Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெறும் 7 கிமீ கடக்கவே 1.5 மணிநேரம்! காரில் நிறைமாத கர்ப்பிணி! பெங்களூர் டிராபிக்கால் பரிதவித்த கணவர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் டிராபிக் பிரச்சினை ஒரு மிகப் பெரிய தலைவலியாகவே மாறியுள்ளது. அங்கு நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதற்கிடையே தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் பல மணி நேரப் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பகீர் அனுபவம் குறித்து பெங்களூர்வாசி பதிவிட்ட போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

பெங்களூரில் டிராபிக் எந்தளவுக்கு மோசமாக இருக்கும் என்பது நாம் தனியாகச் சொல்லத் தேவையில்லை. சும்மாவே அங்கு போக்குவரத்து நெரிசல் மோசமாகவே இருக்கும். அதிலும் இப்போது தீபாவளி நெருங்கிவிட்ட நிலையில், இப்போது பண்டிகைக் கால போக்குவரத்து பெங்களூர்வாசிகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. இதன் காரணமாக மக்கள் பல மணிநேரம் வாகனங்களில் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Bangalore traffic

பெங்களூர் வாழக்கூடிய நகரமா?

அப்படித் தான் பெங்களூர் டிராபிக்கில் தனது குடும்பத்துடன் சிக்கிய நபர் ஒருவர் இது குறித்து விமர்சனம் செய்துள்ளார்.. சில கிமீ தாண்டவே ஒரு மணி நேரம் வரை ஆவதாகக் குறிப்பிட்ட அவர், பெங்களூர் உண்மையாகவே வாழக்கூடிய நகரம் தானா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தனது மனைவி 8 மாத கர்ப்பிணியாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், எமர்ஜென்சி என்றால் எப்படி மருத்துவமனைக்குச் செல்ல முடியும் என்றும் சாடியுள்ளார்.

பெங்களூர் டிராபிக் நெரிசல் போட்டோவை பகிர்ந்துள்ள அந்த நபர் தனது ரெட்டிட் பக்கத்தில், "இந்த போட்டோ அனைத்தையும் சொல்கிறது. இன்று மாலை வொர்த்தூர் அருகே HAL சாலையில் 7 கிலோமீட்டரைக் கடக்க 1.5 மணிநேரம் ஆனது. எனது 8 மாத கர்ப்பிணி மனைவியை வழக்கமான பரிசோதனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தேன். அப்போது டிராபிக்கில் மாட்டிக் கொண்டேன்.

நிறைமாத கர்ப்பிணி

போக்குவரத்து நெரிசலின்போது எனக்கு ஒரு விஷயம் தான் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. அதாவது இது ஒரு எமர்ஜென்சியாக இருந்தால் என்ன செய்வது? மனைவிக்குப் பிரசவ வலி ஏற்பட்டால் என்ன செய்வது என்றே யோசித்துக் கொண்டிருந்தேன். அதைப் பற்றி நினைத்தாலே பயமாக இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் நாமும் காரில் சிக்கிக் கொண்டு, வாட்ச்சை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால், நிலைமை சீராவதாகத் தெரியவில்லை. இப்படியொரு உட்கட்டமைப்புக்குத் தான் நாங்கள் அதிக சாலை வரிகளைச் செலுத்துகிறோம். இந்த நகரம் அழிந்துவிட்டது என்று நான் உறுதியாக நம்புகிறேன். உள்கட்டமைப்பு முற்றிலும் சரிந்துவிட்டது.. இதிலிருந்து வெளியேற வழி இல்லை என்பது போல் உணர்கிறேன்" என்று அவர் தனது விரக்தியைப் பகிர்ந்திருந்தார்.

நெட்டிசன்கள்

அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டானது. நெட்டிசன்கள் பலரும் பெங்களூர் டிராபிக் குறித்து தங்கள் கருத்துகளை பதிவிட்டு வந்தனர். பெங்களூர் டிராபிக் நகரின் அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ளதையே இது காட்டுகிறது. நெட்டிசன்கள் பலருமே வேறு நகருக்கு செல்வதே சிறந்த தீர்வு என்றும் பெங்களூரைச் சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இல்லை என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

நெட்டிசன் ஒருவர், "பெங்களூர் சாலை திட்டமிடல் முட்டாள்தனமாக இருக்கிறது.. மக்கள் ஏன் இதைப் பொறுத்துக் கொள்கிறார்கள் என்று நம்ப முடியாத அளவுக்கு இது மிகவும் முட்டாள்தனமானது" என்று பதிவிட்டிருந்தார். இன்னொரு நபர், "நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே பெங்களூரில் தான்.. எனக்கு 28 வயதாகிறது.. இந்த வலியை நான் உணர்கிறேன். நான் வளர்ந்த நகரம் இப்போது இல்லை. அதனால் வெளியே செல்லவே எனக்கு வருத்தமாக இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

போக்குவரத்து நெரிசல்

முன்னதாக இந்த வாரத் தொடக்கத்தில், பெங்களூர் பெருநகர போக்குவரத்துக் கழக பேருந்து எக்கோஸ்பேஸ் சந்திப்பு அருகே அவுட்டர் ரிங் ரோட்டில் பழுதடைந்தது. அந்த ஒரு வாகனம் பழுதடைந்து சாலையின் நடுவில் நின்றதால் பல கிமீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இரு மார்க்கத்திலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+