"ரியல்" எச்சரிக்கை மணி காங்கிரஸ் தலைமைக்கு தான்! கர்நாடகாவில் வெற்றி ஓகே.. ஆனா இதை நோட் பண்ணீங்களா
பெங்களூர்: கர்நாடகாவில் எடியூரப்பாவை முன்னிறுத்தாமல் இருந்தது, கடும் அதிருப்தி ஆகியவற்றையும் தாண்டி கூட பாஜக 80 இடங்களை நெருங்குகிறது. இது அரசியல் அரங்கில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் கடந்த புதன்கிழமை சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அங்கே மொத்தம் 224 தொகுதிகள் இருக்கும் நிலையில், அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.
அங்கே 224 தொகுதிகள் இருக்கும் நிலையில், 113 இடங்களில் வெல்லும் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கும். இதனால் அங்கே காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
ஓல்ட் மைசூர் உள்ளிட்ட இடங்களில் ஜேடிஎஸ் கட்சியும் போட்டி தருகிறது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், எக்ஸிட் போல்கள் சிலவற்றில் அங்கே தொங்கு சட்டசபை அமையும் எனக் கூறப்பட்டிருந்தது.

கர்நாடக தேர்தல்: கர்நாடகாவைப் பொறுத்தவரை அங்கே கடந்த 25 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் 1999 மற்றும் 2013 என இரண்டு முறை மட்டுமே ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையைப் பிடித்துள்ளது. அதைத் தவிர 2004, 2008, 2013 என மூன்று தேர்தல்களிலும் தொங்கு சட்டசபையே அமைந்துள்ளது. அப்போது அங்கே ஜேடிஎஸ் கிங் மேக்கராக மாறும். இல்லையென்றால் சுயேச்சைகளின் ஆதரவுடனேயே ஆட்சியை அமைத்துள்ளன.
மேலும், கர்நாடகாவில் கடந்த 40 ஆண்டுகளில் எந்தக் கட்சியும் மீண்டும் ஆட்சிக்கு வந்ததே இல்லை. இரண்டு கட்சிகளும் மாறி மாறியே தேர்தல்களில் வென்றுள்ளன. கர்நாடக மக்கள் கடந்த காலங்களில் எந்தவொரு கட்சிக்கும் தொடர்ச்சியாக வாய்ப்பு அளித்ததே இல்லை. இதன் காரணமாகத் தொடக்கம் முதலே இந்தத் தேர்தலை பாசிட்டிவாகவே காங்கிரஸ் கட்சி அணுகியது.
மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் பெரிய சிக்கலே வலுவான மாநில தலைவர்கள் இல்லாமல் இருப்பது தான். ஆனால், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு இந்தப் பிரச்சினை இல்லை. அங்கே சித்தராமையா- டிகே சிவக்குமார் என இரு வலிமையான தலைமையைக் காங்கிரஸ் கொண்டிருந்தார்கள். அவர்கள் தொடக்கம் முதலே பல வழிகளில் பாஜகவைத் தொடர்ச்சியாக எதிர்த்து வந்தது.
யாருக்கு ஆட்சி: அதன்படி தேர்தலுக்கு முன்பு வெளியான பல சர்வேக்களில் காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி எனப் பல கூறியது. காங்கிரஸ் கட்சிக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்றே கூறப்பட்டது. இருப்பினும், கடைசிக் கட்டத்தில் பாஜக தேர்தல் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியது. இதனால் அங்கே கடைசி நேரத்தில் சில இடங்களில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்குகள் சென்றன. இவை எக்ஸிட் போல்களில் தெளிவாகத் தெரிந்தது.
காங்கிரஸ் முன்னிலையில் இருக்கும் என்ற போதிலும், போட்டி கடுமையாக இருக்கும் என்றே எக்ஸிட் போல்களில் தெரிய வந்தது. இதனிடையே இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை கர்நாடகாவில் நடந்து வருகிறது. ஆரம்பத்தில் தபால் வாக்குகளில் பாஜக முன்னிலையில் இருந்தது. இருப்பினும், தேர்தல் நாளில் பதிவான வாக்குகளைப் பார்க்கும் போது நிலைமை அப்படியே மாறியது. காங்கிரஸ் முன்னிலைக்கு வந்தது,
இப்போது வரை பார்க்கும் போது காங்கிரஸ் 110க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதேநேரம் பாஜக இதில் கிட்டத்தட்ட 80 இடங்களைத் தொட்டுவிட்டது. காங்கிரஸ் கட்சி இதில் வெற்றி முகத்தில் இருந்தாலும் கூட இதுவும் காங்கிரஸ் தலைமைக்கு எச்சரிக்கை மணியாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏன் முக்கியம்: ஏனென்றால் கர்நாடகாவில் கடந்த 40 ஆண்டுகளில் எந்தக் கட்சியும் மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை.. எப்போதும் இரு கட்சிகளும் மாறி மாறியே ஆட்சியைப் பிடித்துள்ளன. இந்தச் சூழலிலும் பாஜக 80 இடங்களில் பிடிக்கிறது. அதிலும் கர்நாடகாவில் பாஜகவின் முகமான எடியூரப்பாவை அவர்கள் இந்தத் தேர்தலில் முன்னிறுத்தவில்லை. மாநில பாஜக அரசு மீதும் கடும் அதிருப்தி நிலவியது.
மேலும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஏகப்பட்ட இலவச அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. இவை அனைத்தையும் தாண்டி பாஜக 80 இடங்களை நெருங்குவது சாதாரண விஷயம் இல்லை. இனியும் அதிருப்தி அலை உள்ளிட்டவை தங்களை வெல்ல வைக்கும் என எதிர்பார்க்கக் கூடாது என்பதையே இது காட்டுகிறது. காங்கிரஸ் தலைமை உடனடியாக தவறை சுதாரித்துக் கொள்ளவில்லை என்றால் பெரிய சிக்கல் தான்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications