தொழிற்சாலைகள் இயங்கலாம்.. ஐடி நிறுவனங்களில் வீட்டில் இருந்தே வேலை.. கர்நாடகாவில் கட்டுப்பாடு தளர்வு

கர்நாடகாவில் தொழிற் நிறுவனங்களுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் தொழிற் நிறுவனங்களுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கண்டெயின்மெண்ட் சோன் அல்லாத பகுதிகளில் தொழிற் நிறுவனங்கள் இயங்கலாம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Recommended Video

    கொரோனாவால் 160 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்

    கொரோனா காரணமாக நாடு முழுக்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த, நோயை கட்டுப்படுத்தவும் நாடு முழுக்க 40 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    Coronavirus: Karnataka Government eases lockdown for Industries, WFH for IT companies

    இந்த நிலையில் கர்நாடகாவில் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அங்கு கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத ஆரஞ்ச் மற்றும் கிரீன் மண்டலங்களில் ஊரடங்கு தளர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவில் தொழிற் நிறுவனங்களுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    கண்டெயின்மெண்ட் சோன் அல்லாத பகுதிகளில் தொழிற் நிறுவனங்கள் இயங்கலாம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால் இன்னும் மாநிலத்தில் பொது போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்படும் பகுதிகளில் பொதுத்துறை நிறுவனங்கள், பெரிய தொழில் நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவை செயல்படலாம். அதே சமயம் முடிந்த அளவு ஐடி நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

    கர்நாடகாவில் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யாத நிறுவனங்கள் கூட வரும் நாட்களில் செயல்படும்.இந்த நிறுவனங்களுக்கு வரும் மே 4ம் தேதியில் இருந்து அனுமதி வழங்கப்படும். ஆனால் மக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து இருக்க வேண்டும். தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 50% ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்தில் பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும்.

    அதே சமயம் கர்நாடகாவில் மால்கள், சினிமா தியேட்டர்கள் இயங்காது. சலூன்கள் மற்றும் பார்கள் இயங்குவது குறித்து மே 3ம் தேதி முடிவு செய்யப்படும். கட்டுமான பணிகளை குறைவான ஊழியர்களுடன் மெதுவாக தொடங்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கொரோனா காரணமாக 565 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 22 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+