பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓடுறது தாவுறது எல்லாமே வேணும்.. ஸ்விக்கியில் ரூ.75,378க்கு சிங்கிள் ஆர்டர்..மிரளவைத்த பெங்களூர்வாசி!

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் வசித்து வரும் ஒருவர் சிங்கிள் ஆர்டராக ரூ.75,378 க்கு ஸ்விக்கியில் உணவு வாங்கி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இறைச்சியை விரும்பி உண்ணும் வாடிக்கையாளர்கள் அதிகம் உள்ள நகரங்களில் சென்னை டாப் 3ல் வந்துள்ளதாகவும் ஸ்விக்கி தெரிவித்துள்ளது.

தற்போதைய காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆன்லைனில் உணவு ஆர்டர் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை நியமனம் செய்து சேவைகளை வழங்கி வருகிறது.

கணவர்-மனைவி என இருவரும் வேலைக்கு செல்வது, பிடித்த உணவை இருந்த இடத்திலேயே இருந்தபடி உடனே வாங்கி சுவைக்க விரும்புதல், ஓட்டலுக்கு சென்று சாப்பிடுவதில் இருக்கும் சோம்பேறித்தனம், உள்ளிட்டவற்றை முக்கிய காரணமாக கூறலாம்.

16 மணி நேரம் வேலை.. குறைந்த சம்பளம்.. சென்னையில் போராட்டத்தில் குதித்த ஸ்விக்கி ஊழியர்கள்! 16 மணி நேரம் வேலை.. குறைந்த சம்பளம்.. சென்னையில் போராட்டத்தில் குதித்த ஸ்விக்கி ஊழியர்கள்!

ஸ்விக்கி ஆண்டறிக்கை

ஸ்விக்கி ஆண்டறிக்கை

ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் நபர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. ஆன்லைனில் உணவு டெலிவரி ஊழியர்கள் நகரத்தின் ஒவ்வொரு மூலைகள் முதல் கிராமம் வரை நுழைந்துள்ளதே இதற்கு சாட்சியாகும். இந்நிலையில் தான் ஆன்லைவன் டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி இந்த ஆண்டு தனது நிறுவனம் பெற்ற ஆர்டர்கள், வாடிக்கையாளர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி ஓடுறது, பறக்கிறது, தாவுறது என அனைத்தையும் மக்கள் ருசித்து ஒருபுடி புடித்துள்ளது தெரியவந்துள்ளது.

ரூ.75,378க்கு சிங்கிள் ஆர்டர்

ரூ.75,378க்கு சிங்கிள் ஆர்டர்

ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் நபர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. ஆன்லைனில் உணவு டெலிவரி ஊழியர்கள் நகரத்தின் ஒவ்வொரு மூலைகள் முதல் கிராமம் வரை நுழைந்துள்ளதே இதற்கு சாட்சியாகும். இந்நிலையில் தான் ஆன்லைன் டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி இந்த ஆண்டு தனது நிறுவனம் பெற்ற ஆர்டர்கள், வாடிக்கையாளர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி ஓடுறது, பறக்கிறது, தாவுறது என அனைத்தையும் மக்கள் ருசித்து ஒருபிடி பிடித்துள்ளது தெரியவந்துள்ளது.

 ஸ்விக்கி ஒன் சேவை..

ஸ்விக்கி ஒன் சேவை..

மேலும் ஸ்விக்கி ஒன் சேவை மூலம் பெங்களூரில் வசித்து வருபவர்கள் அதிகம் பயனடைந்துள்ளனர். ஸ்விக்கி ஒன் என்பது அந்த உணவு டெலிவரி நிறுவனம் வழங்கும் ஒருவகை சந்தா திட்டமாகும். இதன்மூலம் இலவச டெலிவரி, கட்டண சலுகை உள்ளிட்டவற்றை வாடிக்கையாளர்கள் பெற முடியும். அதன்படி ஸ்விக்கி ஒன் மூலம் பெங்களூரை சேர்ந்தவர்கள் ரூ.100 கோடிக்கும் அதிகமாக சேமித்துள்ளனர். இந்த பட்டியலில் 2வது இடத்திலும் மும்பை, 3வது இடத்தில் ஹைதராபாத், 4வது இடத்தில் டெல்லி உள்ளது. தனிநபராக அதிகம் சேமித்ததில் நபராக டெல்லியை சேர்ந்தவர் உள்ளார். இவர் மட்டும் அதிகபட்சமாக ரூ.2.48 லட்சம் வரை சேமித்துள்ளார்.

 ஒரு நிமிடத்துக்கு 137 பிரியாணி

ஒரு நிமிடத்துக்கு 137 பிரியாணி

அதோடு 2022ல் இந்தியர்கள் ஒரு நிமிடத்துக்கு 137 பிரியாணிகளை ஆர்டர்கள் செய்து முதலிடத்தில் உள்ளனர். அதன்படி வினாடிக்கு 2.28 என்ற அளவில் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 2021ல் ஒரு நிமிடத்துக்கு 115 பிரியாணிகள் ஆர்டர்கள் பெறப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பிரியாணி மீதான மோகம் அதிகரித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

2வது இடத்தில் மசாலா தோசை

2வது இடத்தில் மசாலா தோசை

மேலும் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு வகைகளில் பிரியாணிக்கு அடுத்ததாக மசாலா தேசை 2வது இடத்தை பிடித்துள்ளது. 3வது இடத்தில் சிக்கன் ப்ரைட் ரைஸ் பிடித்துள்ளது. ஸ்நாக் பட்டியலை பொறுத்தமட்டில் 4 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) ஆர்டர்களுட்ன சமோசா முதலிடம் பிடித்துள்ளது.

இறைச்சியில் சிக்கன் முதலிடம்

இறைச்சியில் சிக்கன் முதலிடம்

இறைச்சியை பொறுத்தமட்டில் 29.86 லட்சத்துக்கும் அதிகமான ஆர்டர்களும் சிக்கன் முதலிடத்தில் உள்ளது. மேலும் இறைச்சிuய விரும்பி உண்ணும் நகரங்களின் பட்டியிலில் பெங்களூர் முதலிடத்திலும், 2வது இடத்திலும் ஹைதராபாத்தும், சென்னை 3வது இடத்திலும் உள்ளது. இதுதவிர இத்தாலிய ரவியோலி மற்றும் கொரியாவின் பிபிம்பாப் உள்ளிட்ட உணவுகள் 2022ல் மிகவும் பிரபலமான வெளிநாட்டு உணவுகளாக இருந்ததாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

English summary
It has been revealed that a person living in Bangalore has surprised everyone by purchasing food from Zwiggy for a single order of Rs.75,378. It has also been revealed that Chennai is among the top 3 cities with the highest number of meat-loving customers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X