கத்திரிக்காய்.. பெங்களூரு கத்திரிக்காய்.. தெறித்து ஓடும் மக்கள்.. என்ன காரணம்? கர்நாடகாவில் ஒரு கவலை
கத்தரிக்காய் விலை பெங்களூருவில் உயர்ந்து கொண்டே வருகிறது
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கத்தரிக்காய் என்றாலே கலக்கம் சூழ்ந்துவிட்டது.. அந்த அளவுக்கு அதன் விலை எகிறி உள்ளது..!
கத்தரிக்காய் என்றாலே கர்நாடக மாநிலம்தான் பேமஸ் ஆனது.. பச்சை கலர் கத்தரிக்காய், நீலகலர் கத்தரிக்காய் என வகைகள் உண்டு..
இதில், பச்சை கலர் கத்தரிக்காயை உடுப்பி மட்டி குல்லா என்பார்கள்.. கர்நாடக மாநிலத்தின் உடுப்பியில் உள்ள மட்டி கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வளர்க்கப்படுகிறது...

குறியீடு
இந்த கத்திரிக்காய்க்கு 2011ம் ஆண்டு புவியியல் சார்ந்த குறியீடு வழங்கப்பட்டது. அதேபோல, வாங்கி பாத் சாப்பாடு இங்கு பிரபலம்.. கத்தரிக்காய் சாதத்தைதான் வாங்கி பாத் என்பார்கள்.. அம்மாநில பண்டிகை, விழாக்களில் பெரும்பாலும் இந்த டிஷ் இல்லாமல் சாப்பாடு பரிமாறப்படுவதில்லை.. இந்த கத்தரிக்காய்க்குத்தான் இப்போது டிமாண்டு கூடிவிட்டது.. கர்நாடக மாநிலத்தில் திடீரென கத்திரிக்காய் விலை உயர்ந்துள்ளது..

விவசாயிகள்
அதாவது ஒரு கிலோ கத்தரிக்காய் 100 ரூபாயை கடந்து விற்கப்படுகிறது.. இதனால் மக்கள் பெரும் கவலைக்கு ஆளாகி உள்ளார்கள்.. காரணம், சைவ மற்றும் அசைவ பிரியர்கள் இரு தரப்பினருமே கத்திரிக்காயை பயன்படுத்துவது வழக்கம்.. வாங்கிபாத் போலவே, யெங்காய் என்ற கத்திரிக்காய் வகையும் இங்கு அதிக அளவில் சமையலுக்கு பயன்படுத்துவார்கள்.. ஆனால், சமீப காலமாக விலை உயர்ந்து வருவதால், இல்லத்தரசிகள் மட்டுமல்லாது ஹோட்டல் நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்...

குடை மிளகாய்
கத்திரிக்காயுடன் சேர்த்து முட்டை கோஸ் விலையும் உயர்ந்துள்ளது.. குடை மிளகாய் விலை அதற்கு மேல் உயர்ந்து கொண்டே போகிறது... இதனால் கத்திரிக்காய் வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.. இதனால் மொத்த விலை வியாபாரிகள் கவலைக்கு ஆளாகி உள்ளனர். இதைவிட ஒருபடிமேலேபோய், ஹோட்டல்களில் கத்தரிக்காய் டிஷ்களையே தவிர்த்து விட்டார்களாம்..

சாப்பாடு
ஹூப்பள்ளியில் உள்ள பல ஹோட்டல்களில் கத்தரிக்காய் டிஷ் இப்போது காணப்படுவதில்லை.. இதை பற்றி காய்கறி வியாபாரி ஒருவர் சொல்லும்போது, "பருவ நிலை மாறி விட்டது.. மழைக்காலம் முடிந்தும் முடியாமல் உள்ளது.. மழை இன்னமும் பெய்து வருகிறது.. அதனால் கத்திரிக்காய் சாகுபடி பாதித்துள்ளது... விலையும் உயர்ந்துவிட்டது.. டிசம்பர் 24 முதல் 27-ம் தேதிவரை கத்திரிக்காய் கிலோ 200 ரூபாய் முதல் 220 ரூபாய் வரை இருந்தது..

இல்லத்தரசிகள்
இப்போது ஓரளவு குறைந்தாலும், 100 முதல் 140 ரூபாய் வரை விற்கப்படுகிறது... அதனால்தான் யாரும் வாங்க முன்வரவில்லை... இத்தனைக்கும் இந்த மாதம் நிறைய சுபமுகூர்த்தங்கள்,. விழாக்கள் நடந்தன.. அப்படி இருந்தும், கத்தரிக்காயை வாங்க தயக்கம் காட்டினர்.. ஒருசில பெரிய ஹோட்டல்களில் மட்டும் இப்போதைக்கு கத்தரிக்காய் டிஷ் உள்ளது" என்றார்.. கத்தரிக்காய் பிரியர்கள், இல்லத்தரசிகள், காய்கறி வியாபாரிகள், ஹோட்டல்கள் என மொத்த பேரையும் கத்தரிக்காய் மிரட்டி கொண்டிருக்கிறது..!
-
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications