ஹிஜாப் தடை போராட்டம் உச்சத்தில் இருந்த.. குந்தபுராவில் பாஜக முன்னிலை.. கர்நாடகாவில் பரபர.. பின்னணி
பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் ஹிஜாப் விவகாரம் உச்சத்தில் இருந்த குந்தபுரா தொகுதியில் பாஜக வேட்பாளர் கிரண் குமார் கோட்கி முன்னிலை வகித்து வருகிறார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் இன்று வரப்போகும் முடிவுகளில் சாதி, மத பிரச்சனைகள் பெரிய அளவில் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ஹிஜாப் பிரச்சனை அங்கே கவனம் பெற்றுள்ளது.
கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம், முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரி வருவதற்கு ஒருதரப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், ஹிஜாப் அணிவது தங்களது உரிமை என்று இஸ்லாமிய மாணவிகளும் அவர்களுக்கு ஆதரவாக இடதுசாரி, ஜனநாயக அமைப்புகளும் உரிமை குரல் எழுப்பினர்.
இதனால் இரு சமூக மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கே பள்ளிகள் இதனால் போராட்ட களமாக மாறியது. முக்கியமாக இஸ்லாமிய மாணவிகள் சாலையில் அமர்ந்து நீண்ட நாட்கள் போராட்டம் செய்தனர். இது தேர்தலை மனதில் வைத்து பாஜகவால் செய்யப்படுகிறது.
மத பிரிவினை மூலம் வெற்றிபெற இவர்கள் முயற்சி செய்கிறார்கள் என்று கூறப்பட்டது. முக்கியமாக கர்நாடக சட்டசபை தேர்தலில் ஹிஜாப் விவகாரம் உச்சத்தில் இருந்தது குந்தபுரா தொகுதியில்தான். அங்குதான் போராட்டம் தொடங்கியது.
இந்நிலையில், சில நாட்களிலேயே இந்த விவகாரம் கர்நாடகாவில் உள்ள மற்ற கல்லூரிகளிலும் காட்டுத் தீ போல பரவியதுடன், வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின. இதையடுத்து, கல்வி நிலையங்களில் ஹிஜாபை அணிந்து வர கர்நாடாகா அரசு தடைவிதித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து மாணவிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசின் ஹிஜாப் தடை உத்தரவு செல்லும் என்று கூறியிருந்தது. இதை எதிர்பார்க்காத மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
பின்னர் உச்ச நீதிமன்றமும் இந்த தடை செல்லும் என்று அறிவித்தது.
அங்கே கர்நாடக சட்டசபை தேர்தலில் இந்த ஹிஜாப் விவகாரம் பெரிய அளவில் கவனம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் சமயத்தில் பாஜக இந்த விவகாரம் பற்றி பேசாமல் ஒதுங்கியது.
பாஜக மூத்த தலைவர்களே எடியூரப்பா போன்றவர்கள் கூட ஹிஜாப் விவகாரத்திற்கு எதிராக பேசி பல்டின் அடிக்க தொடங்கினர். அங்கே பாஜகவிற்கு எதிராக ஹிஜாப் விவகாரம் திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
முன்னிலை:
இந்த நிலையில்தான் கர்நாடக சட்டசபை தேர்தலில் ஹிஜாப் விவகாரம் உச்சத்தில் இருந்த குந்தபுரா தொகுதியில் பாஜக வேட்பாளர் கிரண் குமார் கோட்கி முன்னிலை வகித்து வருகிறார்.
அங்கே காங்கிரஸ் வேட்பாளர் தினேஷ் ஹெக்டே பின்னிலை வகித்து உள்ளார்.

தற்போதைய நிலவரப்படி கர்நாடகாவில் காங்கிரஸ் 109 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அங்கே பாஜக 87 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
ஜேடிஎஸ் 26 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. கர்நாடக அரசியல் 2024 லோக்சபா தேர்தல், தென்னிந்திய அரசியலை நிர்மாணிக்கும் என்பதால் இந்த தேர்தல் முடிவுகள் அதிக கவனம் பெற்றுள்ளது.
1 மாதமாக நடந்த பிரச்சாரம்.. காரசார விவாதம்.. அரசியல் மோதல்கள் எல்லாம் கர்நாடகாவில் முடிவிற்கு வந்துள்ளது. திருவிழாவிற்கு இணையாக கர்நாடகா சட்டசபை தேர்தல் நிறைவு பெற்றுள்ளது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications