நோ சிக்னல்.. சந்திரயான் 3 லேண்டர், ரோவரை தொடர்பு கொள்வதில் சிக்கல்.. இஸ்ரோ தீவிர முயற்சி
பெங்களூர்: நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி ஆய்வுகளை முடித்துக்கொண்டு உறக்க நிலைக்கு சென்றிருக்கும் சந்திரயான் 3 பிரக்யான் ரோவரை மீண்டும் உயிர்ப்பிக்கும் பணிகள் தொடங்கி வருகின்றன. இந்நிலையில் லேண்டரையும், ரோவரையும் தொடர்புகொள்ள முடியவில்லை என்று இஸ்ரோ கூறியுள்ளது.
நிலவின் தென் துருவத்தில் உள்ள பள்ளத்தாக்குகளில் பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாமல் இருக்கிறது. இந்நிலையில் இங்கு நீர் இருப்பதற்கான சாத்தியங்களை சந்திரயான்-1 விண்கலம் கண்டுபிடித்து சொன்னது. 312 நாட்களாக நிலவை 3,400 சுற்றுகளை சுற்றிய பின்னர்தான் இதை சந்திரயான் 1 உறுதி செய்தது. அதன் பின்னர் நிலவை யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி தொடங்கியது. இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி அதில் அதன் மூலம் ஆய்வு செய்ய கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ.

ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப தவறால் நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் கட்டுப்பாட்டை இழந்து நிலவில் வேகமாக மோதி உடைந்தது. இருப்பினும் இதனை கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மற்றொரு ரோவரை அனுப்புவது என்று முடிவெடுத்து சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
திட்டமிட்டபடி தனது வேலையை முடித்துக்கொண்ட பிரக்யான் ரோவர், தற்போது உறக்க நிலையில் இருக்கிறது. இதனை மீண்டும் எழுப்பும் பணிகள் நேற்று முதல் தொடங்கியுள்ளன. நிலவை பொறுத்த அளவில் பகலில் 175 டிகிரி செல்ஸியல் வெப்பம் பதிவாகி இருக்கும். இது கொதிநிலையை விட அதிகம். இருப்பினும் இந்த வெப்பத்திலிருந்து ரோவரின் கருவிகளை பாதுகாக்க சில வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால், குளிரிருந்து ரோவரை காக்க நாம் எதையும் செய்யவில்லை. கடந்த 21ம் தேதியுடன் நிலவில் இரவு காலம் முடிவடைந்தது.
21ம் தேதி காலை 10.45 மணியளவில் நிலவில் சூரியன் உதிக்க தொடங்கியது. அன்று முதல் விஞ்ஞானிகள் ரோவரையும், லேண்டரையும் எழுப்ப முயன்று வருகின்றனர். இன்று எப்படியாவது இரண்டையும் எழுப்பிவிடலாம் என்று விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்த நிலையில், இந்த முயற்சி நாளை தள்ளி போயுள்ளது. அதேபோல லேண்டரையும், ரோவரையும் தொடர்புகொள்ள முடியவில்லை என இஸ்ரோ அறிவித்துள்ளது.
அதாவது, "விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் விழித்திருக்கும் நிலையை அறிய, அதனுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை அவர்களிடமிருந்து எந்த சிக்னலும் வரவில்லை. தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் தொடரும்" என்று இஸ்ரோ x சோஷியல் மீடியா தளத்தில் கூறியுள்ளது.
இது குறித்து அறிவியல் வட்டாரங்களில் விசாரிக்கையில், "ரோவரும், லேண்டரும் இன்று உயிர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். இன்று காலை நிலவில் ரோவர் இருக்கும் தென் துருவத்தில் 20 டிகிரி அளவு சூரியன் மேலே வந்திருக்கும். இதே நாளை 40 டிகிரிக்கு மேல் வந்திருக்கும். இப்படி இருக்கையில் இன்று தவறிவிட்டால் அடுத்தடுத்த நாட்களில் அதை உயிர்ப்பிப்பது கடினமாகிவிடும். இதனால் நமக்கு இழப்பு ஏதும் கிடையாது" என்று கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications