தமிழ்நாட்டின் காவிரி உரிமையை காவு எடுக்க கர்நாடகா காங்- பாஜக கூட்டணி? டெல்லி அனுப்பிய 'அஜீத் குழு'!
பெங்களூர்: கர்நாடகா ஆளும் காங்கிரஸ் அரசின் பஞ்சப்பாட்டை நியாயப்படுத்தும் வகையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு, அம்மாநிலத்துக்கு வறட்சியை பார்வையிடும் மத்திய குழுவை அனுப்பி வைத்துள்ளது. தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய காவிரி நீரை கர்நாடகா திறக்காமல் இருக்க மத்திய குழுவை கர்நாடகா அரசு ஆயுதமாக கையில் எடுக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை தராமல் துரோகம் செய்கிறது கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ். தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டிய கேஆர்எஸ் அணையில் 100 அடி நீர் உள்ளது; கபினி அணையிலும் முழு கொள்ளளவை எட்ட 4 டிஎம்சி நீர் தேவை என்பது இன்றைய நிலவரம். ஆனாலும் கர்நாடகாவில் வறட்சி நிலவுகிறது என பஞ்சப்பாட்டை இடைவிடாமல் கர்நாடகா பாடி வருகிறது.

கர்நாடகாவின் இந்த கபட நாடகத்துக்கு ஒத்து ஊதுவதைப் போல மத்தியில் ஆளும் பாஜக அரசு, உடனடியாக அம்மாநிலத்துக்கு ஒரு மத்திய குழுவை அனுப்பி வைத்துள்ளது. கர்நாடகாவின் மொத்தம் உள்ள 236 தாலுகாக்களில் 195-ல் வறட்சி நிலவுகிறது என்பது கர்நாடகாவின் அறிவிப்பு. இதனால் மத்திய குழுவை கர்நாடகாவுக்கு அனுப்ப வேண்டும் என அம்மாநில ஆளும் காங்கிரஸ் அரசு வலியுறுத்தியது. இதனையே தமிழ்நாட்டுக்கு எதிரான நிலைப்பாடாகவும் முன்வைக்கிறது கர்நாடகா.
இந்நிலையில்தான் கர்நாடகாவில் வறட்சி நிலைமையை ஆய்வு செய்ய மத்திய விவசாயத்துறை இணைச் செயலாளர் அஜீத்குமார் தலைமையில் 10 பேர் கொண்ட குழு கர்நாடகாவில் முகாமிட்டுள்ளது. இக்குழு முதல்வர் சித்தராமையாவை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் கர்நாடகாவுக்கு வறட்சியால் ரூ30,432 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது; ஆகையால் மத்திய அரசு ரூ4,860 கோடி நிவாரணம் தர வேண்டும் என சித்தராமையா வேண்டுகோள் விடுத்தார்.
அத்துடன் 123 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவுகிறது. ஒட்டுமொத்தமாக கர்நாடகாவின் அனைத்து தாலுகாக்களிலும் வறட்சி வாட்டி வதைக்கிறது. தென்மேற்கு பருவமழையும் பொய்த்துவிட்டது. இதனால் குடிநீர் பஞ்சம் அபாயம் உருவாகி வருகிறது. விவசாயிகளுக்கான பயிர் இழப்பீட்டு தொகையை அதிகரிக்க வேண்டும் என்றார் சித்தராமையா. இதனைத் தொடர்ந்து மத்திய குழுவின் 10 அதிகாரிகளும் 3 குழுவினராகப் பிரிந்து வறட்சி பாதித்த பகுதிகளை இன்று முதல் ஆய்வு செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications