இது லிஸ்ட்ல இல்லையே! இதை பாருங்க.. நிலாவில் ஒரு பெங்களூர்? வெளியான தகவல்!
பெங்களூர்: நிலவில் சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கிய இடத்திற்கு பெங்களூர் அல்லது இஸ்ரோ பெங்களூர் என பெயர் வைக்க வேண்டும் என கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
நாம் வாழும் இந்த பூமியின் துணைக்கோளாக இருக்கும் நிலவில் என்னதான் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள உலக நாடுகள் தீவிரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் நிலவின் விணகலத்தை இறக்கி ஆய்வு செய்து வருகிறது. விண்வெளித்துறையில் பல்வேறு சாதனைகள் செய்து வரும் இஸ்ரோவும் சந்திரயான் திட்டங்களின் மூலம் நிலவு குறித்த ஆய்வில் ஈடுபட்டு இருக்கிறது.

கடந்த 2008ல் சந்திராயன் 1 விண்கலத்தை இஸ்ரோ நிலவிற்கு அனுப்பியது. நிலவில் இருந்து அது எடுத்து அனுப்பிய ஏராளமான படங்களின் மூலம் நிலவில் நீர் இருப்பதற்கான ஆதாராங்களை உலகத்திற்கு வெளியிட்டது. அதன்பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு இஸ்ரோ சந்திராயன் 2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. நிலவில் தரையிறங்கும் போது லேண்டர் தொடர்பை இழந்து நிலவின் மீது விழுந்து நொறுங்கியது.
எனினும், சந்திரயான் 2 உடன் அனுப்பப்பட்ட ஆர்ப்பிட்டர் தொடர்ந்து பல்வேறு தகவல்களை அனுப்பி வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் 14 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவியது. இந்த விண்கலத்தில் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் கருவிகள் இணைக்கப்பட்டிருந்தன. 41 நாட்கள் பயணம் செய்த சந்திரயான் 3 விண்கலம், நேற்று முன்தினம் மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
அதில் இருந்த பிரக்யான் ரோவர் சில மணி நேரத்தில் வெளியேறி நிலவின் தரைப்பகுதியில் கால் பதித்தது. தென் துருவத்தில் இதுவரை எந்த நாடும் ஆய்வு மேற்கொண்டது இல்லை. எனவே நிலவின் தென் துருவத்தில் நுழைந்த முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. நிலவில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஆய்வு செய்யும் நாடுகள் பெயர்கள் வைப்பது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் சந்திரயான் 3 விண்கலம் கால் பதித்த இடத்திற்கும் பெயர் வைப்பது குறித்து இஸ்ரோ பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நிலவில் சந்திரயான் தடம் பதித்த இடத்திற்கு பெங்களூர் அல்லது இஸ்ரோ பெங்களூர் என்ற பெயரை வைக்க வேண்டும் என்று கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக கன்னட அமைப்புகளின் ஒன்றான கர்நாடக ரட்ஷின வேதிகை என்ற அமைப்பின் தலைவர் பிரவீன் ஷெட்டியிடம் கேட்ட போது, "சந்திரயான் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்த விஞ்ஞானிகள் 3 பேர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் இஸ்ரோ தலைமையகமும் பெங்களூரில் தான் உள்ளது. எனவே, நிலவின் சந்திரயான் இறங்கிய இடத்திற்கு பெங்களூர் அல்லது இஸ்ரோ பெங்களூர் என வைப்பதே பொருத்தமானதாக இருக்கும்" என்றார்.
கன்னட அமைப்புகளின் இந்த கோரிக்கை தொடர்பாக இஸ்ரோவின் டெலிமெட்ரி மற்றும் டிராக்கிங் கமாண்ட் நெட்வொர்க் (ISTRAK) இயக்குனர் பி.என் ராமகிருஷ்ணாவிடம் கேட்கப்பட்டது. இதற்கு அவர் கூறுகையில், இந்த பெயர்களை கருத்தில் கொள்வோம். உயர் மட்ட அளவில் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும். இது மக்களின் விருப்பமாக உள்ளது. எனவே, அதை செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை.
நிலவில் தடம் பதித்த நான்காவது நாடு இந்தியாதான். கடந்த காலங்களில் பிற மூன்று நாடுகள் பெயர் வைத்துள்ளன. எனவே, கண்டிப்பாக நிலவில் சந்திரயான் தரையிறங்கிய இடத்திற்கு பெயர் வைக்கப்படும். உயர் அதிகாரிகளுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும். தற்போது எங்களிடம் எந்த பெயரும் இல்லை. எனினும் ஆலோசனை செய்து இறுதி முடிவு எடுக்கப்படும்" என்றார்.
முன்னதாக கடந்த 2019- ஆம் ஆண்டும் இது பற்றிய ஆலோசனை நடத்தப்பட்டது. சந்திரயான் 2 விண்னில் ஏவப்பட்டதும் பெயர் வைப்பது தொடர்பான பேச்சு எழுந்ததும், விக்ரம் லேண்டர் முதலில் நிலவில் தரையிறங்கட்டும் அதன்பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார். இந்த திட்டம் பின்னடவை சந்தித்ததால் பிறகு பெயர் வைப்பது குறித்த ஆலோசனையும் கைவிடப்பட்டது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications