பெங்களூர் மெட்ரோ ரயிலில் பிச்சைக்காரரை கண்டதுமே திகைத்த பயணிகள்.. பெங்களூருவாசிகளுக்கு வந்த சந்தேகம்
பெங்களூரு: பெங்களூரு மெட்ரோ ரயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் சென்று வருகிறார்கள்.. இந்நிலையில், மெட்ரோ ரயிலில் பிச்சை எடுத்த நபரால் சக பயணியர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.. அத்துடன் வீடியோவை பார்த்ததுமே மிகப்பெரிய கேள்வியையும், சந்தேகத்தையும் இணையவாசிகள் எழுப்பி வருகிறார்கள். அது என்ன?
ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும் வகையில் இருந்தாலும், பெரும்பாலான மாநிலங்கள் பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றமாகவே கருதப்படுகிறது..

சில மாநிலங்களில் சிறை தண்டனை, அபராதம் என விதிக்கப்பட்டது. அதாவது, பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள் என பொதுமக்களுக்கு இடையூறு மேற்கொள்ளும் வகையில் பிச்சை எடுப்பது என்பது கிரிமினல் குற்றமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அவர்கள் விருப்பத்தின் பெயரில் பிச்சை எடுப்பதில்லை, சூழ்நிலை காரணமாக தான் இத்தகைய மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதனால் பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றமாக அறிவிப்பது என்பது அவர்களை மேலும் அழுத்தம் தர கூடியவையாக மாறும் என்றெல்லாம் பல்வேறு பொதுநல வழக்குகள் சுப்ரீம் கோர்ட் வரை சென்றது நினைவிருக்கலாம்.
ரயிலில் பிச்சை எடுத்தல்
முன்பெல்லாம் ரயில்வே சட்டப்பிரிவுகளின்படி ரயில்களில் பிச்சை எடுத்தால் ஓராண்டு சிறை அல்லது 2000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.. அதேபோல் ரயிலில் புகைப்பிடிப்பதும் குற்றம் என்ற விதிகள் உண்டு. இந்த இரு சட்ட விதிகளிலும் மாற்றங்களைக் கொண்டு வர புதிய சட்ட திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
அதன்படி பிச்சை எடுத்தல் மற்றும் புகைப்பிடித்தல் குற்றங்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படாது. ஆனால் ரயில்களில் யாரும் பிச்சை எடுக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். புகைப்பிடிப்போருக்கு அபராதம் விதிக்கப்படும், ஆனால், வழக்கு தொடரப்படாது என்ற திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.
அழுக்கு டிரஸ் பயணி
அதேபோல பெங்களூரில், மெட்ரோ ரயில்களில் உணவு உண்ணக்கூடாது, புகை பிடிக்கக்கூடாது, கேமராக்களில் படம் எடுக்கக்கூடாது, அநாகரிக செயல்களில் ஈடுபடக்கூடாது, மொபைலில் சத்தம் அதிகமாக வைத்து உபயோகிக்கக்கூடாது, பிச்சை எடுக்கக்கூடாது என்று பல விதிமுறைகள் உள்ளன.
மெட்ரோ ரெயில் நிலையத்துக்குள் பிச்சைக்காரர்கள் அழுக்கு உடையில் செல்லவும் முடியாது.. கடந்த வருடம் பெங்களூர் மெட்ரோ ரயிலில், அழுக்கு சட்டை மற்றும் வேட்டி அணிந்தபடி தலையில் மூட்டையுடன் முதியவர் ஒருவர் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வந்தார்..
அவர் மெட்ரோ ரெயிலில் பயணிக்க வேண்டும் என்று அங்கு பணியில் இருப்போரிடம் சொன்னதற்கு, மெட்ரோ ரெயில் நிலைய பாதுகாப்பு மேற்பாவையாளர், அந்த முதியவரை உள்ளே அனுமதிக்க மறுத்தார்.. மேலும் அவரிடம் கடுமையாக பேசி அங்கிருந்து வெளியேறுமாறு சொன்னார்.. இந்த நிகழ்வு வீடியோவாகவும் வெளியாகி, கண்டனத்தை பெற்றிருந்தது.
மெட்ரோ விஐபிகளுக்கு மட்டுமா
பெங்களூரு மெட்ரோவில் விஐபிகள் மட்டும்தான் பயணிக்க வேண்டுமா? மெட்ரோவில் பயணிக்க ஆடை கட்டுப்பாடு உள்ளதா? என்று பலர் கண்டனத்தை பதிவு செய்தது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், இதே பெங்களூரு மெட்ரோ ரயிலில், மற்றொரு நிகழ்வு நடந்துள்ளது.. ஒரு பிச்சைக்காரர் டிப்-டாப் உடையில் மெட்ரோ மெட்ரோ ரெயிலில் பயணித்து பயணிகளிடம் யாசகம் பெற்றுள்ளார்.. மெஜஸ்டிக் மெட்ரோ ரெயில் நிலையத்துக்குள் புகுந்து யஷ்வந்தபுரத்துக்கு செல்ல டிக்கெட் எடுத்த அந்த நபர், ரெயில் ஏறி பயணத்தை தொடங்கியதும் பயணிகளிடம் பிச்சை கேட்டு யாசகம் பெற்றார்.
துண்டு சீட்டு தந்த பிச்சைக்காரர்
ரயிலில் ஏறியதுமே, அங்கிருந்த பயணிகளிடம் ஒரு துண்டு சீட்டை தந்தார்.. அதில், "நான் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி, எனக்கு உதவி செய்யுங்கள்' என்று எழுதப்பட்டிருந்தது.. அந்த சீட்டை பயணிகளிடம் கொடுத்து, அதன்மூலம் அவர் யாசகம் பெற்றார்.
இதைக்கண்ட மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் அவரை பிடித்து ரூ.500 அபராதம் விதித்தனர். இதற்கிடையே இதை மெட்ரோ ரெயிலில் பயணித்த பயணி ஒருவர் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிடவும், அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
கருப்பு டி-ஷர்ட்
அந்த வீடியோவில், கருப்பு டி ஷர்ட் அணிந்த நபர், சக பயணியரிடம் பிச்சை எடுக்கவும், அனைவருமே அதிர்ச்சி அடைகின்றனர்.
காரணம், மெட்ரோ ரயிலில் டிக்கெட் வாங்காமல் பயணம் செய்ய முடியாது. டிக்கெட் விலையும் 10 முதல் 90 ரூபாய் வரை உள்ளது. அப்படி இருக்கையில், இந்த நபர் எவ்வாறு காசு கொடுத்து டிக்கெட் வாங்கிவிட்டு ரயிலுக்குள் சென்று பிச்சை எடுத்தார் என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications