கொரோனா: பச்சை மண்டலங்களில் லாக்டவுன் கட்டுப்பாடுகளை தளர்த்தியது கர்நாடகா- ஷாப்பிங் மால்கள் தவிர!
பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டலப் பகுதிகளில் 14 மாவட்டங்களில் நிபந்தனைகளுடன் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
கர்நாடகாவின் 30 மாவட்டங்கள், கொரோனா பாதிப்பு அடிப்படையில் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. சிவப்பு மண்டலத்தில் 6 மாவட்டங்கள், ஆரஞ்சு மண்டலத்தில் 5, மஞ்சளில் 5, பச்சையில் 14 மாவட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் பெங்களூரு மற்றும் மைசூரு நகரங்கள் சிவப்பு மண்டலத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் பச்சை மண்டலத்தில் இடம்பெற்றிருக்கும் 14 மாவட்டங்களில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் நிபந்தனைகளுடன் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளன. சாம்ராஜ்நகர், கோப்பல், சிக்மகளூரு, ராய்ச்சூர், சித்ரதுர்கா, ராமநகரா, ஹாசன், சிவமோஹா, ஹவேரி, யாத்கிர், கோலார், தேவன்கரே, உடுப்பி மற்றும் கொடகு மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இக்கட்டுப்பாடு தளர்வுகள் இன்று முதல் நடைமுறைக்கு வரும். பெங்களூரு நகரம், பெலகாவி, மைசூரு, விஜயபுரா, பாகல்கோட், கல்புர்கி, பிதார், தக்ஷிண கன்னடா ஆகியவற்றில் கட்டுப்பாடுகள் எந்த வித மாற்றமும் இல்லாமல் தொடரும். இதனடிப்படையில் பச்சை மண்டலப் பகுதிகளில் தொழிற்சாலைகள் இயங்கும், சிறுகுறு தொழில் நிறுவனங்கள் இயக்கப்படலாம், சமூக இடைவெளி, முக கவசம் அணிந்து பணியாற்றும் வகையில் அனைத்து கடைகளும் திறக்கப்படலாம் .
அதேநேரத்தில் ஷாப்பிங் மால்களை பச்சை மண்டலப் பகுதிகளில் திறப்பதற்கு கர்நாடகா அரசு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications