Digital Arrest: 6 மாசமாக சித்திரவதை அனுபவித்த பெங்களூர் பெண்.. ரூ.33 கோடி மோசடி செய்த ஷாக் சம்பவம்
பெங்களூரு: தொழில்நுட்பமும், விஞ்ஞானமும் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்று வரும் நிலையில், மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பெங்களூரைச் சேர்ந்த 57 வயது பெண்ணை ஆறு மாதங்களாக டிஜிட்டல் அரெஸ்ட் செய்து, ரூ. 33 கோடியை மோசடி செய்துள்ள சம்பவம் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சி, ஏஐ தொழில்நுட்பம் என நாளுக்கு நாள் பெருக பெருக அது தொடர்பான மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. பெட்டிக் கடை முதல் மால்கள் வரை டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளே அதிகளவில் செய்யப்படுகின்றன. டிஜிட்டல் முறையில் நடக்கும் பணமோசடி தொடர்பான சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.

வயதானவர்கள், பெண்கள் என அப்பாவிகள் பலரும் இந்த டிஜிட்டல் மோசடியாளர்களிடம் சிக்கிக் கொள்கின்றனர். அதிகளவிலான பணப் பரிவர்த்தனை, மோசடி பரிவர்த்தனை, தாங்கள் சிபிஐ அதிகாரிகள் என்றெல்லாம் சொல்லி, உங்களைப் கைது செய்ய போவதாக மிரட்டுகிறார்கள். இதைக்கேட்டு பயந்துபோகும் நபர்களை மிரட்டியே பணத்தை லட்சக்கணக்கில் பறித்து விடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த டிஜிட்டல் அரெஸ்ட் மூலாக மோசடி செய்பவர்கள் சட்ட அமலாக்க அதிகாரிகள் அல்லது அரசு நிறுவனங்களின் பணியாளர்கள், சிபிஐ அதிகாரிகள் என்பது போல நடித்து ஆடியோ அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டுகிறார்கள். அதை உண்மை என நம்புவர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்து பணம் செலுத்த அழுத்தம் கொடுக்கின்றனர்.
அந்த வகையில், பெங்களூரைச் சேர்ந்த 57 வயது பெண்மணி ஒருவர் கடந்த 6 மாதங்களாக டிஜிட்டல் கைது செய்யப்பட்ட ரூ. 33 கோடி மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்தவர் 57 வயது பெண். இந்தப் பெண்ணை செல்போன் எண் மூலமாக மோசடியாளர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். அவரிடம், சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து ஆள்மாறாட்டம் செய்பவர்கள் அவரை தொடர்ந்து வீடியோ கண்காணிப்பில் வைத்திருந்துள்ளனர். உங்களுடைய வீட்டைக் கண்காணித்து வருகிறோம். போலீஸாரை தொடர்பு கொள்ளக் கூடாது என மிரட்டியுள்ளனர்.
அந்தப் பெண்ணுடைய மகளுக்குத் திருமணம் நடக்கவிருந்த நிலையில், குடும்பத்தின் பாதுகாப்புக்கு பிரச்சனை ஆகிவிடுமோ என்று பயந்துபோன அப்பெண் அவர்கள் கூறுவதை எல்லாம் செய்துள்ளார். 187 வங்கி பணப் பரிமாற்றங்களைச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதன் மூலமாக ரூ. 31.83 கோடியை அவர் இழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட பெண் போலீஸாரிடம் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிஜிட்டல் மோசடியாளர்கள் செய்த தொடர் டார்ச்சர் மற்றும் அளித்த மனஅழுத்தம் காரணமாக அப்பெண் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications