சாப்பிடுறதுக்கு தனி காசு.. உட்கார்றதுக்கு தனி பணம்.. வருது புது ரூல்ஸ்.. பெங்களூரில்!
பெங்களூர்: பெங்களூரில் (Bengaluru) டீ, சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட்டுகளில் இனி மணிக்கணக்கில் அமர்ந்து பேசினால் Table Charge என்ற பெயரில் அபராதம் விதிக்கும் முறை கொண்டு வரப்பட உள்ளது.
தற்போது நண்பர்கள், உடன் பணிபுரிவோர், காதலர்கள், திருமணமான ஜோடி என அனைவருக்கும் ஒரு ஹோட்டல் அல்லது ரெஸ்டாரண்ட் சென்று டீ குடித்துவிட்டு மணிக்கணக்கில் அமர்ந்து பேசுவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.

இதற்கு பெங்களூருவும் விதிவிலக்கல்ல. குறிப்பாக ஐடி ஊழியர்கள் தங்களின் லேப்டாப்பை எடுத்து வந்து பணியாற்றுகின்றனர். இது ஹோட்டல் - ரெஸ்டாரண்ட் ஊழியர்களுக்கு கூடுதல் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
நீண்டநேரம் அமர்ந்து...
பெங்களூரில் உள்ள ஹோட்டல், ரெஸ்டாரண்ட்டுகளில் ஒரு டீ + சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு மணிக்கணக்கில் நின்று பேசுவது வாடிக்கையான விஷயமாக உள்ளது. டீ, காபி குடிக்க செல்வோரும், சிற்றுண்டி சாப்பிட செல்வோரும் உடனே அங்கிருந்து புறப்பட்டு செல்வதில்லை. அவர்கள் மணிக்கணக்கில் அதே இருக்கையில் அமர்ந்து அரட்டை அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
புதிய ரூல்ஸ்..
இதனால் புதிய வாடிக்கையாளர்களுக்கு இருக்கை பிரச்சனை வருகிறது. இருப்பவரை எழுந்து செல்லுங்கள் என்று கூற முடியாமல் ஊழியர்கள் தடுமாறுகின்றனர். இதனால் கடைக்கு வரும் புதிய வாடிக்கையாளர்களும் இருக்கை கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் தான் இந்த பிரச்சனையை தீர்க்கவும், நோக்கில் ஹோட்டல், ரெஸ்டாரண்ட்டுகளில் புதிய ரூல்ஸ் கொண்டு வரப்பட உள்ளது.
‛டேபிள் கட்டணம்’
அதன்படி ‛டேபிள் கட்டணம்' கொண்டு வரப்பட உள்ளது. ஹோட்டல், ரெஸ்டாரண்டுகளில் வாடிக்கையாளர்கள் மணிக்கணக்கில் அமர்ந்து நேரம் செலவிட்டால் அதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக டீ, சிற்றுண்டி சாப்பிட வருவோர் இருக்கைகளில் அமர குறிப்பிட்ட நேரம் மட்டுமே இலவச அனுமதி என்றும், நீண்ட நேரம் அமர்ந்திருந்தால், அவர்களுக்கு டேபிள் கட்டணம் அல்லது அபராதம் விதிக்க ஹோட்டல் - ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
ரூ.500 முதல் ரூ.1,000
அதன்படி கூடுதல் நேரத்துக்கான அபராத கட்டணம் ரூ.500 முதல் ரூ.1,000 வரை நிர்ணயிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி பெங்களூரு ஓட்டல்கள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பிசி ராவ் கூறியதாவது: ‛‛ஹோட்டல் - ரெஸ்டாரண்ட்டுகளில் டீ, சிற்றுண்டி சாப்பிட பிறகும் பலரும் மணிக்கணக்கில் அமர்ந்து பேசி வருகிறார்கள். இது மற்ற வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.
மேலும் எங்களுக்கு வணிகரீதியாக வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே இனி வரும் நாட்களில் ஹோட்டல்களில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மேஜை கட்டணம் அல்லது அபராத கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளோம்.
எப்போது அமல்?
ரூ.500 முதல் ரூ.1,000 வரை கட்டணம் நிர்ணயிக்க விவாதித்து வருகிறோம். இதில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு, இந்த புதிய நடைமுறையை அதிகாரபூர்வமாக செயல்படுத்த கர்நாடக அரசுக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளோம். அதன்பிறகு இந்த புதிய நடைமுறையை அமல்படுத்துவோம்’’ என்றார்.
ஆனால் உண்மையில் இப்படியான கட்டணம் வசூலிப்பது என்பது சட்டத்துக்கு விரோதமானது என்று கூறப்படுகிறது. இதனால் இப்படியான செயல்முறை பெங்களூரில் அமலுக்கு வருவதில் சிக்கல் வரலாம். இதனால் ஹோட்டல் - ரெஸ்டாரண்ட் உரிமையாளர்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? இந்த புதிய ரூல்ஸ் அமலுக்கு வருமா? இல்லையா? என்பதை அறிய நாம் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications