில் உள்ளனர். இதுபற்றி மகாதேவாபுரா மண்டல துணை சுகாதார அலுவலர் சுரேந்திரா கூறுகையில், ‛‛குடிசை பகுதிகளில் கொரோனா பாதிப்பு இல்லை. வில்லா மற்றும் அடுக்குடிமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தான் அதிகமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த மண்டலத்தில் 2 பேர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனிமையில் உள்ளவர்களுக்கு டோலோ 650 மற்றும் வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அறிகுறி உள்ளவர்களுக்கு சோதனைகள் மேற்கொண்டு வருகிறோம்'' என்றார்.

மாஸ்க் அவசியமாக்கப்பட வேண்டும்

மாஸ்க் அவசியமாக்கப்பட வேண்டும்

இதுபற்றி கர்நாடக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛மார்ச் 31க்கு பிறகு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கைவிட்டது. தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பல மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதனால் ஆபத்தை உணர்ந்து கர்நாடகத்திலும் குறிப்பாக பெங்களூரிலும் மாஸ்க் அணிய வேண்டியதை கட்டாயமாக்க வேண்டும்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+