அப்பா பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் தர முயன்றபோது.. தலையில் மரக்கிளை விழுந்து மகன் பலி.. என்ன நடந்தது?
பெங்களூர்: பெங்களூரில் அப்பாவின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த மகன் ஸ்கூட்டரில் அருகே உள்ள கடையில் இறைச்சி வாங்கி வந்தபோது சாலையோரம் நின்ற மரத்தின் மரக்கிளை திடீரென்று முறிந்து அவரது தலையில் விழுந்தது. இதில் அவர் ‛கோமா' நிலைக்கு சென்று இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூர் ஹனுமந்தரநகரில் உள்ள பிரம்ம சைத்தன்யா கோவில் அருகே வசித்து வந்தவர் அக்சய் சிவராம். இவருக்கு வயது 29. இவர் ராஜாஜி நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் எச்ஆர் பணியில் இருந்தார். இவர் தனது தந்தையின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க முடிவு செய்தார்.

இதையடுத்து கடந்த 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவர் வீட்டில் இருந்தார். அப்போது தந்தைக்கு சமைத்து கொடுத்து சர்ப்ரைஸ் கொடுக்க அவர் நினைத்தார்.
இதற்காக அவர் இறைச்சி கடைக்கு சென்று இறைச்சி வாங்கினார். மதியத்துக்கு ‛லஞ்ச்' மற்றும் இரவுக்கு ‛ஸ்பெஷல் டின்னர்' சமைக்க அவர் நினைத்து இறைச்சி வாங்கி கொண்டு ஸ்கூட்டரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அவர் ஹெல்மெட் அணியவில்லை. அப்போது சாலையோரம் நின்ற மரத்தில் இருந்து திடீரென்று மரக்கிளை முறிந்தது.
அந்த மரக்கிளை மரத்தில் இருந்து சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த அக்சய் சிவராம் தலையில் விழுந்து இரண்டு துண்டானது. இதில் நிலைக்குலைந்து போன அக்சய் சிவராம் ஸ்கூட்டரில் கட்டுப்பாட்டை இழந்தார். ஸ்கூட்டர் அருகே சாலையோரம் நின்ற கார் மீது மோதியது. ஸ்கூட்டரில் இருந்து அக்சய் சிவராம் கீழே விழுந்து துடிதுடித்தார்.
அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகே ஜெயகர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது தலையை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். மொத்தம் 12 இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. அதற்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அக்சய் சிவராம் ‛கோமா' நிலைக்கு சென்ற நிலையில் நேற்று இறந்தார்.
இதுதொடர்பாக அக்சய் சிவராமின் சகோதரர் போலீசில் புகாரளித்தார். அதில் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும் மரக்கிளையை அகற்றவில்லை. இப்போது அது முறிந்து விழுந்து என் சகோதரர் இறந்துவிட்டார்.அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரளித்தார். இதற்கிடையே தான் அக்சய் சிவராம் தலையில் மரக்கிளை முறிந்து விழுவது அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது அந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.
A routine day turned into lifelong pain.
— Mr. Shaz (@Wh_So_Serious) June 20, 2025
5 days in ICU. Then silence.
A falling tree branch shattered 29-yr-old Akshay’s skull into 12 pieces — he was bringing meat for his dad’s birthday dinner. 💔
His family shattered.#Bengaluru #India
pic.twitter.com/ke9nffeXlz












Click it and Unblock the Notifications