மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் திட்டம்.. நான் விடவே மாட்டேன்.. கர்நாடகாவில் மோடி ஆவேசம்
பெங்களூர்: மத அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்கும் காங்கிரசின் திட்டத்தை அமல்படுத்த நான் விட மாட்டேன் என்று பிரதமர் மோடி கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று பேசுகையில் கூறினார்.
முதல் மற்றும் 2 ஆம் கட்ட லோக்சபா தேர்தல் முடிந்துள்ள நிலையில், இன்னும் 5 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 3 ஆம் கட்ட லோக்சபா தேர்தல் வரும் மே 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், பிரதமர் மோடி கர்நாடகாவில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பாகல்கோட்டையில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அரசியல் அமைப்பை மாற்றி எஸ்சி, எஸ்டிக்களின் உரிமையை பறிக்க போவதாக காங்கிரஸ் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது. தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மக்கள் காங்கிரஸ் கட்சியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இனி தாலியை அடகு வைக்க வேண்டாம்.. பெண்களுக்கு ரூ.25 லட்சம் வரை மருத்துவ காப்பீடு! ராகுல் காந்தி உறுதி
அம்பேத்கர், அரசியல் சாசனம் உங்களுக்கு வழங்கிய உரிமையை பறித்து மத அடிப்படையில் உங்களின் வாக்கு வங்கியை பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்கிறது. நாடாளுமன்றத்தில் உள்ள பாஜக எம்பிக்களில் எஸ்சி, எஸ்டி ஓபிசி பிரிவுகளை சேர்ந்தவர்கள் தான் அதிகம். சிறுபான்மையினரின் நம்பிக்கையை பெற எஸ்சி, எஸ்சி, பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டை பறித்து சிறுபான்மையினருக்கு வழங்க காங்கிரசார் விரும்புகிறார்கள்.
இதை நீங்கள் அனுமதிப்பீர்களா?.. நான் இந்த மக்களுக்கு ஒரு உத்தரவாதத்தை அளிக்க விரும்புகிறேன், அதாவது மத அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்கும் காங்கிரசின் திட்டத்தை அமல்படுத்த நான் விட மாட்டேன். உங்களின் உரிமை, உங்களின் இட ஒதுக்கீட்டை காக்க நான் எந்த உச்சத்திற்கும் செல்வேன். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் டெக்னாலஜியை பயன்படுத்தி போலியான வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள். இவ்வாறு மோடி பேசினார்.
3-ம் கட்ட லோக்சபா தேர்தல் வரும் மே 7 ஆம் தேதி நடைபெறுகிறது. 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதில், கர்நாடகாவில் 14 தொகுதிகளும் அடங்கும். இதனால் அங்கு தீவிர பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications