பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

”தனித்து போட்டி” பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்.. கர்நாடகாவில் அமித் ஷா நம்பிக்கை!

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகாவில் வரும் 2023 மே மாதத்துக்குள் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக பெங்களூரு வந்துள்ளார். பூத் கமிட்டி நிர்வாகிகள் உடனான கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில், கர்நாடகாவில் காங்கிரஸ் - பாஜக இடையில் நேரடி போட்டி நடப்பதாகவும், யாருடனும் கூட்டணி அமைக்காமல் பாஜக தனித்து மட்டுமே தேர்தலில் போட்டியிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் வரும் 2023 மே மாதத்துக்குள் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. கர்நாடகாவை ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஆட்சியை பிடிக்க தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். ஒருபக்கம் காங்கிரஸ் கட்சி பாரத் ஜோடோ யாத்திரை மூலம் மாவட்ட வாரியாக வாக்கு சேகரிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.

இன்னொரு புறம் பாஜக தரப்பில் ஜன் சங்கல்ப யாத்திரை மூலம் சமூக ரீதியான முக்கிய தலைவர்களையும், மடாலய தலைவர்களையும் சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். அதேபோல் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் மாவட்ட ரீதியாக வாக்கு சேகரித்து வருகிறது. இதனால் மும்முனை போட்டி நிலவி வருகிறது.

ரொனால்டோ கால்பந்து வாழ்வின் சறுக்கல்.. ஐரோப்பா லீக்கில் இருந்து வெளியேறியது ஏன்? ரசிகர்கள் வருத்தம்! ரொனால்டோ கால்பந்து வாழ்வின் சறுக்கல்.. ஐரோப்பா லீக்கில் இருந்து வெளியேறியது ஏன்? ரசிகர்கள் வருத்தம்!

அமித் ஷா பேச்சு

அமித் ஷா பேச்சு

இந்த நிலையில் கர்நாடகாவுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று வந்தார். இன்று பெங்களூருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் பாஜகவின் பூத் கமிட்டி நிலையிலான தலைவர்கள் மற்றும் பூத் கமிட்டி முகவர்களுடனான கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில், கர்நாடகா தேர்தலில் மும்முனை போட்டி நிலவி வருவதாக பலரும் கூறுகிறார்கள். அதனை நான் மறுக்கிறேன். ஏனென்றால் கர்நாடகாவில் நேருக்கு நேராக ஒரே போட்டிதான் நடக்கிறது.

காங்கிரஸ் vs பாஜக

காங்கிரஸ் vs பாஜக

ஏனென்றால் மக்கள் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு வாக்களித்தாலும், அது காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது போலதான். அதனால் இது காங்கிரஸ் - பாஜக இடையிலான நேரடி போட்டி. அதேபோல் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைக்கப் போவதாக சில தகவல் வெளியாகியது.

மக்கள் யார் பக்கம்?

மக்கள் யார் பக்கம்?

இதற்கு பதிலளிப்பதற்காகவே நான் கர்நாடகா வந்துள்ளேன். கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக தனித்து மட்டுமே போட்டியிடும். தனித்து போட்டியிட்டு, தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம். கர்நாடகா மக்கள் முன் இரு வாய்ப்புகள் இருக்கிறது. ஒருபக்கம் தேசபக்தர்கள் அமைப்பான பாஜகவும், மறுப்பக்கம் ஊழல் செய்யும் காங்கிரஸ் கட்சியும் உள்ளது.

மக்களிடம் செல்லுங்கள்

மக்களிடம் செல்லுங்கள்

இதில் தேசபக்தர்களுடன் மக்கள் இருக்கிறார்களா அல்லது நாட்டை பிரிக்க நினைக்கும் சக்திகளுடன் இருக்கிறார்களா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். குஜராத்தில் பாஜக வெற்றிபெற்றதை போல் தனி பெரும்பான்மையுடன் முழுமையான வெற்றியுடன் கர்நாடகாவில் ஆட்சியமைக்க வேண்டும். மக்கள் பாஜகவுக்கு வாக்களித்த தயாராக இருக்கிறார்கள். நாம் தான் மக்களிடம் செல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.

English summary
Assembly elections will be held in Karnataka by May 2023. Union Home Minister Amit Shah has arrived in Bengalore on a two-day visit. Speaking in a meeting with Booth Committee executives, Amit Shah said that there is a direct competition between the Congress and the BJP in Karnataka and that the BJP will contest the elections alone without forming an alliance with anyone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X