கிருஷ்ணர்-ராதை பெயிண்டிங்கில் ஆபாசம்.. அமேசானுக்கு கிளம்பிய கடும் எதிர்ப்பு.. பணிந்த நிறுவனம்!
பெங்களூர்: கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கிருஷ்ணர்-ராதை தொடர்பான ஆபாச பெயிண்டிங் படத்தை விற்க வைத்திருந்ததாக கூறி அமேசான் உள்பட 2 ஆன்லைன் வர்த்தக நிறுவனத்துக்கு எதிராக கடும் விமர்சனம் எழுந்தது. இதையடுத்து ஒரு நிறுவனம் பணிந்து அந்த ஆபாச பெயிண்டிங்கை அகற்றியுள்ளது.
Recommended Video
இந்து கடவுள் கிருஷ்ணர் அவதரித்த நாள் கிருஷ்ண ஜெயந்தி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்தியா முழுவதும் நேற்று கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு பஜனைகள் பாடி கிருஷ்ணனை வழிபட்டனர்.

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்
குறிப்பாக கிருஷ்ணர் அவதரித்த இடமாக கருதப்படும் மதுராவில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் கிருஷ்ண ஜெயந்தி தினத்தையொட்டி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு கிருஷ்ணன், ராதை போல் பாவித்து கொண்டாடி மகிழ்ந்தனர். ஜனாதிபதி திரெளபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

ஆபாசமான பெயிண்டிங்
இந்நிலையில் தான் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் கிருஷ்ணன்-ராதை தொடர்பான பெயிண்டிங்குகள் விற்பனை செய்யப்பட்டன. இந்நிலையில் தான் அமேசான் மற்றும் Exotic India Art ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் சார்பில் கிருஷ்ணர்-ராதை தொடர்பான பெயிண்டிங் ஆபாசமான முறையில் வரையப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்ததாக புகார் எழுந்தது.

2 நிறுவனங்களுக்கு எதிர்ப்பு
இதற்கு இந்து அமைப்பினர், பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த 2 நிறுவனங்களையும் புறக்கணிக்க வேண்டும் என ட்விட்டரில் டிரெண்ட் செய்யப்பட்டது. அதாவது Boycott Amazon, Boycott Exotic India எனும் டேக்குகள் ட்விட்டரில் நேற்று முதல் டிரெண்ட் செய்யப்பட்டன. மேலும் இந்துக்களின் உணர்வை புண்படுத்திய நிறுவனம் மன்னிப்பு கோர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

புகாரால் மன்னிப்பு கோரிய நிறுவனம்
இதற்கிடையே இந்து ஜன்ஜாக்குருதி சமீதி அமைப்பு சார்பில் பெங்களூரில் உள்ள சுப்பிரமணியநகர் போலீஸ் நிலையத்தில் 2 நிறுவனங்கள் சார்பில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் Exotic India Art நிறுவனம் சார்பில் ‛‛எங்களின் கவனத்துக்கு வந்ததை தொடர்ந்து அந்த படம் இணையதளத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தவறு உடனடியாக திருத்தி கொள்ளப்பட்டுள்ளது. உண்மையில் மன்னிப்பு கோருகிறோம். எங்களை புறக்கணிக்க வேண்டாம்''என கூறப்பட்டுள்ளது. இதற்கு ஹிந்து ஜக்குருதி அமைப்பு சார்பில், ‛‛உடனடி நடவடிக்கைக்கு நன்றி. அவதூறான படத்தை நீக்கியதோடு மன்னிப்பும் கேட்டுள்ளதை பாராட்டுகிறோம். இந்து மத உணர்வுகளை பாதுகாக்க உங்கள் தளத்தில் உள்ளவற்றை சரிபார்ப்பீர்கள் என நம்புகிறோம்'' என கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அமேசான் நிறுவனம் சார்பில் இன்னும் எந்த விளக்கமும் தரப்படவில்லை.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications