பெங்களூரில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவும் போது.. அடடா.. தமிழ்நாடு வெதர்மேன் இப்படி சொல்கிறாரே!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவும் போது அங்கே எப்போது மழை தொடங்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்க நகரமான கேப் டவுனில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அந்நகரின் கடைசி சொட்டு தண்ணீரும் தீர உள்ள நிலையில் ஜீரோ டேவை அடைந்துவிட்டது கேப் டவுன். இந்நிலையில் கேப்டவுனை போன்றே கடைசி சொட்டு தண்ணீரை அடுத்து இழக்கவுள்ள உலகின் 11 நகரங்களின் பட்டியலை கடந்த 2018ம் வருடம் பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டது.

Bangalore water crisis Tamil Nadu weatherman predicts less prw Showers till end of April

அதன்படி அந்த பட்டியலில் பிரேசிலின் சா பாலோ நகர் முதலிடத்திலும் இந்தியாவின் பெங்களூரு நகரம் இரண்டாவது இடத்திலும் உள்ளது. பெங்களூரு நகரில் பாதிக்கும் மேற்பட்ட குடிநீர் தீர்ந்துவிடும், அதன்பின் குடிநீர் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படியே தற்போது தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பெங்களூர் ஜீரோ டேவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது நிலத்தடி நீர் ஜீரோ என்ற நிலையை அடையும் மோசமான சூழ்நிலைக்கு பெங்களூர் செல்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

கேப் டவுனை போலவே, பெங்களூர் அதன் அனைத்து நீர்நிலைகளையும் ஈரநிலங்களையும் அழித்துவிட்டது. 25 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் பெங்களூரின் நிலத்தடி நீர் அடியோடு சரிந்துவிட்டது. அதீத நீர் பயன்பாடு காரணமாக நிலத்தடி நீர் ஜீரோ நிலையை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. பெங்களூர் நகரம் இப்போது நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள காவிரி ஆற்றை மட்டுமே முழுமையாக நம்பியுள்ளது.

என்ன காரணம்?: மழைப்பற்றாக்குறை, ஆழ்துளை கிணறுகள் வறண்டு கிடப்பது, நிலத்தடி நீர் குறைதல், உள்கட்டமைப்பு திட்டமிடல் இல்லாமை, தண்ணீர் டேங்கர் மாஃபியா எனப் பல காரணங்கள் தற்போதைய தண்ணீர்ப் பிரச்னைக்கு காரணமாக பார்க்கப்படுகின்றன..

பெங்களூரின் நீர் விநியோகத்திற்கு பொறுப்பான அமைப்பான பெங்களூர் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB), காவிரி ஆற்றில் இருந்து அதிக தண்ணீரைப் பெறுகிறது. ஆனால் இந்த முறை குறைவான மழையால் காவிரியில் தண்ணீர் இல்லை. காவிரி நீர் இணைப்புகள் இல்லாத பகுதிகள் போர்வெல் அல்லது டேங்கர் தண்ணீரை நம்பியே உள்ளன. அவையும் வற்ற தொடங்கி உள்ளன.

பெங்களூரில் காவிரியில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 1,450 மில்லியன் லிட்டர் (எம்எல்டி) தண்ணீரைப் பெறும் அதே வேளையில், நகரம் இன்னும் ஒரு நாளைக்கு 1,680 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. இந்த பற்றாக்குறைதான் தண்ணீர் பிரச்சனைக்கு பெரிய காரணம்.

கோடை காலம் இன்னும் சில வாரங்கள் உள்ள நிலையில், கடுமையான தண்ணீர் பஞ்சம் காரணமாக பெங்களூர் திண்டாட தொடங்கி உள்ளது. பெங்களூரில் பல பகுதிகளில் தண்ணீர் விநியோகம் தடைப்பட்டு உள்ளது. ஏற்கனவே தனியார் டேங்கர்கள் விலையை உயர்த்துவதாக அங்கே குடியிருப்பாளர்கள் புகார் கூறுகின்றனர். பெங்களூருவின் மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் டேங்கர் தண்ணீரை நம்பியுள்ளனர்.

வெதர்மேன் பிரதீப் ஜான்: பெங்களூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவும் போது அங்கே எப்போது மழை தொடங்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

அதில், பெங்களூரில் மழைக்காலத்திற்கு முன்னதாக ஏப்ரலில் பெய்யும் மழைக்கு வாய்ப்பு குறைவு. ஜூன் வரை பெங்களூர் இந்த கஷ்டத்தை எதிர்கொள்ளத்தான் வேண்டும் . ஜூன் மாதத்தில் இருந்து அங்கே மழை காலம் அமோகமாக தொடங்க போகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+