காவிரியில் காத்திருக்கும் ‘சம்பவம்’: தமிழ்நாட்டுக்கு 2 லட்சம் கன அடிநீரை திறக்கும் கர்நாடகா!
பெங்களூர்: கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி அணைகளில் இருந்து காவிரியில் தமிழ்நாட்டுக்கு 2 லட்சம் கன அடிநீரை கர்நாடகா திறக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகாவின் அனைத்து அணைகளும் நிரம்பிவிட்ட நிலையிலும் தென்மேற்கு பருவமழை இடைவிடாது கொட்டி வருவதால் அணைகளுக்கு வரும் நீரை அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிட முடிவு செய்துள்ளதாம் கர்நாடகா.
கர்நாடகா, கேரளா மாநிலங்களில் காவிரி மற்றும் அதன் துணை ஆறான கபிலா நதி நீர்ப்பிடிப்புகளில் ஒரு மாத காலமாக இடைவிடாமல் பெருமழை கொட்டித் தீர்க்கிறது. இதனால் கர்நாடகாவும் கேரளாவும் பெருமழை, வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

கர்நாடகாவில் அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன. ஆனாலும் பெருமழை கொட்டித் தீர்ப்பதால் அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் கிருஷ்ணராஜ சாகர் (கேஆர்எஸ்), கபினி அணைகளுக்கான நீர்வரத்து காவிரியில் திறந்துவிடப்பட்டு வருகிறது. காவிரியில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 1.05 லட்சம் கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அணைகளுக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால் வினாடிக்கு சுமார் 2 லட்சம் கன அடிநீரை கர்நாடகா திறந்துவிட முடிவு செய்துள்ளது. இதனால் தமிழ்நாட்டின் எல்லையான ஒகேனக்கல் மிகப் பெரும் வெள்ள அபாயத்தை சந்திக்க இருக்கிறது.
மேலு தமிழ்நாட்டின் மேட்டூர் அணையும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருக்கிறது. மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி. தற்போது 118 அடியை தாண்டியிருக்கிறது அணை நீர் மட்டம். மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 12,000 கன அடிநீர் திறக்கப்பட்டது. இன்று கால்வாய் பாசனத்துக்கும் மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. இதனையடுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால் அணையில் இருந்து வினாடிக்கு 75,000 கன அடி முதல் 1.25 லட்சம் கன அடிநீர் வரை திறக்க வாய்ப்புள்ளது.
இதனால் தமிழ்நாட்டின் காவிரி ஆற்றின் கரையோரத்தின் 11 மாவட்டங்களுக்கும் ஏற்கனவே முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள், பாதுகாப்பாக முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டும் வருகின்றனர்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications