பெங்களூரில் 70 முறை வெட்டப்பட்ட மு.க.அழகிரி ஆதரவாளர் மதுரை விகே குருசாமி மருத்துவமனையில் மரணம்!
பெங்களூர்: தமிழ்நாட்டின் மதுரை திமுக பிரமுகர் வி.கே.குருசாமி பெங்களூரில் 70 முறை அரிவாளால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் மரணமடைந்துவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மதுரையில் திமுக பிரமுகர்களில் ஒருவராக இருந்தவர் விகே குருசாமி. மதுரை மாநகராட்சி மண்டல திமுக தலைவராகவும் பதவி வகித்தவர் விகே குருசாமி. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராக- வலதுகரமாக இருந்தவர் விகே குருசாமி.

விகே குருசாமிக்கும் அதிமுக முன்னாள் நிர்வாகி ராஜபாண்டியனுக்கும்25 ஆண்டுகாலமாக பகை இருந்து வந்தது. இருதரப்புக்கும் இடையேயான மோதல்களில் இதுவரை மொத்தம் 15 பேர் வெட்டி கொல்லப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் முதல் வாரம் மதுரையில் இருந்து பெங்களூர் சென்றார் விகே குருசாமி. பெங்களூரிலேயே வீடு வாங்கி செட்டில் ஆக வேண்டும் என திட்டமிட்டிருந்தார் விகே குருசாமி. இதற்காக பெங்களூரில் முகாமிட்ட நிலையில் ஹோட்டல் ஒன்றில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார் அவர். அப்போது திடீரென ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்த கும்பல், விகே குருசாமியை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிப் போட்டது.

இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த விகே குருசாமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி விகே குருசாமி உயிரிழந்துவிட்டதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
மேலும் விகே குருசாமியை ஹோட்டல் ஒன்றில் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டுகிற சிசிடிவி காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

என்ன பிரச்சனை: அதிமுக முன்னாள் நிர்வாகி ராஜபாண்டியன், விகே குருசாமி இருவரும் கமுதி அருகே ஒரே ஊரை சேர்ந்தவர்கள். 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஊராட்சித் தேர்தலில் தொடங்கி பகை நீடித்து வந்தது. ராஜபாண்டியன் மகனை விகே குருசாமி தரப்பு கடத்தி சென்று எரித்த் கொலை செய்ததையடுத்து இந்த சண்டை உக்கிரமடைந்தது. இதனிடையே விகே குருசாமி கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தது, நாட்டு வெடிகுண்டு தயாரித்தது உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த விகே குருசாமி பெங்களூருக்கு தப்பி தலைமறைவாக வாழ திட்டமிட்டிருந்த நிலையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications