சொர்க்கத்தின் வாசல் பார்த்தீங்களா.. வானத்தில் தெரிந்தது.. அதென்ன வெளிச்சம்? மலைத்த பெங்களூர்வாசிகள்
பெங்களூரு: பெங்களூரில் கடந்த 3 நாட்களாகவே, ஒரு சம்பவம் பேசுபொருளாகி வருகிறது.. இது தொடர்பான போட்டோக்களும், அதையொட்டிய ஆச்சரியங்களும் இணையத்தை வட்டமடித்தும் வருகின்றன.. என்ன நடந்தது?
இயற்கையின் படைப்புக்களில் மனிதன் தான் சிறந்தது என்பார்கள்.. ஆனால், உண்மையை சொல்லப்போனால், மனிதனை விடவும் சிறப்பான படைப்புகள் ஏராளம் உண்டு.
அவையெல்லாம் இயற்கையின் ஆச்சரியங்களே.. இயற்கையின் அதிசயங்களே.. ஆனானப்பட்ட மனிதனே, ஒரு விஷயத்தில் திகைத்து திக்குமுக்காடி போகிறான் என்றால், அது இந்த இயற்கையின் அம்சங்களை பார்த்துதான்.

இந்த இயற்கை அதிசயம், பூமிக்குள்ளும் நடக்கலாம், நீரூற்றுக்குள்ளும் நடக்கலாம்.. ஜீவராசிகளிடமும் நடக்கலாம். அண்டவெளியான வானத்திலும் நடக்கலாம். சிலசமயங்களில் இவைகள் எல்லாம் மனிதனின் சிற்றறிவையும் தாண்டி போய்விடுகிறது.
ஆச்சரியம்: அப்படித்தான், பெங்களூருவில் வானத்தில் ஒரு அடையாளம் தென்பட்டுள்ளது.. பெங்களூரு ஹெப்பல் மேம்பாலத்திலிருந்து இந்த மாயத்தோற்றம் வானில் தென்பட்டுள்ளது. பார்ப்பதற்கு, கொஞ்சம் பெரியதான வழி அல்லது சாளரம் அல்லது கதவு வடிவத்தில் அந்த காட்சி இருந்தது.. மேகத்துணுக்குகள் உள்ளன.. இதற்கு நடுவில், கட்டம் போல அதாவது சட்டகம் போல ஒரு பொருள் இருக்கிறது.. அதற்கு பின்பக்கம் நிறைய வெளிச்சம் சூழ்ந்துள்ளது.. இருள் பெட்டகத்துக்கு நடுவில் அந்த வெளிச்ச சட்டகம் அமைந்துள்ளது.
இந்த மர்ம மேகத்தை பார்த்ததுமே பலரும் பீதியடைந்துவிட்டனர்.. உடனே சோஷியல் மீடியாவிலும் இதை போட்டோ, வீடியோ எடுத்து போட்டுவிட்டனர்.. வழக்கம்போல் விவாதங்களும் வெடித்து கிளம்பின.

தாறுமாறு விவாதம்: நெட்டிசன்கள் இந்த வீடியோவை பார்த்து, "ஓ.. இதுதான் வானில் தென்படும் நரகத்தின் வாசல் மோசமான அறிகுறி" என்று விமர்சித்தார்கள் சிலர்..
இன்னும் சிலரோ, 'பெரிய பேய் இருக்கிறது.. அதன் சிறு பகுதி மட்டுமே நம்முடைய கண்களுக்கு இப்போது தெரிகிறது' என்று பீதியை கிளப்பினர்.
இன்னும் சிலரோ, 'உயரமான கட்டிடத்தை சூழ்ந்திருக்கும் வெளிச்சம் இது.. அங்கே நைட் பார்ட்டி நடக்கிறது' என்றனர்.
இன்னும் சிலரோ, மேகத்துணுக்கும், வெளிச்சத்தை பிரதிபலிக்கும் நீர்த்துளிகளும் கலந்து இந்த மாதிரியான தோற்றத்தை தரும் என்றனர்.
இன்னும் சிலரோ, ஒருவேளை மனிதர்களை வரவேற்க காத்திருக்கும் ஏலியன்கள் செய்த சேட்டையாக இருக்கும் என்றனர்.
இன்னும் சிலரோ, "இதோ.. ஏசு அழைக்கிறார் என்று பைபிளின் வாசகத்துடன் வந்துவிட்டனர் சிலர்..
இன்னு சிலரோ, "இது சொர்க்கத்தின் வாசல்.. சொர்க்கத்தின் வாசல் இப்படித்தான் தோன்றும்" என்றனர்.
இன்னும் சிலரோ, புரோக்கன் ஸ்பெக்டர் என்ற அறிவியல்பூர்வமான பதத்தை ஆதாரமாக சொன்னார்கள்.

இன்னும் சிலரோ, இப்படித்தான், சில வருடங்களுக்கு முன்பு, சீனாவில் இப்படி தோற்றம் தென்பட்டது. அதற்கு பிறகே சீனாவில் கொரானா பீடித்து, பல சீரழீவுகள் நடந்துவிட்டன.. அதுபோல இப்போதும் ஏதாவது ஆபத்து வருக்கூடும் போல' என்றனர்.
என்னவா இருக்கும்?: இப்படி ஆளுக்கு ஒன்று கொளுத்திப்போட, இணையத்தில் தீயாய் படர்ந்து வருகிற அந்த வானத்து வெளிச்ச வீடியோ... ஆனால் நிஜமாகவே இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஒருவேளை, மழைக்காலத்தில், வெப்பநிலை குறைந்துள்ளதால், இரவு நேரங்களில் மேகக்கூட்டங்கள் கீழ் நோக்கி நகரும்போது, இப்படியான தோற்றத்தை தந்திருக்கலாம் என்கிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications