கர்நாடகாவில் வெடித்த "ஜட்டி சண்டை".. காங். தீ வைக்க.. பாஜக கொளுத்தி போட! ச்சீ ச்சீ என்ன அசிங்கம் இது
பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ் இடையே ஜட்டி சண்டை ஏற்பட்டுள்ளது. என்னது ஜட்டி சண்டையா என்று கேட்கிறீர்களா? ஆம்.. அங்கு இருக்கும் பாஜக - காங்கிரஸ் நிர்வாகிகள் ஜட்டியை வைத்து சண்டை போட்டு வருகிறார்கள்.
கர்நாடக அரசியல் பொதுவாகவே அவர்களின் சாம்பார் போலவே.. ஸ்வீட் - காரம் கலந்து இருக்கும். சட்டசபையில் இரவு வரை சண்டை போடுவது, சட்டசபையிலேயே எலுமிச்சை வைத்து மந்திரிப்பது, முதல்வரும், எதிர்கட்சித் தலைவரும் மாறி மாறி கண்ணீர்விடுவது என்று பல சுவாரசிய சம்பவங்கள் அங்கு நடந்துள்ளன.
இந்த நிலையில்தான் அங்கு ஜட்டியை மையமாக வைத்து போராட்டம் நடந்து வருகிறது. அங்கு பாஜக ஆட்சிக்கு வந்த பின், கல்வி திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

போராட்டம்
இந்த மாற்றங்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது,. கல்வி திட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு தலையிடுவதாக கூறி காங்கிரஸ் மாணவர் அணி சார்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் காக்கி சட்டையை எரிக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பிசி நாகேஷ் வீட்டிற்கு முன்பாக இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

காங்கிரஸ்
இந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் பல்வேறு இடங்களில் பேரணி செய்தனர். அமைச்சரின் வீட்டை காங்கிரஸ் கட்சியினர் தீ வைக்க பார்க்கிறார்கள் கூறி பாஜகவினர் கோஷங்களை எழுப்பினர். அதோடு காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணியை சேர்ந்த 22 பேர் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டனர். இது காங்கிரஸ் கட்சியினர் இடையே கொதிப்பை ஏற்படுத்தியது.

ஜட்டி
இந்த போராட்டங்கள் குறித்து விளக்கம் அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா, நாங்கள் வெறுமனே காக்கி டிரவுசர்களைத்தான் எரித்தோம். ஆனால் பாஜக திருந்தவில்லை என்றால், மாநிலம் முழுக்க காக்கி டிரவுசர்களையும், ஜட்டியையும் எரிப்போம் என்று கிண்டலாக கூறினார். ஆனால் இவர் சொன்னதை சீரியஸாக எடுத்துக்கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கர்நாடகா முழுக்க பல இடங்களில் காக்கி டிரவுசர்களையும், ஜட்டிகளையும் எரித்தனர்.

போராட்டம்
பாஜக ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறி காங்கிரஸ் கட்சியினர் ஜட்டிகளை எரித்தனர். இதற்கு பதில் அளித்த பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, காங்கிரஸ் கட்சியின் ஜட்டியை மக்கள் உருவிவிட்டார்கள். மத்திய பிரதேசம், அசாம் போன்ற மாநிலங்களில் தோற்று அவர்களின் ஜட்டி லூஸாகிவிட்டது. இதனால் அது ஈசியாக கழன்றுவிடுகிறது. எனவேதான் அதை வைத்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் செய்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

என்ன சண்டை இது?
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜகவினர்,. ஆர்எஸ்எஸ் அமைப்பினர்.. உங்களின் ஜட்டிகளை எரித்துவிட்டீர்கள். உங்களிடம் ஜட்டி இருக்காது என்று கூறி, காங்கிரஸ் கட்சி பெங்களூர் அலுவலகத்திற்கு, ஜட்டிகளை பார்சல் செய்து அனுப்பி வருகின்றனர். பல மாவட்டங்களில் இருந்து பெங்களூருக்கு ஜட்டிகளை பார்சல் அனுப்பி பாஜகவினர் அங்கு போராடி வருகிறார்கள். இரண்டு தேசிய கட்சிகள் இப்படி ஜட்டியை வைத்து சண்டை போடுவது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications