பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாரத் ஜோடா யாத்திரை நாளுக்கு நாள் வலுவடைகிறது.. மைசூரில் ராகுலுடன் நடைபயணம் செய்த ப சிதம்பரம் ட்விட்

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொண்டு இருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் இணைந்து 5 கிலோ மீட்டர் ப சிதம்பரமும் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது ப சிதம்பரம் பாரத் ஜோடா யாத்திரை நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது என ட்விட் வெளியிட்டுள்ளார்.

அடுத்தடுத்த தோல்விகள் மற்றும் முக்கிய மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து விலகல் போன்ற காரணங்களால் காங்கிரஸ் கட்சி சற்று பின்னடைவை சந்தித்தது.

இதனால் கட்சியை பலப்படுத்தும் விதமாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி பாரத் ஜோடோ என்ற பெயரில் கடந்த மாதம் 7-ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கினார்.

கோபியின் மூக்கை உடைத்த பாக்யா... இப்பவாவது இந்த முடிவுக்கு வந்தீங்களே.. ஆதரவு கொடுக்கும் ரசிகர்கள் கோபியின் மூக்கை உடைத்த பாக்யா... இப்பவாவது இந்த முடிவுக்கு வந்தீங்களே.. ஆதரவு கொடுக்கும் ரசிகர்கள்

நடைபயணம்

நடைபயணம்

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் தூரம் நடைபயணமாக சென்று மக்களை சந்தித்து வருகிறார். தமிழகத்தில் பாத யாத்திரைய முடித்த ராகுல் காந்தி அடுத்ததாக கேரளாவில் பாரத் ஜோடா யாத்திரையை தொடங்கினார். அங்கு மொத்தம் 19 நாட்கள் பாதயாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி இதையடுத்து 3-வது மாநிலமாக கர்நாடகம் வந்தார்.

கர்நாடகத்தில்

கர்நாடகத்தில்

கடந்த மாதம் 30-ஆம் தேதி கர்நாடகத்தில் நுழைந்த ராகுல் காந்திக்கு சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அங்கு 2 நாட்களாக அவர் பாதயாத்திரை மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மைசூரு மாவட்டத்தை அடைந்தார். அங்கு அவருக்கு கட்சியினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

காந்தி சிலைக்கு மரியாதை

காந்தி சிலைக்கு மரியாதை

தொடர்ந்து நேற்று காந்தி ஜெயந்தி என்பதால் ராகுல் காந்தி அங்குள்ள கிரமோத்யோக் மையத்துக்கு சென்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட பல தலைவர்களும் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர். இதையடுத்து ராகுல் காந்தி நேற்று மாலை மைசூரு நகருக்குள் நுழைந்தார். மைசூருவில் நடைபயணம் மேற்கொண்ட போது காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப சிதம்பரம் அவருடன் கலந்துகொண்டார்.

ப சிதம்பரம் நடைபயணம்

ப சிதம்பரம் நடைபயணம்

அவர் ராகுல் காந்தியுடன் நடைபயணம் மேற்கொண்டார். சுமார் 5.5 கிலோ மீட்டர் தூரம் ராகுல் காந்தியுடன் சேர்ந்து ப சிதம்பரம் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது சாலையின் இருபுறமும் மக்கள் அவர்களுக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். வழி நெடுகிலும் மக்களை ராகுல் காந்தியும்ட ப சிதம்பரமும் மக்களை சந்தித்து பேசினார். கட்சியினர் மற்றும் மக்கள் அவர்களுக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

பிரமாண்ட வரவேற்பு

பிரமாண்ட வரவேற்பு

இது தொடர்பக ப சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், ''ராகுல் காந்தியுடன் மைசூரில் நான் 5.5 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டேன். இதில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் பெரிய அளவில் பங்கேற்றது சிறப்பக்குரியது. பாத யாத்திரையின் போது சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஆதரவு அளித்தனர். ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாரத் ஜோடா யாத்திரை நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது'' என்று பதிவிட்டுள்ளார்.

English summary
P. Chidambaram also walked 5 km along with former Congress president Rahul Gandhi who is on a padayatra in Karnataka state. Then P. Chidambaram's Bharat Jota Yatra is getting stronger day by day and has published a tweet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X